விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :31, ஆகஸ்ட் 2015(13:31 IST)
மாற்றம் செய்த நாள் :31, ஆகஸ்ட் 2015(13:31 IST)தனி ஒருவன் - விமர்சனம்!

திரைப்பட பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலராலும் கலாய்க்கப்பட்டவர் இயக்குனர் ஜெயம் ராஜா (இந்த படத்திலிருந்து மோகன் ராஜா). ஆனால் ஒரே படத்தின் மூலம் தன்னை வேறு லெவலுக்கு உயர்த்திக்கொண்டார். ராஜாவின் முதல் நேரடித் திரைப்படமான ‘தனி ஒருவன்’, அதிரடித் திரைப்படமாகவும் அவருக்கு அமைந்துவிட்டது. விண்வெளியில் சுற்றும் இரு கோள்கள் மோதிக்கொள்வதை விட அதிக பாதிப்பை உருவாக்கக் கூடியது கண்ணுக்குத் தெரியாத இரு அணுக்களுக்கிடையேயான மோதல். அப்படிப்பட்ட இரு அறிவான சக்திகள் மோதிக்கொள்ளும் படம் தான் தனி ஒருவன். செய்தித்தாளில் வரும் செய்திகளில் முதல் பக்க செய்திக்கும் ஆறாவது பக்க செய்திக்கும், அதாவது முதல் பக்கத்தில் இருக்கும் வெங்காய விலை ஏற்றத்தையும், ஆறாவது பக்கத்தில் இருக்கும் லாரி ஸ்ட்ரைக்கையும் தொடர்புபடுத்தி பார்க்கிறார் ஜெயம் ரவி (மித்ரன்). ’உன் எதிரி யார் என்று சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு, பலமான தனது தகுதிக்கு ஏற்ற பெரிய மனிதன் என்ற போர்வையில் குற்றங்களை செய்துவரும் மூன்று பேரை செலக்ட் செய்து; அவர்களில் ஒருவரை தனது எதிரியாக தேர்ந்தெடுத்து போலிஸ் ட்ரைனிங் முடிந்து ப்ளேஸ்மெண்ட் ஆனதும் அழிக்கவேண்டும் என்ற தவத்தை மேற்கொள்கிறார். 

ஆனால் ஜெயம் ரவிக்கே அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் வந்து இறங்குகிறார் சித்தார்த் அபிமன்யு (அரவிந்த் சாமி). கொலை செய்துவிடும் கட்சித் தலைவரான நாசருக்கு பதில் பழியை ஏற்றுக்கொண்டு 15 வயதில் சிறைக்குச் செல்லும் பழனி, அதற்கு பதிலாக தனது அப்பாவை(தம்பி ராமய்யா) எம்.எல்.ஏ-வாக அறிவிக்குமாறு கேட்கிறார். 15-வயதிலேயே இப்படி ஒரு தந்திரம் மிகுந்த பழனி வெளிநாடுகளுக்குச் சென்று படித்து விஞ்ஞானியாக புகழ் பெற்று சித்தார்த் அபிமன்யுவாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் அரவிந்த் சாமி.ரசித்து ருசித்து அழிக்கவேண்டிய எதிரி அரவிந்த் சாமி தான் என்று முடிவெடுக்கும் ஜெயம் ரவி முதல் அடி பேரிடியாக இறங்குகிறது. ஜெயம் ரவியின் திட்டத்திலிருந்து ஒருவழியாக சமாளித்துக்கொள்ளும் அரவிந்த் சாமி டெஸ்ட் கிரிக்கெட் மாதிரி தனது இன்னிங்க்ஸை ஆரம்பித்து, தனது எதிரியை அழிக்க 100 அடியாட்கள், 40 கார்கள் அனுப்பி ஆர்ப்பாட்டம் செய்யாமல் சிறிய சிப் ஒன்றை வைத்து ஜெயம் ரவியை கிட்டத்தட்ட பைத்தியமாக்கிவிடுகிறார். அரவிந்த் சாமியின் குள்ளநரித்தனத்தைக் கண்டுபிடிக்கும் ஜெயம் ரவியின் கடைசி இன்னிங்க்ஸ் அங்கிருந்து சரவெடியாக ஆரம்பித்து அரவிந்த் சாமியை வீழ்த்துகிறது. நாட்டையே அழிக்கக் கூடிய பயங்கரவாதியாக வாழ்ந்தாலும், சாகும்போது வீரனாக சாகும் அரவிந்த் சாமி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கப் போவது உறுதி.

ஜெயம் ரவிக்கு இது மாபெரும் வெற்றி. இந்த வெற்றியால் கோபப்படுத்துவது போன்ற படங்களில் நடித்து சோதிக்காமல் நல்ல படங்களில் நடித்து மேலும் மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள். பல படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திவிட்ட ஜெயம் ரவியை இந்த படத்தில் நடித்ததற்காக பாராட்டுவதைவிட, தம்பி தன்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிய ராஜாவை பாராட்டலாம்.நயன்தாராவைப் பற்றி சொல்லாமல் விட முடியுமா? ஹீரோயின் என்பதற்காக அடிக்கடி தொந்தரவு செய்து டூயட்டுக்கு கிளம்பாமல், எதோ ஒரு மூளையில் நின்று கொண்டிருந்தாலும் அவருக்கான காட்சிகளில் அசத்திவிட்டார். ’எனக்கு ப்ரபோஸ் பண்ணத் தெரியாது’ என அவர் காதலை வெளிப்படுத்தும் விதமும், ’மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு யார ஏமாத்திகிட்டு இருக்க’ என்று அழும் காட்சியும் க்ளாஸ்.

ஒவ்வொன்றும் நெத்தியடி வசனங்கள். ’பெண் சுதந்திரம்னா ஆம்பளைங்க செய்யற தப்ப மட்டுமே வரிசை படுத்துறது இல்லை’, 'இருட்டை விரட்ட சூரியன் தேவை இல்லை. ஒரே ஒரு தீக்குச்சி போதும்’, ‘கடவுளே எப்பவும் நல்லதை மட்டுமே செய்றதில்ல. சாதாரண மனுஷன். நாம எம்மாத்திரம்’ என்ற வசனங்களெல்லாம் கைதட்டல்களில் தீப்பொறியை பறக்கவிடுகின்றன. (இது சும்மா டிரெய்லர் தான். மெயின் பிக்சர் தியேட்டர்ல இருக்கு)பெருமைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் எடுக்கப்பட்ட கடைசி ஃபில்ம் ரோல் திரைப்படம் தனி ஒருவன் தான். ராம்ஜி ஃபில்ம் ரோலில் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்துவிட்டார். படத்தில் வரும் ஒரே ஒரு டூயட் பாடலில் அசத்திவிட்டார். அதிவேகமான திரைக்கதைக்கு இவ்வளவு பொறுமையாக கேமராவை நகர்த்தியிருக்கிறார். அது தான் அழகு.

ராஜாவின் சொந்தக் கதையான ‘தனி ஒருவன்’ செம படம் என்று சொன்னால், ‘உண்மையாகவா?’ என்று கேட்கக்கூடியவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களது சந்தேகத்தை பூர்த்தி செய்யவே ராஜா பல அம்சங்களை படத்தில் வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் தன்மை, வசனங்கள், காட்சிப்படுத்திய விதம், சண்டைக் காட்சிகள் என பல உண்டு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு மேனரிசம் கொடுத்து பக்காவாக வேலை செய்திருக்கிறார். அரவிந்த் சாமியின் அமைதியான தோற்றமும், அதிக சத்தம் இல்லாத குரலும் படத்தில் இத்தனை பாதிப்பை ஏற்படுத்தியது தான் படத்தின் வெற்றி. தனி ஒருவன் அறிவு பலத்தால் பெரிய குற்றங்களை செய்யமுடியுமென்றால், அவனை அழிக்க அதே அறிவு பலத்தைக் கொண்ட தனி ஒருவனால் ஏன் முடியாது என்ற கேள்வி மக்கள் முன் வைக்கிறது இப்படம்!

தனி ஒருவன் - மக்களை வென்றவன்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :