விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!

வேற்று மொழி திரைப்படத்தை ரீமேக் செய்யும் போது அதீத பொறுப்புணர்வும், ஒரிஜினல் படத்தின் கதை சிதைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் கடமையுணர்வும் இருக்கவேண்டும். அப்படி மிக கவனத்துடன் செதுக்கப்பட்டிருக்கும் படைப்பு ஒரு நாள் இரவில்.கல்யாண வயதில் மகள்களை வைத்துக்கொண்டு ஒரு தகப்பன் செய்யத் துணியும் ஒரு செயல், அவரை மட்டுமில்லாது அவரது குடும்பத்தையும் எந்த அளவிற்கு பாதிக்கக்கூடியது என செய்யாமல் சொல்லியிருக்கின்றனர். சிங்கப்பூர் ரிட்டர்ன் சத்யராஜ். தன் மகள் பள்ளி நண்பனுடன் பேசுவதைக் கண்டு உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். இந்த விபரீதமான நிகழ்வு மனைவியுடன் வாக்குவாதத்தில் முடிய மனக்கசப்புடன் வீட்டைவிட்டு வெளியேறும் சத்யராஜ் பஸ் ஸ்டாண்டில் பாலியல் தொழிலாளியான அனு மோல் நிற்பதை பார்க்கிறார். மனக்கசப்பும், குடிபோதையும் மூளையை சுழற்ற அனு மோலை ஆட்டோவில் ஏற்றி தன் வீட்டிற்கு எதிரே இருக்கும் தன் கடைக்குள் சென்று வெளியே பூட்டி சாவியை விசுவாசியான ஆட்டோக்காரனிடம் கொடுக்கிறார். பரோட்டா வாங்கச் செல்லும் ஆட்டோக்காரன் வருண் போதையில் போலிஸில் மாட்டிக்கொள்ள சத்யராஜின் கதை திண்டாட்டமாகிவிடுகிறது. திரைக்கதை அமைப்பும், கையாளப்பட்ட கதாபாத்திரங்களும் மலையாளத்தில் SHUTTER திரைப்படத்தின் வெற்றியிலேயே பறைசாற்றப்பட்டுவிட்டதால், ‘ஒரு நாள் இரவில்’ படத்தின் மேக்கிங்கும், நடிகர்களின் பங்களிப்பும், இசையும் மிக பலமாக அமைந்துள்ளதை குறிப்பிட்டே ஆகவேண்டும். சத்யராஜ், அனுமோல், யூகி சேது, வருண் ஆகிய நால்வரின் கதாபாத்திரங்களுக்கு இடையே திரைக்கதை என்ற பந்து மாட்டிக்கொண்டுவிட்டது. ஒவ்வொருவரும் தங்களது திறமையால் மிக வேகமாக அந்த பந்தை உருட்டுகின்றன. நடுத்தர வயதைத் தாண்டும் தந்தையாக, கணவனாக கவனமாக நடித்திருக்கிறார் சத்யராஜ். எப்போதும் பதட்டம், யாரையும் நம்பாத அவநம்பிக்கை என தனக்கான இடத்திற்குள் ஆட்சி செலுத்தியிருக்கிறார்.அனுமோல் தமிழ்த் திரையுலகத்துக்கு புதியவர் அல்ல. ஆனால் இந்த படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமையும். பாலியல் தொழிலாளியாக பல பொய்களை சொல்லி சத்யராஜிடம் பணம் பிடுங்கி தனது தோழனுக்காக அந்த பணத்தை கொடுக்கும் காட்சியில் தன்னை நிரூபித்திருக்கிறார். யூகி சேது தொடர்ந்து அட்டகாசமான கதாபாத்திரங்களில் நடித்து நம்மை மகிழ்விக்கிறார். இதேபோல தொடர்ந்து நடிக்க வேண்டும்.

இயக்குனர், எடிட்டர் ஆண்டனி தான் இந்த திரைப்படத்தின் மொத்த வெற்றிக்கும் காரணம் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் அவரது பங்கு அதிகம். கதாபாத்திரங்களுக்கு ஏற்ற கலைஞர்களை தேர்ந்தெடுத்ததில் முதல் வெற்றி. தங்களது கதாபாத்திரத்தின் தன்மையையும், அந்த கதாபாத்திரம் கொடுக்கவேண்டிய பங்களிப்பையும் அளவாய் வாங்கியிருப்பது இரண்டாவது வெற்றி. அன்றைய படப்பிடிப்பை அன்றே எடிட் செய்து தேவையான காட்சிகளை மட்டுமே எடுத்து தயாரிப்பாளரின் இயக்குனராக இருந்தது மூன்றாவது வெற்றி. அத்தனைக்கும் மேலாக ஒரிஜினல் படத்திலிருந்து தமிழ் ரசிகர்களுக்காக மாற்றுகிறேன் என்று சொதப்பி வைக்காமல் சொல்ல வந்த கருத்தை நெற்றிப்பொட்டில் அடிக்குமாறு சொல்லியிருப்பது மாபெரும் வெற்றி. மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மறக்காமல் மகள்களுடன் தியேட்டருக்குச் சென்று படம் பாருங்கள். படம் சொல்லும் மெஸேஜ் அவர்களுக்கானதல்ல உங்களுக்கானது.

ஒரு நாள் இரவில் - மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்காக!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :