விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :8, ஆகஸ்ட் 2015(17:41 IST)
மாற்றம் செய்த நாள் :8, ஆகஸ்ட் 2015(17:41 IST)

சகலகலாவல்லவன் - விமர்சனம்!

        இதுவரை வந்த கமர்ஷியல் படங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பிட்டு பிட்டாய் வெட்டி எடுத்து ஒரு கலர் ஃபுல் காஸ்ட்டியூம் தைத்துவிடுவார் இயக்குனர் சுராஜ். இதிலும் அது தொடர்ந்திருக்கிறது. சூரியின் காமெடி, த்ரிஷா-அஞ்சலியின் கலர்ஃபுல் & கிளாமரான தோற்றம் என சக்கைபோடு போடுகிறான் சகலகலா வல்லவன். அப்பா சொல்லை மீறாத பிள்ளையான ரவி, பிராபுவின் சொல்லைக் காப்பாற்ற காதலித்த பெண்ணாண அஞ்சலியை மறந்து, த்ரிஷாவை மணக்கிறார். (இது ஒரு படத்தை நியாபகப்படுத்துகிறதா?). சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்டுவிட்ட திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள நினைக்கும் த்ரிஷாவிடம், நான் உன் வீட்ல இருந்தா மாதிரி நீ என் வீட்ல ஒரு மாசம் இரு. நான் டைவர்ஸ் தரேன் என வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். (இதுவும் ஒரு படத்தை நியாபகப்படுத்துகிறதா?)

அந்த ஒரு மாதத்தில் ஜெயம்ரவியின் குடும்பம் த்ரிஷாவை எப்படி மாற்றுகிறார்கள் என்பது க்ளைமாக்ஸாக இருந்திருந்தால் சகலகலா வல்லவன் நம்மை ஏமாற்றியிருப்பான். த்ரிஷா டைவர்ஸ் பத்திரத்தை வாங்கிக்கொண்டு போய்விட, எப்படித் தான் இருவரும் சேர்கிறார்கள் என்பது ஆர்ப்பாட்டமான க்ளைமாக்ஸ். 

படம் முழுக்க அலப்பறை செய்துவரும் சூரியை, சில நிமிடங்கள் வரும் விவேக் ஓவர்டேக் செய்கிறார். 5 நிமிடத்தில் 500 டபுள் மீனிங் வசனங்கள் பேசுகிறார். (சில வசனங்கள் வீட்டுக்கு போன பிறகு தான் புரியும்). விவேக்கின் மொட்டை கதாபாத்திரம் சிரிக்க வைக்க, சால்ட் & பெப்பர் லுக் விவேக் எரிச்சல். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் போலிஸ் உடையில் அதட்டுகிறார். பறந்து பறந்து அடிப்பது, பஞ்ச் வசனங்கள் பேசுவது என ஆரம்பித்து, எந்திரன் ரோபோட் வேடம் போடுவதெல்லாம் வேற லெவல் காமெடி. சிரித்து சிரித்து வாய் வலி வருவது உறுதி. 

பெரிய வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சிறுபிள்ளைத்தனமான கேரக்டரில் ஜெயம் ரவி கலக்குகிறார். அப்பா பாசத்தில் மூக்கால் அழுது வசனம் பேசுவது, குடித்துவிட்டு டான்ஸ் ஆடுவது என பல வருடங்களுக்கு முன்பு பார்த்த ஜெயம் ரவி மீண்டும் கண்முன். ’குடி’ என்றதும் தான் நினைவிற்கு வருகிறது. த்ரிஷா துரத்திவிட்டதால் குடித்துவிட்டு ஆட்டம் போடும் ‘பல்பு வாங்கிட்டேன் மாமா பல்பு வாங்கிட்டேன்’ பாடலின் துள்ளல் இளைஞர்களுக்கான கொண்டாட்டம்.

பாடல் என்றதும் நினைவிற்கு வருவது இந்த படத்தின் முதல் பாடல் தான். ’ஹிட்டு சாங்கு’ என குத்தாட்டம் போடும் பூர்ணா ஜொலிப்பு. பூர்ணாவின் ஆட்டத்தை பார்த்துவிட்டு அஞ்சலியின் ஆட்டமெல்லாம் எம்மாத்திரம் என தோன்றுவது இயல்பே. வயதாகிவிட்டதால் இப்போதெல்லாம் த்ரிஷா சிரமமெடுத்து நடனமாடுவதில்லை என்ற பேச்சு கோலிவுட்டில் நிலவிவந்தது. ’புஜ்ஜிமா புஜ்ஜிமா’ பாடலில் ஜெயம் ரவிக்கு இணையாக பின்னி பெடலெடுத்திருக்கிறார். தாவணியில் ஜிவ்வ்வ்வுனு வரும் அஞ்சலி மாடர்ன் டிரஸ்ஸில் தொப்பையுடன் டான்ஸ் ஆடுவதை பார்த்த உடனேயும் சகிக்கவில்லை. பார்க்க பார்க்கவும் பிடிக்கவில்லை.பக்கா கமெர்ஷியல் என்பதால் கலகலப்பை மட்டுமே கொடுக்கிறது சகலகலாவல்லவன். இளம்புயல் பட்டத்தை வைத்துக்கொண்டு சாதாரண ரௌடிகளை அடித்தும், பீர் பாட்டிலை தலையில் உடைத்தும் தனது ஆக்‌ஷன் ப்ளாக்கை ரவி முடித்துக்கொண்டது சிறிய வருத்தம். காமெடி, காதல், க்ளாமரில் மட்டும் சகலகலாவல்லவன் தேறுகிறான்.

சகலகலாவல்லவன் - ரகளை செய்கிறான்! 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :