விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................

கிருமி - விமர்சனம்!

கிருமிகள் ஒன்று சேர்ந்தால் எப்படி உடல் கெட்டுப் போகிறதோ, அதே மாதிரி தான் கிரிமினல்கள் ஒன்று சேர்ந்தாலும் நாடு கெட்டுப்போகும். அப்படிப்பட்ட கிரிமினல்கள் ஒன்று சேர்ந்து பொதுமக்களை பலி வாங்கும் கதை தான் அனுசரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிருமி. ’காக்கா முட்டை’ என்ற அல்டிமேட் யதார்த்த திரைப்படத்தைக் கொடுத்த இயக்குனர் மணிகண்டனின் கதை கிருமி.’லைஃப் நல்லாவும் இல்லாம, டல்லாவும் இல்லாம டபாய்க்கிது. ஒன்னும் பீத்திக்க இல்லாம இன்னாத்த நான் பாட, போரா கீது’ என நண்பர்களுடன் பாட்டு பாடி, சூது ஆடி வாழ்ந்து வருகிறார் கதிர். அக்கா மகள் ரேஸ்மியை மணந்து ஒரு குழந்தைக்கும் தகப்பனாகிவிட்ட கதிர் பொறுப்பில்லாமல் சுற்றி வருவதைக் கண்டு மனம் களங்குகிறார் போலிஸ் இன்ஃபார்மர் சார்லி. போலிஸில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கதிரை உள்ளே அனுப்புகிறார்.

சரியான இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை, நோ பார்க்கிங்கில் இருப்பதாகச் சொல்லி கடத்திச் செல்லும் போலிஸுக்கு உதவி செய்யும் டீமில் கதிருக்கு வேலை கிடைக்கிறது. கதிரின் துறுதுறுவென்ற நடவடிக்கைகளால் போலிஸிடமிருந்து சில மரியாதைகள் கிடைக்க ’நான் பறக்க, இறக்கை நூறா முளைக்க.... நாள் முழுக்க, மெதப்பா இருக்க’ என பாட்டு பாடி மெதப்புடன் அலைகிறார். 'போலிஸ் கூட இருக்கோம்னு ரொம்ப ஆடாதடா. அது ஒரு பெரிய சிஸ்டம். உள்ள போனவன் திரும்ப வந்ததில்ல’ என சார்லி அட்வைஸ் செய்ய, அதை ஏற்க மறக்கிறது பறந்துகொண்டிருக்கும் கதிரின் மனது.துரும்பை எடுத்து போட்டாலும் தனது நிலை உயர்வதைக் கண்ட கதிரின் மனம் மேலும் மேலும் ஏதாவது செய்யவேண்டும் என்ற பேராசையையும், சீக்கிரம் வளர வேண்டும் என்ற சுயநலத்தையும் அதிகப்படுத்துகிறது. ஒருமுறை சீட்டு க்ளப்பில் ஏற்பட்ட பிரச்சனையில் அடி வாங்கிய கதிர், அடித்தவனை பழி வாங்க க்ளப் பற்றிய தகவல்களை போலிஸிடம் போட்டுக் கொடுக்கிறார். இதுதான் சாக்கு என வேற ஏரியா சர்க்கிளில் வரும் க்ளப்பில் சோதனை நடத்தி 25 லட்ச ரூபாயை அபேஸ் செய்கிறது போலிஸ் தரப்பு. மிகப்பெரிய அமவுண்ட் என்பதால் பிரச்சனை வேற லெவலுக்கு மாற, சார்லி காவு கொடுக்கப்படுகிறார் கதிரின் கண் முன்பே. தன்னால் தான் சார்லி கொல்லப்பட்டாரா என்ற குற்ற உணர்ச்சியும்... அடுத்து நான் தானா என்ற மரண பயமும் கதிரை கிட்டத்தட்ட பைத்தியமாக்க சாதாரண மனிதனை போலீஸும் ரௌடிகளும் கிருமிகளாக துரத்துகின்றனர். 

கதாசிரியர் மணிகண்டன், இயக்குனர் அனுசரன் இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல் தான் கிருமியின் வெற்றி. திரைக்கதை வேகத்தில் மணிகண்டன் முன்னே சென்றால், காட்சிப் படுத்துதலிலும், எடிட்டிங்கிலும் பிரம்மிக்க வைக்கிறார் அனுசரன். அருள் வின்செண்ட் கேமராவால் எடுத்தாரா? கண்களால் எடுத்தாரா? என்று தோன்றுகிறது. வெற்றியில்இசையமைப்பாளர் கே-வின் பங்கு அதிகம். பின்னணி இசை இருக்கு ஆனா இல்ல என சொல்வது மாதிரி தினம் கேட்கும் சத்தங்களால் பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். ’நானல் பூவாய் நாணம் அசைந்தாட’ பாடல் அவருக்கு என்றும் ஒரு அடையாளமாய் இருக்கும்.கேர்ள் ஃப்ரெண்ட் வீட்டில் இருக்கும் போது, பெற்றோர்கள் வந்ததும் பைப் வழியே இறங்குவது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யாரையாவது போட்டுக்கொடுத்து தன்னிலை உயர்த்திக்கொள்ளும் சுயநலம் பிடித்த மனித குணத்தை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்கள். நானல் பூவாய் பாடல் ஒரு காதல் பாடலை எப்படி சிறப்பாக படமாக்க முடியுமென்பதற்கு உதாராணம். காதலர்கள் பாட்டுன்னாலே சங்கடப்பட வைக்கும் காலத்தில் கணவன் - மனைவி காதலை அழகாக படமாக்கியிருக்கிறார் அனுசரன். இயல்பாக தினமும் கடந்து செல்லும் கதாபாத்திரங்களை திரையில் காட்டினாலும், அவர்களது தன்மை மாறாமல் சாதாரண குடிமகனாகவே வலம் வர செய்திருக்கிறார். ஹீரோயிசம், தலைவன், சூப்பர் ஹீரோ என்றெல்லாம் மெனக்கெட வைக்காமல் ‘இதான். இவ்வளவு தான்’ என்று மிகவும் சாதாரணமாக படத்தை முடித்திருக்கிறார்கள்.இக்கால சதுரங்க வேட்டையில் சார்லி போன்ற சிப்பாய்களை பலி கொடுத்து வாழும் போலிஸ் ராஜாக்கள் அவ்வப்போது கதிர் போன்ற ராணிக்களையும் பலி கொடுக்க தயங்குவதில்லை.

கிருமி - சமுதாயத்தின் கண்ணாடி!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :