விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
144- விமர்சனம்!

144 என்றதும் மிக பயங்கரமான தடை உத்தரவும், மதுரை என்றதும் அருவாளும் தான் நியாபகம் வரும். இந்த பொதுவான எண்ணத்தை உடைக்க முற்பட்டிருக்கிறது 144 திரைப்படம். புதுமுக இயக்குனர் மணிகண்டன் தான் கையிலெடுத்த விஷயத்தை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்.எவ்வளவு சிக்கலான பூட்டாக இருந்தாலும் அசால்ட்டாக திறந்துவிடும் திறமை கொண்ட சிவாவிற்கு, போலிஸிடமிருந்து தப்பிக்கமட்டும் தெரியாது. பெரிய அளவில் திருடி செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஊர் பெரிய மனிதனான ராயப்பனின் நகைக்கடையை குறி வைக்கிறார். கார் ரேஸில் ஆர்வம்கொண்ட ராயப்பனின் சிறந்த ட்ரைவர் அசோக் செல்வன். இதனால் ராயப்பனுடன் மட்டுமல்ல அவரது மகள் ஸ்ருதியுடனும் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுவிடுகிறது. ராயப்பன் சொல்லும் வேலைகளை ஏன் என கேள்வி கேட்காமல் திறம்பட செய்துமுடிக்கும் விசுவாசி வாய் பேசமுடியாத முனிஷ்காந்த். ராயப்பன் ஏதோ பெரிய விஷயத்தை தன்னிடமிருந்து மறைப்பதை அறிந்து பின்தொடர, பெரும் தங்ககட்டிகளை ராயப்பன் பதுக்கிவைப்பதை தெரிந்துகொள்கிறார் முனிஷ்காந்த். 

எப்போதும் ஒத்துப்போகாத இரண்டு ஊர்கள் எரிமலைக்குண்டு, பூமலைக்குண்டு. இரண்டு ஊரிலும் செல்வாக்குள்ள அரசியல்வாதி ராயப்பன். தற்செயலாக தன்னிடம் வந்த தங்கக்கட்டிகளை விநாயகர்சிலைக்குள் வைத்து, சிலையை கண்ணாடியால் உருவாக்கிவிடுகிறார். விநாயகரை கம்மாய்க்குள் கரைக்கவேண்டுமென்று எரிமலைக்குண்டு மக்களும், கரைக்கக்கூடாது என பூமலைக்குண்டு மக்களும் மோதிக்கொள்ள 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. திவ்யாவின் திருமணத்திற்கு ராயப்பன் ஏற்பாடு செய்ய, திவ்யாவை ஊருக்குள் மறைத்துவைத்து ராயப்பனிடம் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிடுகிறார் அசோக் செல்வன். காதலியான ஓவியாவின் உதவியுடன் ராயப்பனின் நகைக்கடையை கொள்ளையடித்துவிட்டு, ஓவியாவை ஊருக்குள் வைத்துவிட்டு வழக்கம்போல் போலிஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்து போட சென்றுவிடுகிறார் சிவா. ஊருக்கு வெளியே சென்ற இருவரும் ராயப்பனுடன் மாட்டிக்கொள்ள அவரிடமிருந்து தப்பி ஊருக்குள் வந்துவிடுகின்றனர். அதே சம்யம் தங்கக்கட்டிகளை திருடுகொடுத்த டேஞ்சரஸ் தாதா உதய்மகேஷும் ஊருக்கு வந்து சேர்கிறார். உதய்மகேஷ் ராயப்பனை துரத்த, பெற்ற பெண்ணையும், நகைகளையும், தங்கக்கட்டிகளையும் பறிகொடுத்துவிட்ட ராயப்பன் சிவா, சோக் செல்வன், முனிஷ்காந்த் ஆகியோரை துரத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஊருக்குள் இவர்கள் ஓடும் ஓட்டம் தான் படத்தையும் வேகமாக ஓடவைக்கிறது.வழக்கம்போல தனது பிரத்யேக நடிப்பால்(!) அதிகம் ஸ்கோர் செய்பவர் சிவா தான். எதிர்பார்க்காத சமயத்தில் அவர் செய்யும் சேட்டைகள் குபீர் சிரிப்புக்கு கேரண்டி. முனிஷ்காந்தும் ஓவியாவையும் கண்காணிக்கும் சமயங்களில் அசால்ட்டாக அதிரவைக்கிறார். மாடர்ன் இளைஞனாகவே வலம்வந்த அசோக் செல்வன் கிராமத்து பரிதாபமான இளைஞனாக அசத்திவிட்டார். அடுத்தடுட்து இதே மாதிரியான வாய்ப்புகள் கிடைப்பது உறுதி. புதுமுக நாயகி ஸ்ருதீன் திறமைசாலியாக காணப்படுகிறார். ஆனால் இயக்குனர் அதிகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஓவியாவின் கதாபாத்திரம் அதிக வாய்ப்பு நிறைந்தது. ஆனால் அவர் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. முனிஷ்காந்தும் அவருடன் வரும் மற்ற மூவரும் மொத்தமாக பாராட்டுகளைப் பெறுகின்றனர். ஜே.சி.பி கொண்டுபோய் இன்வெர்ட்டரை திருடுவது, பொறி உருண்டை தின்பது என இவர்களது லூட்டி படம் முழுக்க இருக்கிறது. ராயப்பன் கதாபாத்திரத்தில் மதுசூதனன் பொருந்திய அளவிற்கு, ‘Feelings' ரவி கதாபாத்திரத்தில் உதய் மகேஷ் பொருந்தவில்லை. உடல்முழுக்க நோய் கொண்ட ரௌடியாகவும், வெட்டு குத்து எல்லாம் பிடிக்காமல் கோலியால் அடித்து சித்திரவதை செய்வது எல்லாம் எடுபடவில்லை.வில்லத்தனமாக பேசுவதாக இவர்கள் பேசும் வசனங்களின் தொய்வு இல்லாவிட்டால் படம் இன்னும் லந்தா இருந்திருக்கும். ஒரு காமிக் வகையான காமெடி என்பதால் சீன் ரோல்டன் கார்ட்டூன் வகை இசையை ஆங்காங்கே உபயோகித்திருக்கிறார். பின்னணி இசையில் வெளுத்துவாங்கிவிட்டார். திரைக்கதையின் வேகத்தை நமக்குள்ளும் கொண்டுவருவது பின்னணி இசைதான். பாடகராகவும், இசையமைப்பாளராகவும் தொடர்ந்து தன்னை நிரூபித்துவரும் சீன் ரோல்டன் மேலும் வளர்வார்.

ஹெலிகேம் உதவியுடன் எடுக்கப்பட்ட ஏரியல் ஷாட்கள் வேற்றுமை உணர்வை உண்டாக்கின்றன. நடிகர், இயக்குனர் ஆகியவர்களை மீறி தயாரிப்பாளர் சி.வி.குமாரின் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உள்ளது. 144 போன்று குறைந்த நாட்களில் அவசரஅவசரமாக படங்கள் எடுத்து அந்த நற்பெயரை குறைத்துக்கொள்ளவேண்டாம் என அவருக்கு சொல்ல அருகில் யாரும் இல்லை என்பது வருந்தத்தக்கது. மணிகண்டன் திரைக்கதையை கையாண்டுள்ள விதமும், எடிட்டிங்கும், பின்னணி இசையும், கதாபாத்திரங்களும் பலம் சேர்க்கின்றன.

144 - தடையில்லா ஓட்டம்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :