விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
10 எண்றதுக்குள்ள - விமர்சனம்!

பொதுவாக பயணம் சார்ந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கவே இயக்குனர்களுக்கு அசாத்திய தைரியம் வேண்டும். கடந்து செல்லும் இடங்களுக்கு ஏற்ப ரசிகர்களின் மனோபாவத்தை மாற்றினால் தவிர படத்துடன் அவர்களை ஒன்றியிருக்க வைக்கமுடியாது. இதை மனதில் பதித்து திரையில் கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.ஓபனிங்கிலேயே தாழ்ந்த ஜாதிக்காரர்களை வெட்டி வீழ்த்தி மனித வேட்டை நடத்துகிறது உயர் ஜாதிக்கும்பல். இயக்குனர் கையிலெடுத்திருப்பது ஜாதிப்பிரச்சனை என்று புரிந்துகொண்டு படத்திற்குள் ஐக்கியமானதும், உத்திரகாண்டிலிருந்து சென்னை வந்து காமெடி, காதல், ஆக்‌ஷன் என நுழைகிறார். பணம் கொடுத்தால் எதையும், எங்கேயும் காரில் டெலிவரி செய்துவிடும் சிறந்த காரோட்டி விக்ரம். 

பெரிய அளவில் கைமாறும் பொருளை விக்ரமிடமிருந்து திருட நினைக்கும் ரௌடி பசுபதி, விக்ரமின் அசாத்திய திறமை கண்டு வியந்து தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். காரை திருடிவரச் சொல்லிவிட்டு, அதில் வைரம், போதை மருந்து, கருப்புப் பணம் என கடத்தி பணம் சம்பாதிக்கிறார் பசுபதி. இது தெரியாமல் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் விக்ரம், பார்ட் டைம் வேலையாக ட்ரைவிங் ஸ்கூல் ஒன்றில் கார் ஓட்ட சொல்லித்தருகிறார். 15 முறை பெயிலாகி 16-வது முறையாக விக்ரமின் ட்ரைவிங் ஸ்கூலில் வந்து சேர்கிறார் சமாந்தா(படத்துல அவர் பெயர் ஷகீலா).

 

ரிவர்ஸ் கியருக்கு பதிலாக முதல் கியர் போடுவது, காரை ஸ்டார்ட் செய்யாமல் வாயிலேயே வண்டி ஓட்டுவது என தொல்லைகள் கொடுக்க விக்ரம் ட்ரைவிங் சொல்லித்தர முடியாது என சொல்லிவிடுகிறார். இப்படி நாம் சமந்தாவின் அட்டூழியங்களை ரசித்துக்கொண்டிருக்கும் போதே, அவரைக் கடத்திவரச் சொல்லி பசுபதிக்கு ஆர்டர் வருகிறது நார்த் இந்தியாவிலிருந்து. அனாதை சமாந்தா அவ்ளோ பெரிய ஆளா என நாம் வியக்கும் போதே, பசுபதி சமந்தாவைக் கடத்திவிட விக்ரம் அந்த காரை உத்திரகாண்டிற்கு கொண்டு செல்கிறார்.

ஆந்திராவில் விக்ரமின் மொபைலும், பணமும் திருடப்படுவதற்கும் - சமந்தா விக்ரமுக்கு ஏற்கனவே தெரிந்தவர் என பசுபதிக்கு தெரிவதற்கும் நேரம் சரியாக இருக்க விக்ரமைத் தேடி தெற்கிலிருந்து பசுபதி டீமும், வடக்கிலிருந்து மெயின் வில்லனின் டீமும் செல்கிறது.(கானா கானா தெலுங்கானா பாட்டுல சார்மியின் ஆட்டம் அபாரம். அதில் நடக்கும் போட்டிகளுக்கான பந்தயம் அடடா ரகம்!) சென்னையிலிருந்து உத்திரகாண்ட் செல்வதற்குள் விக்ரம்-சமந்தா இருவருக்குமே தெரியாமல் அவர்களுக்குள் காதல் உருவாகிவிட, இருவரின் ப்ளாஷ்பேக்கும் கண்கலங்க வைக்கிறது.சமந்தாவுக்காக நெட்டை வில்லனுடன் சண்டையிட்டு அவனை ரத்தம் கக்க வைக்கும் விக்ரமுக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி. பசுபதி போல நெட்டை வில்லனும் ஒரு ஏஜெண்ட் தானே தவிர மெயின் வில்லன் இல்லை என தெரிகிறது. ‘இது போனா முடியுற பிரச்சனை இல்லை. முடிச்சிட்டு போக வேண்டிய பிரச்சனை’ என்று தனது முதல் பஞ்ச் டையலாக்கை பேசி உத்திரகண்டிற்குள் சமந்தாவுடன் நுழைகிறார் விக்ரம்.  எந்த வில்லனையும் விக்ரம் கொல்லாதது... யூகிக்க வழியே இல்லாமல் வித்தியாசமான ட்விஸ்ட் வைத்தது... சமந்தாவுக்கு புது கதாபாத்திரம் கொடுத்தது... போன்ற பல பாராட்டுக்கு ஆளாகிறார் விஜய் மில்டன்.

’நீ எல்லாத்தையும் பத்து என்றதுக்குள்ள முடிச்சிருவியா???? அய்ய்யே...’ என்று சமந்தா சொல்லும் வசனம் எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்க வைக்கும் காட்சி. எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் சமந்தாவிற்குப் பின்னால் வழக்கமான சோகம். குறும்புப் பார்வை, குதர்க்கப் பேச்சு, குரங்கு சேட்டை என வலம் வரும் சமந்தா, க்ளைமேக்ஸில் அப்பப்பா!விக்ரம் இயல்பாகவே ஜாலியான கேரக்டர் என்பதால், அவரது கதாபாத்திரத்துடன் பச்சக் என ஒட்டிக்கொண்டார். முதல் பாதியில் பசுபதியிடம் தங்கச்சியைப் பற்றிச் சொலும்போது நமக்கே சிரிப்பு வருவதும், இரண்டாம் பாதியில் சமந்தாவிடம் சொல்லும்போது கண்கள் கலங்குவதும் விக்ரமின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி. விக்ரமும் சமந்தாவுமே எல்லா காமெடி வசனத்தையும் பேசிவிடுவதால், முண்டாசுபட்டி புகழ் முனிஷ்காந்தை டம்மி ஆக்கிவிட்டார்கள்.

இம்மான் தனது இசையால் கட்டிப்போடாமல் இருந்திருந்தால், முதல் பாதியின் முடிவிலேயே ரசிகர்களின் கோபத்திற்கு இயக்குனர் ஆளாகியிருப்பார். கதை விறுவிறுப்பு பெறும் சமயங்களில் எக்ஸ்ட்ரா ஆயில் போட்ட கார் மாதிரி இசையால் இன்னும் வேகப்படுத்துகிறார் இம்மான். ’வ்ரூம் வ்ரூம்’ பாடலில் ஜேம்ஸ் பாண்ட், விராட் கோலி, கமல்ஹாசன் என பெயர்களை உபயோகப்படுத்தி மூன்று தலைமுறையையும் கவனிக்க வைத்துவிட்டார் மதன் கார்க்கி. கானா கானா தெலுங்கானா பாடலில் திடீரென அஞ்சான் பட ஏக் தோ தீன் பாட்டு மியூசிக் வரவும், சமந்தா எண்ட்ரியா? என்று பார்த்தால் சார்மி வருகிறார். அந்த பின்னணி இசையை ஏன் இம்மான் வைத்திருந்தார் என விளங்கவில்லை. ’ஆனாலும் இந்த மயக்கம்’ பாடல் நீண்ட பயணத்தின்போது கிடைத்த ஜன்னலோர இருக்கை மாதிரி அத்தனை சுகம்.விஜய் மில்டன் இன்னும் கொஞ்சம் பிசகியிருந்தாலும் இந்த ரயிலை தவறவிட்டிருப்பார். 10 எண்றதுக்குள்ள ஹீரோவை எதை வேணும்னாலும் செய்ய வைக்கலாம் சார். படம் எடுக்க முடியுமா? ஏதோ ஒரு அவசரம் படத்தில் தெரிகிறது. அடுத்த படத்தை 100 எண்றதுக்குள எடுத்து கோலி சோடாவை விட நல்ல படத்தை கொடுங்கள். எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரே நாளில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் இரண்டு திரைப்படங்களும் ரிலீஸாவதால் ஏற்பட்ட நெருக்கடியாக இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது. பெரிய பில்டப் கொடுத்த வில்லன்களை விக்ரம் அசால்டாக அடித்துப்போடுவது நமக்கே உறுத்தலாக இருக்கிறது. ஓ இவர் தான்  பத்து எண்றதுக்குள்ள முடிச்சிருவாரே!

இன்றுவரையிலும் வடக்கு இந்தியாவில் ஜாதி, மதம் என்ற பிரிவினையின் பேரில் நடக்கும் கொடூரங்களையும், அவற்றை நடத்தும் குற்றவாளிகளையும் கொல்ல சென்னையிலிருந்து ஒருவனை அனுப்பியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். ’பெண்கள் என் இனத்தின் காவல் தெய்வம்’ என்று சொல்லும் வில்லன், இன்னொரு பெண்ணை பலியிட நினைக்கும் தவறை அழுத்தமாக சொல்லாமல் விட்டுவிட்டார். ஹாலிவுட்டின் ட்ரான்ஸ்போட்டர் பட பாணியில் தங்கச்சி செண்டிமெண்ட், ஜாதிப் பிரச்சனை, தண்ணி பிரச்சனை என சிலவற்றை சேர்த்து தமிழ் ரசிகர்களுக்கு கவர்ச்சியான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். முதல் இரண்டு கியரில் நன்றாக பிக்-அப் ஆகும் திரைக்கதை, மீண்டும் கடைசி இரண்டு கியரில் தான் டாப் ஸ்பீடை தொடுகிறது. நடுவில் இருந்த இரண்டு கியரின் தடுமாற்றம் படத்தின் வேகத்தடை.

10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : பிரபு Date :10/29/2015 11:50:59 AM
படம் மரண மொக்கை.