விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................

49 ஓ - ஒரு பார்வை!


மிழ்த்திரையுலகில் யாராலும் நிரப்பிவிடமுடியாத இடத்தில் இருப்பவர் கவுண்டமணி. அவர் என்றோ சொன்ன நக்கல் வசனங்களெல்லாம் இன்றைய தலைமுறையும் ரசிக்கும் விதத்திலும், சுலபமாக இன்றைய வாழ்வியலோடு பொருத்திப் பார்த்துக்கூடிய விதத்திலும் இருப்பதே அதற்கான சான்றுகள். காமெடி ஹீரோக்கள் வரலாம் போகலாம். ஆனால் என்றும் காமெடி நடிகர்களில் சூப்பர்ஸ்டார் கவுண்டமணி தான். வழக்கமான நக்கல் நய்யாண்டியுடன் கவுண்டமணி விவசாயியாகவே நடித்து, விவசாயிகளை விழுங்கி ஏப்பம் விடும் அரசியல்வாதிகளை வசன சாட்டைகளால் உரித்து எடுப்பது தான் 49 - ஓ திரைப்படம்.

சாலை அமைக்கும் திட்டம், ரயில் போக்குவரத்து திட்டம் என ஒரு விவசாய கிராமத்திற்கு அருகில் பல திட்டங்களை கொண்டு வருகிறது அரசாங்கம். இதை மோப்பம் பிடிக்கும் அரசியல்வாதிகளோ அடுக்குமாடி குடியிருப்பு, அதிக லாபம் என சுயநலத் திட்டம் ஒன்றை வகுத்து அங்கிருக்கும் விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கின்றனர். மண்ணின் தன்மை அறியும் ஆற்றலிருக்கும் விவசாயிகள் மனிதனின் உண்மை முகம் அறியாமல் இடங்களை கொடுத்து, அதற்கான பணமும் பெற்றுக்கொள்ளாமல் ஏமாந்து போகிறார்கள்.

அறியாமையால் ஏமாற்றப்பட்ட விவசாயிகள் ஊரிலேயே ஓரளவுக்கு விவரம் தெரிந்த கவுண்டமணியிடம் சென்று நிற்கிறார்கள். ’பேராசையால நிலத்தை இழந்துட்டு வந்து நிக்கிறீங்களே. இத்தனை நாளும் அந்த நிலம் தானடா உங்களுக்கு சோறுபோட்டுச்சு. இனி இந்த பணத்தை வெச்சு என்ன தொழில் பண்ண போறீங்க. விவசாயத்தை விட்டா வேற என்ன தெரியும் உங்களுக்கு’ என தனது பாணியில் திட்டிவிட்டு நிலத்தை மீட்க களத்தில் இறங்குகிறார். அரசியல்வாதிகளை மடக்க கவுண்டமணி செய்யும் ஒவ்வொரு முயற்சியும் க்ளாஸ் என்றால் அந்த ‘ஆறடி தாய்மடித் திட்டம்’ மாஸ். 49-ஓ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் மாதிரி ஒவ்வொரு குடிமகனும் முடிவெடுத்தால் தான் அரசியல்வாதிகள் தங்கள் கடமையை சரிவர செய்யத் துவங்குவார்கள். புரட்சிகரமான வசனங்கள் பேசும் போதும், ராஜேந்திரனுக்கு அடி-உதை கொடுப்பதிலும் வயசானாலும் உங்க லொள்ளும், ஸ்டைலும் உங்கள விட்டு போகல சார் என்று சொல்லத் தோன்றுகிறது. கவுண்டமணி குரலில் இருந்த கம்பீரமும், நக்கலும் குறையவில்லை என்றாலும் வேகம் குறைந்திருக்கிறது. ஆனால் அதுவும் நொடிந்துபோன விவசாயியின் கதாபாத்திரத்தில் ஒன்றிவிடுவதால் கவுண்டமணி கம்பீரமாக நிற்கிறார்.

பல ஆண்டுகள் கழித்து பார்ப்பதாலா? இல்லை கவுண்டமணியைச் சுற்றியே கதை நகர்வதாலா? தெரியவில்லை. அவரைத் தவிர வேறு யாரும் மனதை ஈர்க்கவில்லை. ஜிகர்தண்டா திரைப்படத்தில் நோட் செய்யப்பட்ட குரு சோமசுந்தரம் ரசிக்க வைக்கிறார். ஒவ்வொரு பாடலையும் யுகபாரதி விவசாயிகளின் கோபத்தையும், அரசியல்வாதிகளின் துரோகத்தையும் சொல்லும்விதமாக எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர் ’கே’, கவுண்டமணி சொன்னது போல ’கே’க்குற மாதிரி இசையமைத்திருக்கிறார். ஆனால் அந்த மண்வாசத்தைக் கொண்டுவர அவரால் முடியவில்லை.விவசாயிகள் பற்றிய படங்கள் வந்து நாட்களாகிவிட்டன. இளம் வயதிலேயே விவசாயம் பற்றிய அக்கறையுடன் படமெடுக்க முடிவெடுத்த இயக்குனரையும், அவருக்கு வாய்ப்பளித்த கவுண்டமணியையும் வாழ்த்த கடமைப்பட்டிருக்கின்றனர் விவசாயிகள். அரசாங்கமே சுடுகாடுகளை சீல் வைத்து மூடிவரும் சூழ்நிலை நிலவும் சமயத்தில் ஆறடித் தாய்மடித் திட்டம் நெத்தியடி. 

இப்படி நீங்க குனிஞ்சு குனிஞ்சு நிக்கிறதால தான்டா சுலபமா ஆப்பு சொருகிட்டு போயிட்றாங்க. அரசியல்வாதியும் அவனோட குடும்பமும் நல்லா வாழ்வீங்க, விவசாயியும் அவன் குடும்பமும் நாசமா போகனுமாடா போன்ற வசனங்களெல்லாம் இன்றைய பெரும் கட்சிகளுக்கு அடித்த ஆப்பு.


ஓட்டு போடும் உரிமையை காசுக்கு விற்றுவிட்டு கால் வயிறு கஞ்சிக்காக அரசியல்வாதியிடம் சென்று கை ஏந்தி நிற்கும் பொதுமக்களும் பார்த்து திருந்தவேண்டிய படம். சுயலாபத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு உதவும் அரசியல்வாதிகளும், பசிக்கு பணத்தை தின்னமுடியாது என உணர்ந்து விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உதவினால் தான் விவசாயிகளும் வாழ்வார்கள். நாடும் வளரும். 

49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : மனோகரன் Date :10/13/2015 9:08:06 AM
பல வருடங்களுக்கு பிறகு உழவர்களின் அவலத்தை சித்தரிக்கும் தரமான திரைப்படம். நெத்தியடி வசனங்கள். உண்மையை, நாட்டு நடப்பை சொல்லியிருக்கிறார்கள். பெரும்பான்மையான இக்கால திரைப்படங்கள் போலியான, சமுதாயத்திற்கு ஒவ்வாத, வக்கிரமான, செயற்கையானவைகள் [பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத] தான் திரைத்துறையை ஆக்கிரமித்து சீரழித்து வருகின்றன.