விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................

உத்தம வில்லன் - ஒரு பார்வை!

ட்சத்திர அந்தஸ்து, புகழ், பணம் என உத்தமனாகவும், குழந்தையுடன் காதலியை கைவிடுதல், குடிப்பழக்கம், கள்ளக்காதலி என வில்லனாகவும் இருக்கும் நடிகன் மனோரஞ்சனுக்கு தான் இறக்கப்போகும் விஷயம் தெரியவருகிறது.’உங்களையும் என்னையும் மக்கள் மறக்காமல் இருக்க ஒரு படம்’ என்று தன்னை கலைஞனாக்கிய மார்க்கதரிசியிடம் சென்று நிற்கிறார். மனோரஞ்சனின் கடைசி ஆசையாக அதை ஏற்று உத்தமவில்லன் திரைப்படம் உருவாகிறது. அதே சமயம் ’சாவு இப்பவே வந்துடப்போகுதா என்ன?’ என்று அலட்சியமாய் ஒதுக்கிய கடமைகளை ஒவ்வொன்றாக செய்யத்துவங்குகிறார் மனோரஞ்சன்.

தமிழகத்தின் வில்லுப்பாட்டையும், கேரளத்தின் தையம் நடனத்தையும் கலந்து கூத்து ஆடும் உத்தமன், பல உயிர்போகும் சூழ்நிலைகளில் இருந்தும் தப்பிக்கிறான். சாகாவரம் பெற்றவனென மக்கள் அவனை கூறிவர, மாமனையும் அக்காளையும் கொன்று ஆட்சிபீடத்தில் ஏறும் முத்தரசன் அக்கா மகளை மணக்க ஜோசியம் பார்க்கும்போது கொடூரமாக இறக்கப்போவதாக தெரியவருகிறது. உத்தமனை இழுத்துவந்து அந்த வரத்தை கொடுத்துவிடு என மன்னன் மிரட்ட, ஒன்றாக நின்று மன்னனை முறியடிப்போம். அவன் சொல்வதையெல்லாம் செய். அவனை உறவாடிக் கெடுப்போம் என இளவரசி மயக்குகிறாள்.முத்தரசனை உத்தமன் கொல்கிறானா? உத்தமவில்லன் படம் முடியும்வரை மனோரஞ்சன் உயிரோடிருக்கிறாரா? தன் மகன் மகள் மனைவி குருநாதர் கள்ளக்காதலி ஆகியோருக்கு செய்யவேண்டிய கடமையை செய்துமுடிக்கிறாரா? என்பதெல்லாம் சிரித்துக்கொண்டே அழ வேண்டிய க்ளைமாக்ஸ்.

கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்றும், கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று ஒவ்வொரு படத்திற்கும் சொல்லத் தேவையில்லை. கதை திரைக்கதையில் தன்னை நிரூபித்திருக்கிறார். கே.பி அவர்களை நடிக்க வைத்து கைதட்டல்களை பெற்றாலும் அவரை மிகவும் தொந்தரவு செய்துவிட்டாரோ என்றும் தோன்றுகிறது. இதுவே கே.பி-யின் கடைசி படமாக அமைந்துவிட்டதால் நன்றிகள் பல.கமல் தவிர்த்து வெகுளி மனைவியாக வரும் ஊர்வசி கவர்கிறார். ஆண்ட்ரியா கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டார். ’என் ஆசை கள்ளக்காதலா’ என ஆண்ட்ரியா பேசும் வசனத்தை உணர்ந்து பேசியிருக்கிறார்(என்ன கதாபாத்திரம்னு கேக்கப்படாது). ஆண்டிரியாவுக்கு ஒரு டூயட் பாடல் கூட இல்லை. ஆனால் முத்தக்காட்சிகள் உண்டு. பூஜாகுமாருக்கு பல பாடல்கள் இருந்தாலும் முத்தக்காட்சிகள் இல்லை. இருபுறமும் சிறப்பாக பேலன்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் பூஜாகுமாரின் ஓவர் ஆக்டின் அயர்ச்சிக்குள்ளாக்குகிறது. கமலின் அடுத்த படத்திலும் கமலுடன் பூஜா குமாரை பார்க்க வேண்டுமே என நினைக்கும்போதே உஸ்ஸ்ஸ்..... தகப்பனை சந்திக்கும் காட்சியில் கமலின் நடிப்புடன் போட்டிபோடுகிறார் பார்வதி மேனன். உங்களை மாதிரி நடிகை தமிழ் சினிமாவுக்கு தேவை.

ஜெயராம், எம்.எஸ்.பாஸ்கர், நாசர், கே.விஷ்வநாத் என தேர்ந்த நடிகர்களை நடிக்கவைத்திருக்கிறார்கள். அவர்களும் தங்களது பங்கிற்கு தேவைக்கு ஒருபடி மேலாகவே நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப்பெரிய பலம். ’சாகாவரம் போல் சோகம் உண்டோ’, ’சிங்கிள் கிஸ்கே லவ்வா’ , ’காதலாம் கடவுள் முன்’, ‘இரண்ய நாடகம்’ என பல பரிணாமத்திலும் ஜொலிக்கிறார் ஜிப்ரான். ஒளிப்பதிவாளர் ஷாம்தத் கிராஃபிக்ஸா ஒரிஜினலா என தெரியாதவண்ணம் ஒளியமைத்திருப்பது கண்களுக்கு குளுமை.மன்னர்காலத்து கதையில் நாராயணா என்று கமல் அழைக்கும்போதெல்லாம் ஏனோ சிரிப்பு வருகிறது. இரண்ய நாடகத்தில் இரண்யனுக்கு பதில் நரசிம்மர் இறந்துபோவது கதை ஓட்டத்தோடு பொருந்துகிறது.

செத்தவனுக்கு திதி கொடுத்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது செத்தவனே எழுந்துவந்தால் சாப்பாடு போடமாட்றீங்களேப்பா என கமல் கேட்பது நியாயமாகத்தான் தெரிகிறது. நயவஞ்சக மன்னனான முத்தரசனை சுற்றியிருக்கும் முட்டாள் அமைச்சர்களும், ஒரு வார்த்தை பேசி முடிப்பதற்குள் டம டம டம-வென ஒலிக்கும் பக்கவாத்தியங்களும் எங்கோ இடிக்கிறது.தனது மகளை தனக்கே ஜெயராம் அறிமுகப்படுத்தும்போது பேச முடியாமலும், அழ முடியாமலும் தவிக்கிறாரே ஒரு தவிப்பு அட்டகாசம். ’நடிகை ஆகிட்டாலே தலைக்கணம் தானா வரணுமே’என்ற வசனங்களை தன் பாணியில் அசத்துகிறார் கே.பி. ராஜா காலத்து வசன உச்சரிப்பு ஆரம்பத்தில் அயர்ச்சியை தந்தாலும் போக போக பழகிவிடுகிறது.

வழக்கம்போலவே இந்த படத்திலும் பல புதுமைகளை கையாண்டிருக்கிறார் கமல். மனோரஞ்சனுக்கு இப்படி ஆகிவிட்டதே என அழுவதா? செங்குட்டுவன் வென்றதற்காக மகிழ்வதா? என்ற குழப்பத்தில் நிற்க வைக்கிறார். கமல் படங்கள் உலக தரத்திற்கு சென்றுவிட்டன, அவற்றை பார்க்கவோ விமர்சிக்கவோ மவுஸ் பிடிக்க தெரியவேண்டும் என்பதையெல்லாம் உடைத்து கடைக்கோடி ரசிகன் வரை ரசிக்கும் விதத்தில் காதல், மனைவி செண்டிமென்ட், மகன் மகள் செண்டிமென்ட் கலந்த ஒரு படமாக உருவாகியிருக்கிறது உத்தமவில்லன். எத்தனை விஸ்வரூபங்கள் எடுத்தாலும் கமலிடம் தமிழ்சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பது இப்படி ஒரு படத்தைத்தான்.

உத்தம வில்லன் - ஒரு நட்சத்திர நடிகனின் உண்மை முகம்!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [8]

Name : kumar Date :6/18/2015 1:44:30 PM
கமல் வயது 20 கள் அல்ல .வயதுக்கு எதத கதைகளில் நடிக்க வேண்டும். 60 வயதிலும் 20 வயது பெண்ணுடன் நடிக்க ஆசை படக் கூடாது .
Name : Balaji G Date :5/20/2015 7:52:44 PM
கமல்ஹாசன் சார் ஒரு வெளிப்படையான தன்மை உடைய மனிதர் என்பதை இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகதிருக்கு கண்பித்து இருக்கிறார். கிரேட் கமல் சார்.
Name : vasi v Date :5/11/2015 1:21:58 PM
டென்ட் கொட்டாய் காலத்திலிருந்து இப்படி ஒரு போர் அடிக்கிற படத்தை பார்த்ததே இல்லை
Name : Ajith - Vijay Date :5/11/2015 1:09:06 PM
கமல் தன்னை சுய விமர்சனம் செய்திருக்கிறார். இந்த துணிச்சல் அவரைத் தவிர எந்த நடிகனுக்கும் கிடையாது. மனோரஞ்சன் மறக்க முடியாதவர் ஆகின்றார். உத்தமர்கள் எல்லோருக்குள்ளும் வில்லன்களும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். போலியாக வாழ்பவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வாழ்த்துக்கள் கமல்.
Name : Balachanthiran Date :5/6/2015 10:19:31 AM
உத்தம வில்லன் படத்தைப் கள்ளக்காதலர்கள் விரும்பி பார்க்கலாம். இப்படத்தில் கள்ளக் காதல் என்பது ஒரு தவறே இல்லை என அறம் பிறழ்கிறார் கமல்.
Name : கவுதமி கமல் Date :5/6/2015 10:13:09 AM
உத்தம வில்லன் படம் வேஸ்ட். யாரும் பார்க்க வேண்டாம். சுத்த போர். கோமாளி கமல் நடிப்பதை நிறுத்தி விடு.
Name : RAJAN PIRABHU Date :5/5/2015 1:07:00 PM
உத்தம வில்லன், கமல்ஹாசனின் கேவலமான படங்களின் வரிசையில் மற்றுமொரு படம்
Name : kumar Date :5/4/2015 8:34:43 PM
நல்ல உத்தமமான விமர்சனம் .