விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :17, அக்டோபர் 2015(19:32 IST)
மாற்றம் செய்த நாள் :17, அக்டோபர் 2015(19:32 IST)

ருத்ரமாதேவி - விமர்சனம்!

13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலி நகரத்து அரசருக்கு ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. ஆண் வாரிசு இல்லாத அவருக்கு, தனது அரசாட்சி தொடரவேண்டும் என்ற பயம் உண்டாகி குழப்பத்தில் இருக்கிறார். அப்போது அங்கு வந்து சேர்கிறார் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய மார்கோபோலோ. விஷயம் அறிந்ததும் இதே நிலையில் இந்தியாவில் நடந்த சம்பவங்களை இத்தாலி அரசருக்கு விளக்குகிறார்.வழக்கமான அரசகுல பங்காலி சண்டை, எதிரி நாட்டு பகை சூழ்ந்திருக்கும் சமயத்தில் பெண்குழந்தை பிறக்கிறது காக்கத்திய தேச அரசருக்கு. விஷயம் வெளியில் தெரிந்தால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்து பிறந்தது ஆண் குழந்தை என அறிவிக்கிறார் பிரகாஷ் ராஜ். வீர வாலிபனாக வளரும் அனுஷ்காவை புரட்சி வீரனான அல்லு அர்ஜுன் தொல்லை செய்ய, சாளுக்கிய வீரபத்ரன் ராணா டகுபதி அனுஷ்காவுக்கு உதவுகிறார். பங்காலிகளின் சூழ்ச்சியால் அனுஷ்கா பெண் என்ற விஷயம் தெரிந்துவிட மதிமந்திரியான பிரகாஷ் ராஜ் தானாக அந்த விஷயத்தை சபையில் அறிவித்து அனுஷ்காவுக்கு சக்கரவர்த்தினியாக பட்டம் சூட்டுவதென பிரகடனம் செய்கிறார். பெண்ணுக்கு அடங்கி இருக்க மாட்டோம் என சிற்றரசர்கள் போர்க்கொடி தூக்க, பெண்ணால் ஆளப்படும் தேசத்திற்கு ஆபத்து நேரும் என மக்களும் எதிர்க்க அனுஷ்கா நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். அனுஷ்காவின் தந்தையைக் கொன்று நாட்டை பிடிக்க பகைவர்கள் போர் துவங்க, பங்காலிகள் சூழ்ச்சி செய்ய போர்க்களத்தில் க்ளைமேக்ஸ்.அனுஷ்கா ஆண் வேடத்திலேயே அதிக நேரம் இருந்தது. அல்லு அர்ஜூனின் வசனங்கள்(வாடா என் அரைநாக்கயிறு தாயத்து - இதெல்லாம் பஞ்ச் டையலாக்கா). மோசமான கிராஃபிக்ஸ். க்ளோஸ்-அப் காட்சிகளில் பேக்-கிரவுண்ட் மட்டும் தனியே ஆடுவதைப் பார்த்து ஸ்கிரீனில் கோளாறோ என்ற எண்ணம் தோன்றியது. சிறிது நேரத்தில் அதுவே பழகிவிடுவது எல்லாம் பெரிய மைனஸ்.

கத்தி சண்டை, யானையை அடக்குவது, பறந்து பறந்து அடிப்பது என இதுவரை எந்த கதாநாயகியும் செய்யாத வித்தைகளையெல்லாம் செய்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார் ஆண் அனுஷ்கா. பாதி படத்திற்கும் மேலாக பெண்ணாக மாறினாலும் அழகு, பேரழகு என்று வர்ணிக்கக் கூடிய விதத்தில் தேவதையாகவே வலம் வருகிறார்.பாதி படத்தில் ஆண் வேடமேற்று நடிக்கும் தைரியம் அனுஷ்காவைத் தவிர வேறு யாருக்கு வரும். பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, அல்லு அர்ஜூன், சுமன், நித்யா மேனன் என அனைத்து கதாபாத்திரங்களின் எல்லையும் வரையறுக்கப்பட்டு கையாண்ட விதம் கச்சிதமாக இருந்தாலும், கதை சொல்லத் துவங்கிய மார்கோபோலோ என்ன ஆனார், இத்தாலி நகர பிரச்சனை என்ன ஆனது என்பதெல்லாம் சொல்லாமல் விட்டது பெரும் சொதப்பல். இளையராஜா பின்னணி இசையில் பிரம்மாண்டம் சேர்த்திருக்கிறார். ’சுத்தாதடா கத்தாதடா’ பாடலும், பௌர்னமி போலே விளையாட வா பாடலும் ஓக்கே.

படக்குழுவின் முக்கிய டார்கெட் டோலிவுட் என்பதால், தமிழ் டப்பிங்கில் அவ்வளவு மெனக்கெடல் இல்லை. மொத்த படத்திலேயே அதிக சிக்கனம் காட்டப்பட்டிருக்கிறது. கிடைத்த இடத்திலெல்லாம் அனிமேஷன் காட்சிகளை சொருகி இருக்கும் இயக்குனரின் திறமை அபாரம். ருத்ரதேவனாக வீராவேசம் கொண்டு சண்டையிடும் அனுஷ்கா, தேவதையாக அந்தப்புரத்தில் ஓடி ஆடும் அனுஷ்கா, ருத்ரமாதேவியாக பகைவர்களை துவம்சம் செய்யும் அனுஷ்கா என மூன்று வித அனுஷ்கா ரசிகர்களுக்கு திகட்டாமல் கிடைப்பார்.

ருத்ரமாதேவி - அனுஷ்காவின் ருத்ர தாண்டவம்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :