விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :28, செப்டம்பர் 2015(20:7 IST)
மாற்றம் செய்த நாள் :28, செப்டம்பர் 2015(20:7 IST)

குற்றம் கடிதல் - ஒரு பார்வை

பார்வையாளனை குதூகலப்படுத்தும் சினிமா பல வருவதுண்டு... ஆனால், பார்வையாளனுக்கு கற்பிக்கும் சினிமா வருவது அபூர்வம். அந்த அபூர்வ சினிமாக்களில் ஒன்றாக இடம்பிடிக்கிறது ‘குற்றம் கடிதல்’. பிரம்மாண்டம் என்ற பெயரில் பல வகையான முயற்சிகளை மேற்கொள்ளும் தமிழ்த் திரையுலகில், எதார்த்த மனிதர்களை படம்பிடிக்கும் எளிமையான படைப்புகளே உண்மையான பிரம்மாண்டம் என்று பல நேரங்களில் நிரூபித்திருக்கிறது தமிழ்சினிமா.காதலுக்கு மதம் தடையாக இருப்பதால், எதிர்ப்புகளைக் கடந்து காதலனை கைபிடிக்கும் ஆசிரியயை மெர்லின். சின்ன சின்ன குறும்புத்தனங்களோடு வகுப்பறையை அழகாக்கும் செழியன் என்ற மாணவன். மேல்தட்டு வர்க்கத்தின் அலட்சியங்களை தட்டிக்கேட்கும் சமூகத்தின் மீது அக்கரை கொண்ட தோழர் ஆதவன். இந்த மூன்று பயணங்களும் ஒரு புள்ளியில் சந்திக்கிறது. நாம் ஒன்று நினைக்க, வாழ்வின் அடுத்த நிமிடம் நம் எண்ணங்களை சுக்குநூறாக்கி நம்மை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவைக்க தவறுவதில்லை. திருமணம் முடிந்த சொல்லமுடியாத மகிழ்ச்சியில் பள்ளிக்கு சென்று, அன்று மாலையே சொல்ல முடியாத துயரத்தோடு ஒரு பெண் வீடு திரும்பும் நிலை நம் இதயங்களை கனமாக்கிவிடுகிறது.

தன் பள்ளியில் படிக்கும் சக தோழிக்கு பிறந்தநாள் என்றதும் அவளுக்கு முத்தம் தருகிறான் செழியன். இது ஆசிரியைக்கு தெரியவர, அவனை அழைத்து கண்டிக்கிறார். ‘உங்க பிறந்தநாள் அன்று உங்களுக்கும் முத்தம் தருவேன் என்று தன் வழக்கமான குறும்போடு பதில் சொல்கிறான் செழியன். வகுப்பில் மற்ற மாணவர்கள் ஆரவாரத்தோடு சிரிக்க, ஆசிரியைக்கு கோபம் கொப்பளிக்கிறது. ஒரே அரை... சிறுவன் மயங்கி விழுகிறான். பூகம்பம் நிகழ்ந்த பதட்டமான உணர்வோடு நகர்கிறது திரைக்கதை.அழகு,  நிறம் சார்ந்தது அல்ல, தோற்றம் சார்ந்தது அல்ல... அது மனித குணங்களில் ஒன்று! நல்ல மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்பதை இயக்குனர் பிரம்மா அழுத்தமாக பதிவு செய்கிறார். இதை எடுத்து சாப்பிடுங்க என்று நல்லிரவு பயணத்தில் கணவன் மனைவிக்கு சாப்பிட கொடுக்கும் லாரி டிரைவர் முதல், ‘உங்களுக்கு இருக்கிற புள்ளையோட அருமை தெரியும், எங்களுக்கு இல்லாத புள்ளையோட வலி தெரியும்’ என்று உணச்சியின் வடிவமாக இருக்கும் பள்ளி தாளாளரின் மனைவி வரை பல வாகையான மனிதர்களை புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பை தருகிறது ‘குற்றம் கடிதல்’.

மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போது, நானும் வரேன் என்று சொல்லும் ஆசிரியையின் தைரியம்! மனைவியின் நிலையை அறிந்து எதுவும் செய்ய முடியாமல் தவித்த நிலையில் கணவனின் நம்பிக்கை, வார்த்தைகளால் எதுவும் பேசமுடியாமல் தவித்த செழியன் அம்மாவின் பலத்த மௌனம், அடக்கப்பட்டு கிடக்கும் நிலையில் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் உதயனின் கோபம் என எல்லாவற்றையும் கலந்து நம்மை உணர்வுகளில் துவைத்து எடுக்கிறார் இயக்குனர்.‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் அற்புதம்! ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்...’ என்ற இடம் நம் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது. ஷங்கர் ரங்கராஜன் தன் இசையால் படத்துக்கு மரியாதை சேர்த்திருக்கிறார். 

மெர்லின் டீச்சர் செருப்பில்  நீண்ட நேரமாய்  ஒட்டிக்கொடிருக்கும் பிளாஸ்டிக் கவரை கணவன் கவனித்து எடுக்கும் போது ஒரு பெரிய நிம்மதி நமக்கே வருகிறது. ‘பாலியல் கல்வி’ மாணவர்களுக்கு அவசியமானது என்ற கருத்தை படத்தில் பதிவு செய்கிறார் இயக்குனர். தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்தின் மீதும் ஓங்கி அறைந்திருக்கிறார் என்றே சொல்லத்தோன்றுகிறது. அதற்கு தனி பாராட்டுக்கள்! இன்றைக்கு இருக்கிற கல்வி முறை, மருத்துவம், சமூகம் என அனைத்தையும் கேள்வி கேட்கிறது ‘குற்றம் கடிதல்’. பல விருதுகளை வாங்கிக் குவிக்கும் இத்திரைப்படம் மக்கள் விருதையும் வாங்க வாழ்த்துகள்!படத்தின் முடிவில் நமக்கு செழியனின் அம்மாவைப் போலவே சொல்லத் தோன்றுகிறது ‘படம் நல்லா ஓடனும்... அதுபோதும்!’

குற்றம் கடிதல் - ஆசிரியர்களுக்கான பாடம்!தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :