விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
 ................................................................
கொடி - விமர்சனம்
 ................................................................
றெக்க - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :14, நவம்பர் 2012(12:53 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2012(12:53 IST)துப்பாக்கி - நல்லாவே வெடி(நடி)த்திருக்கிறார் விஜய்!ஒவ்வொரு படத்திலும் முக்கிய சமுதாய பிரச்சனைகளை கையிலெடுத்து, அதை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி படத்தில் நமது நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் இராணுவ வீரர்களிடம் மட்டும் இல்லை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதில் பங்கு இருக்கிறது என்பதை துப்பாக்கி படத்தில் உணர்த்தி இருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய விஜய், காஜல் அகர்வால் 
ஜோடியாக நடித்துள்ள படம் துப்பாக்கி. நடிகர்கள் ஜெயராம், சத்யன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ் வில்லன் வித்யுத் ஜம்வால் நடித்திருக்கிறார்.

இராணுவப் பட்டாளத்தில் இருந்துவிட்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பி வரும் விஜய், நாட்டுக்கே அச்சுறுத்தலாக திகழும் ”ஸ்லீப்பர் செல்ஸ்” எனும் தீவிரவாத கும்பலின் தலைவனை  எப்படி அழிக்கிறார் என்பதே கதை. 

இராணுவத்திலிருந்து வந்து இரயில் நிலையத்தில் இறங்கும் விஜய்யை உடை கூட மாற்றாமல் நேராக காஜலை பெண் பார்க்க அழைத்துச் செல்வதிலிருந்து முதல் அரை மணிநேர காமெடி கலக்கல். சாந்தமான தோற்றத்தில் இருக்கும் காஜல் அகர்வாலை பார்த்து வேண்டாம் எனச் சொல்லுவதிலிருந்து, காஜலின் உண்மை முகத்தை பார்த்துவிட்டு மீண்டும் பெண் கேக்கச் சொல்வது என சிறு சிறு இடைவெளிகளில் விஜய்யும், காஜலும் நகைச்சுவை கலாட்டாக்களை நடத்துகிறார்கள்.

தீவிரவாதம், குண்டு வெடிப்பு என நாட்டின் சீரியஸான பிரச்சனைகளை முருகதாஸ் தொட்டிருந்தாலும் இடைஇடையே காஜல் அகர்வாலையும், சத்யனையும் ஃபிரேமின் சரியான இடத்தில் நிறுத்தி காமெடி வெடியை கொளுத்துகிறார். நாட்டைக் காப்பாற்றும் வேலையில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் விஜய்யின் மிலிட்டரி கமாண்டராக வரும் நடிகர் ஜெயராம் விஜய்யின் தீவிரவாத ஒழிப்பிற்கு உதவியாக இல்லாமல், அவரது காதலுக்கு உதவியாக இருப்பது நல்ல டுவிஸ்ட்.விடுமுறை தினங்களிலும் மும்பை போலீஸாக இருக்கும் நண்பன் நடிகர் சத்யனுடன் சேர்ந்து காவல் துறைக்கு நெருக்கமாகவே வலம் வருகிறார் விஜய். காஜல் அகர்வாலுடன் வம்பிழுத்து மோட்டார் சைக்கிள் சாவியை இழக்கும் விஜய்யும், சத்யனும் மாநகரப் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது காணாமல் போகும் பர்ஸை கண்டுபிடிக்க முற்பட்டு பேருந்தில் குண்டு வைத்திருந்த தீவிரவாதியை பிடிப்பதிலிருந்து துவங்குகிறது படத்தின் மெயின் ஸ்டோரி. 

விஜய் துரத்திப் பிடித்த தீவிரவாதி பல வல்லரசு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழும் “ஸ்லீப்பர் செல்ஸ்” எனப்படும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் கீழ் இயங்கும் தீவிரவாதி என்பது தெரியவர களத்தில் இறங்குகிறார் விஜய். மருத்துவமனையிலிருந்து தப்பித்த தீவிரவாதி விஜய் வீட்டில் இருப்பதும், அவனை வைத்து விஜய் மும்பையில் நடக்கவிருந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுப்பதும் விறுவிறுப்பான காட்சிகள். 

விஜய்யின் திட்டத்தால் கொல்லப்படும் 12 “ஸ்லீப்பர் செல்ஸ்”களுக்கு கட்டளை கொடுக்கும் தீவிரவாதி வித்யுத் ஜம்வாலின் தம்பியும் அந்த கும்பலில் இறந்து போவதால் விஜய்யை பழிவாங்க வித்யுத் மும்பைக்கு வருவதில் துவங்கும் படத்தின் வேகம் பாடல்களினால் சற்று தடைபட்டாலும் மறுபடியும் வேகம் பெறுவது ஆக்‌ஷன் காட்சிகளின் உதவியுடன் தான். ஹீரோவும், வில்லனும் ஒருவருக்கொருவர் எதிரி யார்? எனத் தெரியாமலேயே தேடிக்கொண்டிருப்பது ஸ்வாரஸ்யமான புதிய ஐடியா. தீவிரவாதிகள் கொலையில் ஈடுபட்ட இராணுவ வீரகளின் பட்டாளத்தில் இருந்தவர்களின் ஒவ்வொருவர் தங்கையாக தீவிரவாதிகள் கடத்தும் போது விஜய்யின் தங்கைகள் கவனத்திற்கு வந்து மறுபடியும் தங்கச்சி செண்டிமெண்டா? என ’உச்’ கொட்டுவதற்குள் விஜய் தான் அவர் தங்கையை அனுப்பிவைத்தார் என்பது தெரியவர முருகதாஸுக்கு ஒரு அடடே!

தீவிரவாதியின் சதியால், அவர்களின் வலையில் மாட்டிக்கொள்ளும் விஜய் எப்படி தப்பிக்கிறார்? ”ஸ்லீப்பர் செல்ஸ்”-ஐ முழுவதும் அழித்துவிட்டாரா? நீ எனக்கு வேண்டாம் என சொல்லிவிட்டு வந்த காஜலுடன் விஜய்க்கு திருமணம் நடந்ததா? என்பதே கிளைமேக்ஸ். 

விஜய்யின் நடிப்பை பொறுத்தவரையில் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. ஆர்ப்பாட்டம் இல்லாத சண்டைக்காட்சிகள், அலட்டல் இல்லாத ஸ்டைலிஷ் டான்ஸ், நகைச்சுவையான காதல் என முற்றிலும் புதிய விஜய்யாக வலம் வருகிறார் துப்பாக்கியுடன். விஜய்யின் கடின உழைப்பிற்கு கிடைத்த நல்ல ரிசல்ட்.வித்யுத் ஜம்வால் சைலண்ட் வில்லனாக மறுபடியும் தனது முத்திரையை பதித்திருக்கிறார். 

காதல், நகைச்சுவை, நடனம் என்பதை மட்டுமே செய்து கொண்டிருந்தாலும் காஜல் இல்லாத ஃபிரேமை விரல் விட்டு எண்ணி விடலாம். காஜல் அகர்வாலின் கிளாமரான உடைத்தோற்றம் சந்தோஷ் சிவனின் கேமரா உதவியால், இருந்தும் இல்லாமல் போகிறது. காஜல் அகர்வால் தானாக முன்வந்து கேட்டும் கடைசி வரை விஜய் லிப்-லாக் கிஸ் அடிக்காதது படத்தில் காஜலுக்கு வருத்தமோ இல்லையோ ரசிகர்களுக்கு வருத்தம். 

”1000 பேரை சாகடிக்க அவன் தன் உயிரையே கொடுக்க தயாரா இருக்கும் போது, 1000 உயிர காப்பாத்த நாம நம்ம உயிர குடுக்குறது தப்பே இல்லை” எனும் ஒரே ஒரு பஞ்ச் வசனம் தான் படத்தில் விஜய்க்கு.

ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை சில சமயங்களில் படக்காட்சியை ஓவர்டேக் செய்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளின் பின்னணி இசை கிளாஸ்.முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு என்பது நினைவில் இருந்தபடியே இருக்கிறது. பாடல் காட்சிகளின் காட்சிப்பதிவுகளும், சாதாரண சண்டைக்காட்சியைக் கூட பிரம்மாண்டமாக காட்டியிருப்பதும் பிரம்மாதம்.

படத்தின் முதல் அரைமணி நேரத்தில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து கதாபாத்திரங்களும் கடைசி அரைமணி நேரம் வரை வந்து செல்வது படத்திற்கு பலம். ஒவ்வொரு காட்சியும் படத்திற்கு தேவையான காட்சிகள். ஏ.ஆர்.முருகதாஸுக்கு அடுத்த இந்தி படம் ரெடி. 

இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த படத்தை அர்ப்பணம் செய்துள்ளனர்.

துப்பாக்கி - நல்லாவே வெடி(நடி)த்திருக்கிறார் விஜய்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [55]

Name : பாலாஜி Date :9/25/2013 12:17:54 PM
விஜய்,முருகதாஸ் கூட்டணி இந்திய சினிமாவில் ஒரு இரட்டை மைல் கல்.
Name : sathish Date :12/11/2012 6:43:35 PM
ya...its good film......vijay kuithu kandippa milestone....i like this film
Name : balaji Date :11/29/2012 9:33:54 AM
விஜய் ஒரு மாஸ் ஹீரோ, எ.ஆர்.முருகதாஸ் ஒரு திரில்லர் டைரக்டர், ஹாரிஸ்ஜெயராஜ் ஒரு க்லஸ்ஸிகல் மியூசிக் டைரக்டர்,துப்பாக்கி ஒரு அதிரடி சரவெடி ஸ்பெஷல் தேங்க்ஸ் டு தளபதி
Name : balaji Date :11/29/2012 9:09:27 AM
thupaki oru nalla mass movie thalaiva u r greate
Name : Kassim Date :11/24/2012 3:47:54 PM
தங்கள் நாட்டு மருந்துகளை விற்க வெளிநாடுகளிள் விலங்களின் மூலம் நோய்யை பறப்பும் சதியை 7ஆம் அறிவில் காட்டிய முருக்தாஸ்க்கு, தங்கள் நாட்டு ஆயுதங்களை விற்க முஸ்லிம்களை தூண்டி, முஸ்லிம்களையும் அழித்து தங்கள் நாட்டு ஆயுதங்களை பிற நாடுகளில் விற்று பணம் பார்க்கும் மிக பெரிய நாடுகளின் வேசம் தெரியவில்லையா....
Name : Mohideen Date :11/20/2012 4:42:51 PM
கிருஸ்தவர்கள் சேர்ந்து முஸ்லிம்களை கேலி செய்யும் யுரேப்பியர்களின் பழக்கம், தமிழ் நாட்டிலும் துடங்கி விட்டது, இரண்டு கிருஸ்தவர்களும் சேர்ந்து நன்றாக முஸ்லிம்களை வருத்தப்பட வைத்துள்ளார்கள், இது எந்த நாட்டில் இருந்து வந்த துப்பாக்கி.......
Name : RAJKUMAR Date :11/18/2012 11:59:36 PM
துப்பாக்கி ஒரு நல்ல படம். விஜய் அடுத்த மாஸ் ஹிட் படம். நன்றி டு விஜய்.
Name : mithun Date :11/18/2012 9:52:58 PM
சூப்பர் அடுத்த சூப்பர் ஸ்டார் எங்க தளபதி துப்பாக்கி சரவெடி
Name : Anusan Date :11/18/2012 1:48:33 PM
இது டேஞ்சர் மென் படத்த பார்த்து கொப்பி அடிச்சது
Name : shagulhameed Date :11/18/2012 11:02:20 AM
படம் ஷி சுத்த bour
Name : abdulrahim kadayanallur Date :11/18/2012 10:07:36 AM
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறத
Name : tamilnambi Date :11/17/2012 3:54:59 PM
பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் வாழ்பவர்கள் இந்தியாவில் வாழ்வதை போல் நிம்மதி வாழ்க்கையா வாழ்கிறார்கள் இங்கே மனைவி தாய் குழந்தைகள் சகோதரிகள் முழு பாது காப்போடு மரியாதையாக அல்லவா வாழ்கிறார்கள் - கருவறைக்குள் தன்னை சுமந்து கொண்டு இருக்கும் தாய் அழிந்துவிட்டால் நல்லது என்று குழந்தை நினைத்தால் விளைவு - தான் பிறந்து வாழும் நாடு அழிந்து போகவேண்டும் என்று நினைப்பவன் மனித இனமே இல்லை
Name : tamilnabi Date :11/17/2012 3:49:52 PM
பிறர் மனதை புண் படுத்திவிட்டதாக சொன்னவுடன் மன்னிப்பு கேட்டு விட்டார்கள் அந்த பகுதிகளை நீக்கிவிட்டார்கள் இது மனித பண்பு - ஆனால் சில மிருகங்கள் இந்தியாவிற்குள் வந்து குண்டு வைத்துவிட்டு செல்வதும் பல உயிர்களை பலிகொல்வதும் இன்னும் இந்திய எல்லையில் முகாம் இட்டுக்கொண்டு ஒழிந்து வந்து நாசவேலை செய்து வருகிறதே இந்த மிருகங்களை யார் தடுப்பது - இந்த ஆண்மை இல்லாத ஜென்மங்கள் துணிவிருந்தால் இந்தியாவோடு நேரடியாக போர் புரிய வேண்டியது தானே -
Name : Sasikumar Date :11/17/2012 12:50:23 PM
Fantastic Film...... Good Story...
Name : RAJA Date :11/17/2012 12:25:10 PM
இங்கு ஒரு சிலர் எதோ நாட்டு பற்று உள்ள படம் அது இது என்று கதை விடுகிறார்கள் ,அப்படி எல்லாம் ஒன்னும் பெரிதாக இல்லை ,கேட்டல் ஒரு சீனியர் ஆபீசெரையை கேவலபடுத்தி நகைச்சுவை தான் பண்ணி உள்ளார்கள் ,இது ஒரு சாதாரண போர் அடிக்காமல் செல்லும் படம் விஜய்க்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் பேர் சொல்லும் படியான படம் ,விஜய் இது போல் அடக்கி வாசித்து கதைஅம்சம் உள்ள படங்களில் நடித்தால் இது தொடரும்.அவ்வளவுதான் அதை விட்டுவிட்டு நாட்டு பற்று இந்த படத்தை பிட்க்கதவர்கள் நாட்டு பற்று இல்லாதவர்கள் என்று சொல்வது பிதற்றல்
Name : nazeer-malaysia Date :11/17/2012 11:26:01 AM
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.
Name : dinesh Date :11/16/2012 5:26:48 PM
துப்பாக்கி படம் இந்திய அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஆனால் திரைபடத்தில் முஸ்லிம்கலை தவறாக சித்தரித்துள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் அனைத்தும் தவறானதாகும். ஒரு சிலர் படம் நன்றாக இல்லை என்றும் கூறி வருகின்றனர் உண்மையில் இந்தியாவின் மீது நாட்டுப்பற்று உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் துப்பாக்கி படம் கண்டிப்பாக பிடிக்கும் படம் பிடிக்காதவர்கள் உண்மையில் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்
Name : mahisa Date :11/15/2012 8:23:38 PM
SUPPER;; am waiting ur next film
Name : dharma Date :11/15/2012 7:44:31 PM
aருமையான படம். நான் இன்னும் படம் parklaa thansk* regards dharma(dce)
Name : Sans Date :11/15/2012 5:42:45 PM
முருகதாஸ் இயக்கத்தில் முத்தாய்பாய் ஒரு படம் - விஜயின் துப்பாக்கி.
Name : Vengachellam.V Date :11/15/2012 5:32:19 PM
Pavam vijay pavam mugathash vettripatamunu ippadi mokka movie. patam parkamal iruppathu nallathu (patatha partha nangalum pavam and partha anaivarum pavam) detekate sankarthatha(sabari) 60... Film por
Name : p.vijay Date :11/15/2012 3:13:45 PM
நான் தளபதி ரசிகன் பெரிய Action படம் சூப்பர் நாட்டு பற்று உள்ள படம்
Name : karthi Date :11/15/2012 1:10:15 PM
தேச பற்று உள்ள, illatha ஓவரு மனுசனுக்கு துப்பாக்கி ஒரு பெரிய கிபிட் thankyou anna
Name : saravanakumar Date :11/15/2012 11:05:08 AM
துப்பாக்கி படம் blockbuster ஆகீருக்கிறது அஜித்பான்ஸ் வயிறு எரிகிறது தளபதி கலக்கிடீங்க
Name : K.rajaculeswara Date :11/15/2012 9:26:49 AM
சூப்பர் துப்பாக்கி.பிரோம் டுடே யு ஆர் Super பவர் Star.கீப்.இட் Vikar
Name : K.rajaculeswara Date :11/15/2012 8:14:30 AM
My விஜய் யு ஆர் Super பவர் Star பிரோம் Germany.
Name : suresh Date :11/15/2012 7:56:59 AM
பிரம்மாதம்
Name : Suntharapandi.N Date :11/15/2012 7:29:21 AM
Thuppaki film 2.5second'la solra story'a murugadas 2.30time'la sollirukar.. Intha mathiri mokka(story) film tamil'la yerkanave vanthurutchu... Film result_very por sumar than... One requst (yarum theare'ku poi money'a west panna vendam) by UNGALIL ORUVAN...
Name : k.veerasamy Date :11/15/2012 6:04:26 AM
இந்த ஆண்டின் படுமோசமான படம். இக்கதையில் பலமுறை அர்ஜின் அவர்களும்கேப்டன் அவர்களும் நடித்து (அடித்து )விட்டார்கள். படஆரம்பக்காட்சி " தில்" படத்தின் அப்பட்டமான காப்பி. கதையும் வசனமும் பல பழைய படங்களை நினைவூட்டுகின்றன. நக்கீரன் மனசாட்சியோடு விமர்சனம் எழுத வேண்டும்.7ஆம்அறிவுக்கு மசாலா கலவை பத்தாது என்று முதல் நாளே எழுதி ஆப்பு அடித்தீர்கள். ஆனால் உலகிலேயே மட்டமான படத்தை வரிந்து கட்டிவிமர்சனம் செய்கிறீர்கள். என்ன நியாயம்.? மனசாட்டியைத்தொட்டுக்கூறுங்கள் இது தரமான படமா?
Name : thas Date :11/15/2012 5:11:22 AM
விஜய் u r தி கிங்
Name : vignesh Date :11/15/2012 3:09:02 AM
vijay padathuku nakkeeranla nalla review varadhe elumalayan punniyam.very bore'nu comment anuppi 7,8 elumichampalatha vera pulinjutudu poreengale.nalla padaipa paraatungappa.
Name : tharun Date :11/15/2012 1:05:50 AM
ஓவர் பில்(லா)டப் பப்ளிசிட்டி இல்லாம வந்து ஹிட் குடுத்த விஜய் அண்ட் முருகதாஸ் கூட்டணிக்கு எனது வாழ்த்துக்கள் திஸ் இயர் தொடர் தோல்வி படங்களுக்கு துப்பாக்கி முற்று புள்ளி வைத்திருக்கு. இதுதான் தமிழ் சினிமாக்கு விஜய் போல ஒரு மாஸ் ஹீரோ தேவை தலைவா நீ சூப்பர் ஸ்டார்
Name : vetri-muscat Date :11/14/2012 9:35:30 PM
குண்டு ( கதை ) இல்லாத துப்பாகியால் என்ன பயன்?
Name : R.Bharanitharan Date :11/14/2012 8:55:22 PM
OVER MASALA MOVIE.SONGS SPEED BREAKS FOR THIS MOVIE.
Name : dinesh Date :11/14/2012 8:15:49 PM
துப்பாக்கி படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சரவெடி தீபாவளி இப்படிக்கு ரசிகன் பாண்டியன்-தினா
Name : koilraj s Date :11/14/2012 7:15:57 PM
இதைத்தான் எதிர்பார்த்தோம் .நல்ல ஒரு விமர்சனத்தை அளித்துள்ளீர்கள் .நடிகர் விஜய்மேலும் சாதனை புரிய வாழ்த்துகிறோம் .தீவிரவாதிகள் இஸ்லாமியார்களாக இருப்பது தானே உலகம் முழுவதும் உள்ளது .இதனை இஸ்லாமியர்கள் கண்டிப்பார்களா ?விஜய் யை கண்டித்து என்ன பயன் ?நல்லபடம் இது இந்தியர்க்களுக்கானது .
Name : poovalingam Date :11/14/2012 6:47:47 PM
தல அளவுக்கு ஸ்டைல் இல்லை சூப்பர் ஸ்டார் எப்பவும் அஜித் தான் சோ விஜய் நல்ல குடும்ப படமா நடிக சொல்லூங்க சார்
Name : muthalagan Date :11/14/2012 6:40:47 PM
விஜய்க்கு செட் அகலை
Name : MICHEALIN Date :11/14/2012 6:08:50 PM
தளபதி பின்னிடீங்க போங்க........................
Name : ANTONY PACKI Date :11/14/2012 6:02:21 PM
தல தளபதி பின்னிடிங்க .... நன்றி முருகதாஸ்.....
Name : karthi.spm Date :11/14/2012 5:29:47 PM
ஆருமையான படம்.
Name : karthik Date :11/14/2012 5:13:41 PM
வெரி போர்....
Name : Kesavan Date :11/14/2012 4:45:49 PM
படம் சுமார்தான் பாடல்கள் செம போர். இது முழுக்க முழுக்க எ.ர.முருகுதாஸ் படம்
Name : velsakthi Date :11/14/2012 4:01:03 PM
தலைவா நீ ஆல்வேஸ் சூப்பர் ஹீரோ உனக்கு மைனஸ் நல்ல டைரக்டர் இல்ல பட் இந்த படத்துக்கு அப்றம் நீ சூப்பர் ஹீரோ தா ,,,,, முருகதாஸ் சார் கு எங்களது அன்பார்ந்த நன்றி
Name : MEENAKSHI Date :11/14/2012 3:49:01 PM
படம் ரொம்ப சூப்பர் எங்கள் தலைக்கு இது வெற்றி படமாக அமைய வாழ்த்துகள். முருகதாஸ் விஜய்க்கு கொடுத்த சூப்பர் ஹிட் பிலிம்
Name : Gopal Date :11/14/2012 3:48:15 PM
படம் சுப்பர்.... வெரி குட் பிலிம் A.R. முருகதாஸ் . விஜய் நடிப்பு சூப்பர்... விஜய் ரசிகர் மட்டும் இல்லாமல், அனைவருக்கும் பிடித்திருக்கும் ஒரு வெற்றி படம்...
Name : Mohamed Irshath H Date :11/14/2012 3:43:57 PM
விஜய் நடித்த முதல் கிளாஸ் மூவி. ஹட்ஸ் ஆப் டு எ.ஆர். முருகதாஸ்.
Name : rajesh Date :11/14/2012 3:31:49 PM
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறத
Name : deepak Date :11/14/2012 3:27:03 PM
சுபெர்ப் மொவயே ,ஒன்சே அகின் விஜய் ராகிங் பாசக் டு தமிழ் சினிமா,,,,,,,இ என்ஜோஎத் கம்ப்லேடேலி இன் பிரஸ்ட் டே பிரஸ்ட் சாஸ்,,,,,,,தேங்க்ஸ் டு ஆல் டீம் மீட்ஸ் ஒப் துப்பாக்கி ,ஸ்பெஷல் தேங்க்ஸ் டு முர்கதாஸ் அண்ட் விஜய் ,
Name : Maha Date :11/14/2012 3:16:51 PM
thupppaki is nice film.all r watch it.
Name : Tharshan Date :11/14/2012 3:14:57 PM
படம் சூப்பர்; தலைவா யூ ஆர் கிரேட்
Name : saravanan Date :11/14/2012 2:47:35 PM
படம் சூப்பர் விஜய் நல்ல நடிப்பு .ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி.
Name : kalpana Date :11/14/2012 12:56:17 PM
முருகதாஸ் தனது நல்ல பேரை இந்த மோசமான படத்தின் மூலம் கெடுத்து கொண்டார் ... விஜய் இந்த படத்திற்கு பொருத்தமானவர் இல்லை என்பது எனது கருத்து
Name : tamilan Date :11/14/2012 12:51:48 PM
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.
Name : kumaravel Date :11/14/2012 12:49:19 PM
படம் சுமாராகத்தான் இருக்கிறது