விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
  
ஓ காதல் கண்மணி - ஒரு பார்வை!

ணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், லீலா சேம்சன் நடித்துள்ள திரைப்படம் ஓ காதல் கண்மணி. ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம், ஸ்ரீகர் பிரசாத் என வழக்கம் போல தனது டெக்னிகல் டீமுடன் களம் இறங்கியுள்ளார் மணிரத்னம்.


சென்னையிலிருந்து வந்த ஆதி மும்பை ரயில்நிலையத்தில் இறங்குவதில் துவங்கும் கதையை, ரயில்வேகத்தில் திரைக்கதை இழுத்துச் செல்கிறது. தாராவை ரயில்நிலையத்தில் சந்திக்கும் ஆதி, அடுத்தமுறை தனது தோழியான அனன்யாவின் திருமணத்தில் சந்தித்து அறிமுகமாகிறார். மணிரத்னம் ஹீரோக்கள் மட்டும் முதல் இரு சந்திப்பிலேயே ஹீரோயினை எப்படி வீழ்த்துகிறார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.

ஆதி தனது அண்ணனுடன் பணிபுரிந்த கணபதி வீட்டில் தங்கியிருக்கிறார். நேர்மையான மனிதரான கணபதி மனைவி பவானி சிறந்த கர்நாடிக் சிங்கர். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு ஒன்றுக்கொன்று முரணாக பேசும் பவானியை கணபதி சார் எவ்வளவு பொறுமையாக கையாளுகிறார் என்றும், இப்படி ஒரு எதார்த்தமான கணவன் மனைவியா? என்றும் கூடவே இருந்து வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஆதிக்கு திருமணம் என்பதில் நம்பிக்கை இல்லை. பெற்றோர்களின் பிரிவால் அடைந்த துன்பங்களை மறக்க முடியாத தாராவிற்கும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்பது தெரியவர இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்ற உறவுமுறைக்குள் நுழைகிறார்கள்.ஸ்ட்ரிக்ட் ஆபீசரான கணபதியிடம் தாராவை தன்னுடன் தங்கவைக்க ஆதி பல முயற்சிகள் எடுக்க, ஒரு பாட்டு பாடி பவானியை கைக்குள் போட்டு கணபதியை மடக்குகிறார் தாரா. ஒரே ரூமில் ஒன்றாய் இருக்கும் இருவருக்கும் இரு லட்சியங்கள் இருக்க, அவை நிறைவேரும் வரை ஒன்றாக இருப்போம் என்ற நிபந்தனையுடன் வாழ்கிறார்கள். இந்த சமயத்தில் ஆதி, தாரா குடும்பத்தினர் இவர்களது வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அந்த திருமணம் நடந்ததா இல்லையா? இவர்கள் லட்சியம் நிறைவேறியதா? என்பது க்ளைமாக்ஸ். 

துல்கர் சல்மானுக்கு மணிரத்னத்தின் ஹீரோக்களுக்கான படபடப்பான் பேச்சு வரவில்லை. ஆனால் முந்தைய படத்திற்கு இதில் முன்னேற்றம் தெரிகிறது. புதிய வீடியோ கேம்-க்கான கதையை எக்ஸ்ப்ளைன் செய்யும்போது தன்னை நிரூபித்துக்கொள்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் மனதை பறித்தாலும், சோகமாக முகத்தை வைக்கிறேன் என்று ஏதோ செய்கிறாரே, தவிர்த்துக்கொள்ளலாம்.

நித்யா மேனன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லை திறமையால் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கிறாரா? என்பதே புரியவில்லை. நித்யாமேனனை காட்டும் காட்சிகளில் கனவுகளில் வருவது போல், மற்றவர்களெல்லாம் அவுட் ஆப் ஃபோகஸில் தெரிய தேவதையாய் நிற்கிறார். 


பிரகாஷ் ராஜ் - லீலா சாம்சன் ஜோடி கணபதி - பவானியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இருவரின் அமர்த்தலான நடிப்பு அழகான கவிதை. ”காலைல எழுந்து ’கணபதீ’ன்னு கூப்பிடுவா? எல்லாமே சரியா போய்டும்” என்று பிரகாஷ் ராஜ் சொல்வதும், ‘கணபதீ ஒரு நாள் உங்களையும் மறந்துடுவனா” என்று லீலா சாம்சன் கேட்பதும் தலைமுறை தாண்டி ரசிக்கும் காதல். 

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் தங்களது முந்தைய படங்களில் தவறவிட்டதை மீண்டும் எட்டிப்பிடித்திருக்கிறார்கள். மணிரத்னத்தின் ரசிகர்களுக்கு இருந்த நீண்ட நாளைய ஏக்கம் ஓ காதல் கண்மணி மூலம் தீர்க்கப்பட்டிருக்கிறது.

ஒரு வரி, ஒரு வார்த்தை வசனங்கள் தான் மணிரத்னத்தின் ஸ்டைல் என்ற வரையறையை தளர்த்தி இயல்பாக பேசவைத்திருப்பது மணிரத்னம் படங்களில் ஒரு புதுமை. திருமணம் வேண்டுமா? வேண்டாமா? என்பதெல்லாம் டி.வி நிகழ்ச்சியில் விவாதித்தும் கூட முடிவு கண்டுபிடிக்க முடியாத ஹைபோதடிகல் கேள்விகள் என்பதால், ஓ காதல் கண்மணி ஒரு படைப்பாக மட்டுமே பார்த்து ரசிக்க சிறந்த படம். மணிரத்னத்தின் கதைக்களத்தில் ரஹ்மான் படைத்த இசை அவுட்லைன்களுக்கு  பி.சி.ஸ்ரீராம் தீட்டியுள்ள கேமரா வர்ணங்கள் கச்சிதம்.

ஓ காதல் கண்மணி - ஓகே சொல்ல வைக்கிறாள்!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :