ஸ்பெஷல்

தல ரசிகரா? தளபதி ரசிகரா? – விஜய் சேதுபதி நக்கல்!
......................................
வலியவன் - வென்றானா? தோற்றானா? (விமர்சனம்)
......................................
CSK (சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) - விமர்சனம்!
......................................
கமலிடம் மன்னிப்பு கேட்ட ஆமிர் கான்! நடந்தது என்ன?
......................................
படத்தின் ரிலீஸ் என் கையில் இல்லை - கமல்!
......................................
தேசிய விருதுகள் 2014!
......................................
கள்ளப்படம் - விமர்சனம்!
......................................
இளம் நடிகர்களுக்கு சிவாஜி சொல்லும் கருத்து !
......................................
ராஜதந்திரம் - விமர்சனம்!
......................................
மகாபலிபுரம் - விமர்சனம்!
......................................
மணிரத்னம் ஆடி ஜெயிக்கிற களம் - வைரமுத்து!
......................................
எனக்குள் ஒருவன் - ஒரு பார்வை!
......................................
’கொம்பன்’ கார்த்தியின் பயம் - தயக்கம் - துணிவு!
......................................
காக்கி சட்டை - விமர்சனம்!
......................................
விஜய்யின் ஆதங்கம்! சந்தோஷம்!
......................................
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் - விமர்சனம்!
......................................
இசை - விமர்சனம்!
......................................
டூரிங் டாக்கீஸ் - விமர்சனம்!
......................................
யார் ஷமிதாப்? என்ன செய்திருக்கிறார்கள்?
......................................
தொட்டால் தொடரும் - விமர்சனம்!
......................................
மருதநாயகம் - வாமமார்க்கம் ஒன்றா? கமல் விளக்கம்!
......................................
ஐ - பிரம்மாண்டம் இல்ல, அதுக்கும் மேல!
......................................
சமந்தா - கவர்ச்சிப் ’பின்னணி’ - கவர்ச்சிப் போட்டி!
......................................
அஜித்தின் முடிவு! ரசிகர்கள் அதிருப்தி!
......................................
விக்ரம் ஒரு பைத்தியம் - ஷங்கர் ஆவேசம்!
......................................
எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால் ஆவேசம்!
......................................
ஹன்ஸிகாவின் கிளாமரும் இரண்டு கோடியும்!
......................................
பிசாசு - பேரன்பு!
......................................
பொங்கலுக்கு சூர்யா ‘மாஸ்’ ஸ்பெஷலும் உண்டு!
......................................
கே.பாலச்சந்தர் கமலிடம் என்ன பேசினார்?
......................................
ரசிகனே வேண்டாம்! விஜய் தடாலடி!
......................................
இசை விழா அல்ல! பட்டய கிளப்பிய திருவிழா!
......................................
இளம் காதலர்களுக்கு ‘ஆங்கிரி பேர்ட் பெண்ணே’!
......................................
லிங்கா - ஒரு பார்வை!
......................................
’நம் நட்புக்கு வாழ்த்து’ - ரஜினிக்கு கமல் வாழ்த்து
......................................
ஜெயப்பிரதாவுக்கு ரஜினி செய்த உதவி!
......................................
லிங்கா பட ரிலீஸ் பிரச்சனை! கோர்ட் தீர்ப்பு!
......................................
லிங்கா ரிலீஸ் தியேட்டர்கள் விவரம்!
......................................
தமிழகத்தை தாக்கியுள்ள ‘லிங்கா ஃபீவர்’!
......................................
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாகிறது!
......................................
ஏன் இந்த கிண்டல்? லிங்குசாமி வேதனை!
......................................
ர - பேய் இருக்கா? இல்லையா?
......................................
அஞ்சலியின் சூழ்ச்சி! ஆத்திரத்தில் அனுஷ்கா
......................................
நானும் ரௌடி தான் - பரபரப்பில் படப்பிடிப்பு!
......................................
மோடியின் பம்மாத்து வேலை! அரசியல் பேசிய அமீர்!
......................................
’எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது’ - சிம்பு!
......................................
காவியத்தலைவன் - விமர்சனம்!
......................................
அசால்ட் பேரரசு! உஷார் பார்த்திபன்!
......................................
மகன் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா!
......................................
கஷ்டப்பட்டேன்னு புலம்பாதிங்க - விஜய் சேதுபதி
......................................

வரலாறு படைத்த தமிழ்க் கலைஞர்கள் : கட்டுரை 11

இரட்டையர்கள் கிருஷ்ணன்-பஞ்சு

  திரைக்கு வந்து 60 ஆண்டுகளாகியும் இன்றும் பேசப்படும் தமிழ்ப்படங்களின் வரிசையில் பராசக்தியையும் ரத்தக்கண்ணீரையும் தவிர்க்கவே முடியாது. முதல் படத்திற்கு கலைஞர் திரைக்கதை-வசனம், இரண்டாவது படத்திற்கு திருவாரூர் தங்கராசு கதை-வசனம், பராசக்தியில் சிவாஜி தன் அபார நடிப்பினாலும் வசன உச்சரிப்பாலும் அசத்தினார். ரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதா தனக்கேயுரிய நக்கல்-நையாண்டி நடிப்பால் கலக்கினார். இவர்களைப் பற்றியெல்லாம் நிறைய பேசப்படுகின்றன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழ்த் திரையுலகின் இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு. அதிகம் பேசப்படாத சாதனையாளர்களில் இவர்கள் இருவரும் அடக்கம்.


பஞ்சு என்கிற பஞ்சாபகேசனுக்கு சொந்த ஊர் கும்பகோணம். பிராமண சமுதாயத்தில் பிறந்த இவர், தனது பூணூலைக் கழற்றி காவிரி ஆற்றில் எறிந்துவிட்டு, முற்போக்கான சிந்தனைகளுடன் செயல்பட்டவர். அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்த்திரைப்பட இயக்கத்தின் முன்னோடியான ராஜா சாண்டோவிடம் உதவியாளராகச் சேர்ந்து, எடிட்டிங் பயிற்சியும் பெற்றார். அப்போது கோவை கந்தன் ஸ்டுடியோவில் 
(பின்னர் இது பட்சிராஜா ஸ்டுடியோ எனப் பெயர் பெற்றது) லேபராட்டரியில் கிருஷ்ணன் பணியாற்றி வந்தார். பஞ்சுவும் கிருஷ்ணனும் நண்பர்களானார்கள்.
மனுநீதி சோழன் கதையை ‘ஆராய்ச்சி மணி’ என்ற பெயரில் ராஜா சாண்ட்டோ இயக்கினார். அதில், பசுமாடு அழுதுகொண்டே மணி அடிப்பது போன்ற காட்சி சரியாக எடுக்கப்படமுடியாமல் இருந்தது. இதைக் கவனித்த பஞ்சுவும் கிருஷ்ணனும் ராஜாசாண்டோவிடம் இதை இப்படி எடுக்கலாமே என ஆலோசனைகள் சொன்னார்கள். சொல்வதைவிட செய்துகாட்டுவதே சிறந்தது என்று அவர்களிடம் சொன்ன ராஜாசாண்ட்டோ அவர்களையே அந்தக் காட்சியை எடுக்கச் சொன்னார். மிகச் சிறப்பாக எடுத்து, அருமையாக எடிட்டிங் செய்து தந்த இருவரையும் பாராட்டியதுடன், தான் இயக்கவிருந்த ‘பூம்பாவை’ என்ற படத்தையும் அவர்கள் இருவரையுமே இயக்கச் சொன்னார் ராஜா சாண்டோ. இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு உருவான பின்னணி இதுதான்.


பூம்பாவை படம் 1944ல் வெளியானது. கே.ஆர்.ராமசாமி, ஜீவரத்னம், கலைவானர், டி.ஏ.மதுரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலைவாணர் என்.எஸ்.கே. சிறையில் இருந்தபோது அவரது குழுவினரின் நலனுக்காக ‘பைத்தியக்காரன்’ என்ற படத்தை இயக்கினார்கள் கிருஷ்ணனும் பஞ்சுவும். எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர் நடித்த இப்படம் வெளியாவதற்கு முன்பு கலைவாணர் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரையும் நடிக்க வைத்து படத்தை வெளியிட்டனர். அண்ணாவின் கதை வசனத்தில் கலைவாணர் தயாரித்து நடித்த ‘நல்லதம்பி’ படமும் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்தது.குலதெய்வம், தெய்வப்பிறவி, உயர்ந்தமனிதன், சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும், பெற்றால்தான்பிள்ளையா, எங்கள் தங்கம் போன்றவை இந்த இரட்டையர்கள் இயக்கிய முக்கியமான படங்களாகும். இவற்றில் சில படங்கள் இந்தியிலும் எடுக்கப்பட்டபோது அவற்றையும் இந்த இரட்டையர்களே டைரக்ட் செய்தனர். 

கதை-திரைக்கதையை சீராக அமைப்பதில் கிருஷ்ணனும், படப்பிடிப்பு-படத்தொகுப்பு பணிகளை சிறப்பாக கவனிப்பதில் பஞ்சுவும் கெட்டிக்காரர்கள். இருவரும் தங்கள் பணியை சரியாகப் பகிர்ந்தகொண்டு தொடர்ந்து படங்களை இயக்கினார்கள். இருவரும் சேர்ந்து சுமார் 50 படங்களை இயக்கியுள்ளனர். 1984ல் பஞ்சு தனது 70வது வயதில் உடல்நலமின்றி காலமானார். அதன்பிறகு கிருஷ்ணன் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. சில ஆண்டுகளில் அவரும் மறைந்தார். சிறந்த கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பல வெற்றிப்படங்களைத் தந்தவர்கள் இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. 

-கோவி.லெனின்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : ambu Date :10/10/2013 5:41:35 AM
கிருஷ்ணன்-பஞ்சு மாபெரும் இயக்குனர்கள் கண்டிப்பானவர்கள் இவர்களிடம் திட்டு வாங்காத ஒரே நடிகர் எம்ஜிஆர் மட்டுமே- சிவாஜி கூட ஏச்சு வாங்கியிருக்கின்றார் வெத்திலையை போட்டு வாயை குழப்பியபடி கும்பலாக இருந்து அரட்டை அடித்தமைக்காய் - இவர்கள் தளத்தில் இருந்தால் குண்டூசி கீழே விழுந்தாலும் சத்தம் கேட்க்குமாம் அந்தளவுக்கு கண்டிப்பு தொழில் பக்தி அதனாலேயே அவர்கள் படங்கள் பெரு வெற்றியடைந்திருக்கின்றது
Name : manoharan premanatha Date :10/7/2013 1:03:59 PM
முதல் எலோருக்கும் வணகாம் இந்த இரடயர்கலி ய் பேர்களில் சினிமா பளிகுடம் துவக்க வேண்டும் மற்றது ஒடமடிகாக அவர்களை மறக்காமல் எலோரும் அவர்களுக்கு மரியதை செய்வார்கள் இவளவு திறமையான வர்களை என் தமிழ் சினிமா marakudu என்று எனக்கு தேரியவிலிலை இவர்கள்தான் ekal அனிவெர் ஏவாரும் மார்குக குடாது கலாக்கு தமிழ் சினிமாதான் முனௌதர்னமக திகழும் இருது பருகால் தமிழன் முன் outharanamaka oulakadukuvilakum நான் பல நாடுகளை பார்து விடன் சாப்பாடு மொரைஎ ஏலாம் இந்தியன் முரைஎதன் சினசின marathan