விமர்சனம்

நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
தனி ஒருவன் - மக்களை வென்றவன்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!

ணக்கார கணவன், அழகான மகன் என மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜேக்குலின் வாழ்க்கையில் மகன் மூலம் துயரப் புயல் வீசுகிறது. என்னவென்றே தெரியாத நோய் தாக்க உயர் சிகிச்சைக்காக சென்னை கிளம்பி வருகிறார்கள். ஜேக்குலினின் ஈ.சி.ஆர் பங்களா அவர்களை மர்மத்துடன் வரவேற்க, மாடி அறையோ பயங்கரத்துடன் காத்துக்கிடக்கிறது. 


சிகிச்சைக்காக மருத்துவமனையில் மகனை சேர்த்துவிட்டு வீட்டில் தனியாக இருக்கும் ஜேக்குலினுக்கு பேயின் அரவங்களும், உருவங்களும் அரற்றி எடுக்க மருத்துவமனைக்கே ஓடிப்போகிறார். மறுநாள் காலை வேலைக்காரனை அனுப்பி பிரச்சனையை கவனிக்கச் சொல்லும் ஜேக்குலினின் கணவருக்கு வேலைக்காரனிடமிருந்து வருகிறது ஃபோன்கால். எடுத்து பேசியதும் ‘எனக்கு அம்மா வேணும். அம்மாவ வர சொல்லு’ என்கிறது குழந்தைக் குரல்.


இன்னொருபுறம் கால்-செண்டரில் வேலை செய்யும் தீபக்கிற்கு மிஸ்டு கால் வந்ததும் திரும்ப அழைக்கிறார். குழந்தை அழும் குரல் கேட்டு திடுக்கிட்டு காரை ஸ்டார்ட் செய்ய கார் மக்கர் செய்கிறது. பயத்தில் அடித்து பிடித்து வீடு வந்து சேர, அடுத்தநாளும் அதே நம்பரில் அழைப்பு வர பதட்டத்துடன் அட்டண்ட் செய்யும் தீபக்கை ஆசுவாசப்படுத்துகிறது பெண் குரல். தொடர் பேச்சுகளால் இருவரும் சந்திக்க, ஜூலி என்ற அந்த பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் சோகச் செய்தியும், கணவரைப் பிரிந்துவிட்ட சந்தோஷச் செய்தியும் தெரிகிறது தீபக்கிற்கு. 

ஜூலியின் அழைப்பின் பேரில் வீட்டுக்குச் செல்லும் தீபக், வாய் கிழிந்த நிலையில் இருக்கும் ஜூலியை பார்த்து அதிர்ந்துவிடுகிறார். தன் கணவன் தன்னை அடித்துவிட்டு குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டதாகச் சொல்ல போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார் முன்னாள் கணவன் மீது. போலிஸுடன் வரும் ஜூலியின் கணவர் வீசும் அதிர்வெடிகளைத் தொடர்ந்து, தீபக்கையும், ஜேக்குலினையும் அந்த இரு வீடுகளுக்கும் வர வழைத்த பேயிடம் கேட்கப்படும் கேள்வி உனக்கென்ன வேணும் சொல்லு?

                          

கச்சிதமான திரைக்கதை. தேவையான கதாபாத்திரங்கள் மட்டும் திரையில் நிறைந்திருக்கிறது. இசை பலம் சேர்த்திருக்கிறது. மிரட்டல் இல்லையென்றாலும் ஒளிப்பதிவு உறுத்தல் இல்லாமல் இருக்கிறது. மொத்தத்தில் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் ஹாலிவுட்டில் பணிபுரிந்து வந்திருப்பது மேக்கிங்கில் அப்பட்டமாக தெரிகிறது.

தீபக், ஜாக்குலின் கொடுத்த கதாபாத்திரத்தை சரிவர செய்துகொண்டு வர, மைம் கோபி வந்ததும் மொத்த படத்தையும் தோள் மேல் சுமந்து செய்கிறார். அமர்க்களமான நடிப்பு, மாடுலேஷன் என அசத்திவிட்டார். பேயிடம் அடி வாங்கும்போதும் மீண்டும் சென்று மிரட்டும் போதும், பயந்து ஓடும்போதும் எதார்த்த மனிதனாகவே இருந்திருக்கிறார்.லிவிங் டூ கெதர் என்ற உறவுமுறை தவறானது அல்ல. ஆனால் அப்படி வாழ்பவர்கள் எந்த மாதிரி தவறுகளை செய்கிறார்கள் என சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஆண்- பெண்ணுக்கிடையே இருக்க வேண்டியது அளவுக்கு மீறிய காதல் மட்டுமல்ல, அடிப்படை நம்பிக்கையும் தான் என்கிறது. பெண்களை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டு ஓடும் ஆண்கள், குழந்தையை பெற்றுவிட்டு அசால்ட்டாக குப்பைத் தொட்டியில் விசிறிவிட்டுச் செல்லும் பெண்கள் என தவறான வழியில் செல்பவர்களுக்கு சிறு உதறலை ஏற்படுத்தத் தவறாது உனக்கென்ன வேணும் சொல்லு?

உனக்கென்ன வேணும் சொல்லு - குழந்தையின் பாசப் போராட்டம்! 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : ராஜன் Date :10/27/2015 12:38:04 PM
//லிவிங் டூ கெதர் என்ற உறவுமுறை தவறானது அல்ல// தமிழ் ... தமிழ் என்று மார் தட்டும் நம்மை அந்நிய கலாச்சாரம் எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது. தமிழா உனது கலாசாரம் நாகரீகமானது அதை உலகுக்கு பரப்பு ! அந்நிய கலாச்சாரத்தை தேடிசெல்லாதே.