விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :19, நவம்பர் 2015(16:1 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2015(16:1 IST)தூங்காவனம் - ஒரு பார்வை!

த்தாலியன் டிலைட், ப்ரெஞ்சு ஃப்ரை போன்ற அயல்நாட்டு உணவுகளை, தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடிய விதத்தில் மண்பாண்டங்களில் வைத்து பரிமாறுவது கமலின் வழக்கம். அப்படி கமல் சுடச்சுட கொடுத்திருக்கும் உணவு தூங்காவனம்.முதல் காட்சியில் நானே திருடன், நானே போலிஸ் என சொல்லிவிட்டு கதைக்கு நகர்கிறார். பணத்தாசையால் கடத்தல்காரர்களிடமிருந்து போதை மருந்தை கமலும், யூகி சேதுவும் அபேஸ் செய்துவிட. போதை மருந்துக்கு சொந்தக்காரரான பிரகாஷ் ராஜால் கமலின் மகன் கடத்தப்படுகிறார். போதைப் பொருளை திருப்பித் தர பிரகாஷ் ராஜின் நைட் க்ளப்பிற்குள் கமல் நுழைந்ததும் படம் துவங்குகிறது. கமலை பிடிக்க போதை தடுப்புப் பிரிவைச் சேர்ந்த த்ரிஷா, கிஷோர் இருவரும் உள்ளே செல்ல சூடுபிடிக்கிறது திரைக்கதை. மகனை மீட்பதற்கு முன்பே போதை மருந்தை கமல் க்ளப்பிற்குள் தொலைத்துவிட எக்ஸ்பிரஸ் வேகத்தை அடைகிறது திரைக்கதை.

இரண்டு நொடிகளுக்கும் குறைவாக காட்டப்படும் 'This Film Based on...' என்ற டைட்டில் கார்டை பலரும் பார்த்திருக்க முடியாது. NUIT BLANCHE என்ற ப்ரெஞ்சு திரைப்படத்தின் தழுவல் தான் தூங்காவனம். NUIT BLANCHE (A Sleepless Night - தூங்காத இரவுகள்) என்பது ஆங்கிலத்தில் INSOMNIA(தூக்கமின்மை). கமல் படத்தில் வரும் நைட் க்ளப்பிற்கு INSOMNIA என்ற பெயர் வைத்து தனக்கு ஒரு நல்ல கதையை கொடுத்த படத்திற்கு நன்றிக்கடனை செலுத்திவிட்டார்.பிரகாஷ் ராஜுடன் பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே போகும் போது உணர்ச்சிவசப்பட்டு பேசாமல் ஒரு இடைவெளி விட்டு பார்வையால் பதில் சொல்லி திரும்பும் காட்சியில் அவருக்கு பின்னால் ’உலகநாயகன்’ என்ற பெயர் பிரம்மாண்டமாக எழுவதை உணரமுடிகிறது.

அத்துமீறும் காதலனிடம் ’நான் நல்ல குடும்பத்து பொண்ணுடா’ என சொல்லும் மதுஷாலினி, கமல் காப்பாற்றிய பின்  பசக் பசக் என அடிக்கும் லிப்-லாக் முத்தத்தில் மெய்மறந்து நிற்பது அதிசயம் ஆனால் உண்மை. பாபநாசத்தில் கமலுக்கு இணையாக பேசப்பட்ட ஆஷா சரத் கதாபாத்திரம் வேதனை. ‘அவன் உங்க பையன் திவாகர்’ என்றதும் ‘எனக்கு அதுல சந்தேகம் இல்ல’ என கமல் கூறும் பதிலுக்கு  ஆஷா சரத் கொடுக்கும் ரியாக்‌ஷன் ஆறுதல்.கதைப்படி கமலை பிடிக்க முயற்சி செய்யும் பிரகாஷ் ராஜ், த்ரிஷா, கிஷோர் ஆகியோர் நடிப்பிலும் அவரை விரட்டிகொண்டே செல்கிறார்கள். கமல் மார்பின்மீது காலை வைத்து பேசும் பிரகாஷ் ராஜ், கமலுடனான சண்டைக் காட்சியில் இரண்டு நிமிடங்கள் சிங்கிள் டேக் நடித்திருக்கும் த்ரிஷா, அவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டு படபடப்பை காட்டாமல் சுற்றித்திரியும் கிஷோர் என மிரட்டுகிறார்கள்.

நடிகர்களை மீறி அந்த க்ளப் கூட ஒரு கதாபாத்திரமாக உயிர் பெற்றிருப்பது படத்தின் சிறப்பு. படம் பார்த்தவர்களைக் கேட்டால் எந்த கதவைத் திறந்து எந்த ரூமுக்கு செல்லலாம் என சரியாக சொல்லும் அளவிற்கு பதிந்துவிடுகிறது க்ளப். ஒவ்வொரு முறையும் புதிய இடத்திற்கு சென்றது போன்ற உணர்வை கொடுக்கும் ஏற்கனவே பார்த்த இடங்கள் ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்று. 

வசனங்களை விட ஓட்டம் அதிகம் என்பதால், கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளை ’நச்’ வசனங்களால் பயன்படுத்திக்கொண்ட சுகாவும், எப்போதும் கவனிக்கப்படும் பின்னணி இசையில் அதிக கவனம் எடுத்துக்கொண்ட ஜிப்ரானும் பாராட்டுக்குறியவர்கள். பல இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்ற வாழ்த்துக்கள் ஜிப்ரான். இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா கமல் என்ற கல்லூரியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் வெள்ளித்திறையில் தெரிகிறது.

‘படத்துல நான் ஏன்டா கருத்து சொல்லனும்’ என போகிற போக்கில் ஒரு போடு போட்டுவிடுகிறார் கமல். தன்னை கெட்டவனாக நிரூபித்துவிட்டு, பிறகு நல்லவன் என நம்பவைக்க இரண்டு மணிநேரம் எடுத்துக்கொள்கிறார். பாசமே இல்லாத தந்தையாக காட்டிக்கொண்டு, பிறகு மகனைக் காப்பாற்றி தனது பாசத்தையும் உணரவைக்கிறார். முதல் காட்சிக்கும் கடைசி காட்சிக்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள துவக்கத்திலிருந்தே படம் பார்க்கவேண்டியது மிக அவசியம். தவறவிட்டால் கமல் பொறுப்பல்ல. 

ஒரே நாளில் நடக்கும் படியாக எடுக்கப்படும் படங்களுக்கே உரிய அதிவேக திரைக்கதை, கதாபாத்திர தேர்வு, ஸ்பீட் ப்ரேக்கர் பாடல்கள் தவிர்த்தல், ஒரே மாதிரியான காட்சியமைப்பை தவிர்த்தல் என தூங்காவனம் திரையில் தோன்றும் இரண்டு மணிநேரமும் ரசிகர்களை தூங்க வைக்காத படம்.

தூங்காவனம் - த்ரில் அனுபவம்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]

Name : jayam Date :11/27/2015 8:29:42 AM
வணக்கம் வேதாளத்தை விமர்சனம் செய்ய தகுதி இல்லையோ
Name : ஆதவன் Date :11/23/2015 11:17:49 PM
கமல் சினிமாவில் புரட்சி செய்கிறேன்.புதுமை செய்கிறேன் என்று நினைத்து மேல்நாட்டு குப்பைகளை தமிழ் நாட்டில் சேர்க்கிறார். லிங்குசாமியின் நிலை பரிதாபாத்திற்குரியது கமல் அவர்களே நீங்ககள் லிங்குவிடம் வேண்டிய பணத்தில் பாதியாவது திருப்பிக்காெ டுப்பதே அழகு
Name : விஜய் ஆனந்த் Date :11/21/2015 1:08:30 PM
அண்மைக்காலமாக இப்படியொரு கேள்வியை கேட்க வைத்துவிட்டது கமலின் முயற்சிகளும் முடிவுகளும்! உத்தம வில்லன் படம்தான் லிங்குசாமி என்ற தயாரிப்பாளரை நிலைகொள்ளாமல் ‘நீந்து’சாமி யாக்கியது. இன்னமும் நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் அவர். அதற்கப்புறம் கமல் நடித்த பாபநாசம், நல்லவேளை… அந்த மலையாள படத்தின் ஒரிஜனல் இயக்குனரே உள்ளே வந்ததால் தப்பித்தது. இல்லையென்றால் என்னாகியிருக்குமோ? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் அவரது ‘தூங்காவனம்’ படம் வெளிவருவதற்கு முன் அப்படியொரு பில்டப், பாராட்டு பத்திரங்கள் என்று களை கட்டியது. படம் முப்பத்தைந்து நாளில் முடிக்கப்பட்டதாகவும், நல்ல முன் தயாரிப்பு முயற்சி இருந்தால் அது சாத்தியமே என்றெல்லாம் கமல் பேச பேச பரவசம் ஆனது ஃபீல்டு. (இதையேன் உங்க உத்தம வில்லன்லேயும், விஸ்வரூபத்துலேயும் காட்டல? என்று எந்த நாட்டாமையும் வாய் திறக்கவில்லை) முப்பத்தைந்து நாளில் எடுத்ததன் விளைவை நன்றாகவே (?) அனுபவித்தார்கள் ரசிகர்கள். தமிழ்சினிமா ரசிகனுக்கு பொருந்தாத கதை. பொருந்தாத களம் என்று வழக்கம் போல கமலின் அறிவாற்றல் வெளிப்பட, எல்லாரும் பயந்த மாதிரியே ஆனது