விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :21, ஜூலை 2015(18:2 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஜூலை 2015(18:2 IST)மாரி - விமர்சனம்

        ‘நான் வேற மாரி’ என்று தரை லோக்கலாக மாரி படத்தில் களம் இறங்கியிருக்கிறார் தனுஷ். ரௌடிஸம், பந்தயம் போன்ற படங்கள் தான் தனுஷின் திரைவாழ்க்கையில் அவருக்கு மிகவும் கைக்கொடுத்து இந்நிலைக்கு வர உதவியிருக்கின்றன. இந்த இரண்டும் கலந்த படம் தான் மாரி. ’எட்டு வயசுல புறா வளக்குற பையனா இருந்தவன், இன்னைக்கு பெரிய ரௌடி. ஏரியாவே அவன் கைல’ என்று டிரெய்லரில் வரும் வசனமே மாரியின் கதாபாத்திரத்தின் விளக்கம். அநாதையாக இருந்த சின்னப்பய மாரியை ஏரியா மக்கள் உதாசினப்படுத்திவிட, பாசமாக வளர்த்த புறாக்கள் தான் பந்தயங்களில் ஜெயித்து மாரியை ஆளாக்கின. எனவே யாருக்கும் எந்த இரக்கமும் காட்டாமல் சேட்டைக்கார பயலாக இருக்கிறான் மாரி.

செம்மரங்கள் கடத்தும் பெரிய தாதாவான வேலு, மாரியின் புறா மீதான பாசத்தைக் கண்டு புறா ரேஸ் நடத்தும் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஏரியாவே மாரியைக் கண்டு பயப்பட, புதிதாக வரும் ஏரியா இன்ஸ்பெக்டர் விஜய் யேசுதாஸ் மாரிக்கு கட்டம் கட்டுகிறார். பழைய கொலை கேஸில் மாரியை கோத்துவிட முயற்சி செய்யும் இன்ஸ்பெக்டருக்கு, மாரியை அடக்கி ஏரியாவை கைப்பற்ற நினைக்கும் கோபியும், மாரியிடம் டார்ச்சர் அனுபவிக்கும் காஜல் அகர்வாலும் உதவுகின்றனர். தக்க ஆதாரத்துடன் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் மாரி, ரிலீஸ் ஆகி பழி வாங்குவது வழக்கமான தனுஷ் படக்கதை.

கதை வழக்கமானது தான் என்றாலும், கதையைத் தாங்கிச் செல்ல உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் வலுவாக இருந்ததால் பாலாஜி மோகன் தப்பித்தார். ரோபோ சங்கர், கல்லூரி வினோத், காளி வெங்கட் என மெயின் கதாபாத்திரங்களை விட இவர்களின் ரோல் மிக முக்கியமானது.பொலிவான தோற்றம், புது ஸ்டைல், மிரட்டலான பார்வை என தனுஷ் அதிகமாக கவர்வதே அவருக்கான இடத்தையும் உறுதி செய்கிறது. இல்லையென்றால் ரோபோ சங்கர் மொத்தமாக ஸ்கோர் செய்திருப்பார். கூடவே இருந்து தனுஷை கலாய்ப்பதாகட்டும், மற்றவர்களை புரட்டி எடுக்கும் ரோபோ சங்கர், கல்லூரி வினோத்துக்கு நல்ல வாய்ப்பை கொடுத்த பாலாஜி மோகன், அவர்களை ஓவர்டேக் செய்ய இடம்கொடுத்த தனுஷ், அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

‘ஹீரோயினுக்கு வழக்கமான கேரக்டர் இல்லை, மிகவும் பவர்ஃபுல்லான கேரக்டர்’ என்றாரே இயக்குனர் இந்த கேரக்டர் தானா அது. காஜல் அகர்வால் அழகாக இருக்கிறார். ஒரு பாடலில் இடை தெரிய குத்தாட்டமும், ஒரு பாடலின் மாண்டேஜ் காட்சிகளில் ஸ்லோ மோஷன் தேவதையாகவும் வலம் வருகிறார். 

அமர்க்களமான கேரக்டரில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார் விஜய் யேசுதாஸ். திரைத்துறையில் நிறைய நண்பர்கள் இருப்பதால் அவர்களிடம் ஐடியா கேட்டு நடிப்புத் திறமையை வளர்த்துக்கொண்டால் நல்ல இடத்தை பிடிக்கலாம்.

பாலாஜி மோகன் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார். ஹீரோவை வில்லன்கள் அத்தனை பாடுபட்டு ஒழிக்க, ஹீரோ உள்ளே புகுந்து ஒரே ஃபைட்டில் வில்லன்கள் கதையை முடிப்பது ஏமாற்றம். கடைசி சண்டைக் காட்சியை வடிவமைத்த ஸ்டண்ட்ஸ் சில்வாவுக்கு பாராட்டுக்கள்.

‘பட்டுனு அடிச்சா கொசு பொட்டுனு செத்துரும்’ என இரண்டாவது முறையாக தனுஷ் சொல்லும் வசனம் தான் மாஸ். மாமூல் வசூலிக்க வருபவர்கள் மீது மிளகாய் வெடியை விசிறி செய்யும் சேட்டையெல்லாம் க்ளாஸ். 

மொத்தக் கதையையும் ஒரு சின்ன டிரெய்லருக்குள் சொல்லிவிட்ட எடிட்டரை பாராட்டியே தீர வேண்டும். (உண்மைய சொல்லிட்டோமோ!). 

டிரெய்லரில் சொன்னது போக ஒரு பஞ்ச் வசனம் கூட இல்லாதது மிகப்பெரும் ஏமாற்றம். ட்ரெய்லரில் ‘செஞ்சிருவேன்...’ என்று சொல்லும் தனுஷை நம்பி படம் பார்க்கப் போனா... அப்படி 
என்ன பெருசா செஞ்சிட்டாரு என்ற கேள்வியே தோன்றுகிறது. 

மாரி - வெரி சாரி! 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : Dhinesh Date :8/14/2015 8:42:10 PM
Dhanush mass