விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!

மல் படத்தின் மூலம் பாப்புலர் ஆன ‘இஞ்சி இடுப்பழகி’ வார்த்தை தங்கள் படத்தையும் பாப்புலராக்கும் என்று டைட்டில் வைத்ததாக இயக்குனரே சொல்லியிருந்தாலும், அனுஷ்காவின் இடுப்பை பார்த்த பிறகு தான் இந்த டைட்டிலை வைத்தாரோ எனத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 70 கிலோ இருப்பார் அனுஷ்கா. ஆனாலும் அந்த இடை வளைவும், பொலிவான தோற்றமும், அழகு பேசும் கண்களும் மாறவே இல்லை.

இரவு பார்த்து பெருமைப்பட்டுக்கொண்டு உறங்கிய முகத்தில் காலையில் ஒரு முகப்பரு தோன்றினால் எவ்வளவு அதிர்ச்சியடைவோமோ, அவ்வளவு அதிர்ச்சியை தருகிறார் புடவையில் பாதி ஸ்கிரீனை மறைத்துக்கொண்டு வரும் அனுஷ்கா. இவரது கதாபாத்திரத்தை மாதிரியான பெண்களை நாம் பெரும்பாலும் காணலாம். ஆனால் குண்டாக இருக்கிறோம் என்பதை குறையாக நினைக்காதபடி மகிழ்ச்சியுடன் அப்பாவால் வளர்க்கப்படுகிறார் அனுஷ்கா. காலத்தின் கட்டாயத்தில் அப்பா பிரிந்துவிட, அம்மாவால் வளர்க்கப்படுகிறார். 


திருமண வயது வரை மகள் குண்டாக இருப்பதை குறையாக என்னாத ஊர்வசிக்கு திருமணப் பேச்சுக்கள் தட்டிப்போக அது ஒரு குறையாக தெரிகிறது. அனுஷ்கா அடாவடித்தனத்தால் ஊர்வசி எதிர்பார்த்த எல்லா தகுதிகளும் உடைய ஆர்யாவை வேண்டாம் என்று சொல்லும்போது அனுஷ்காவே ஒரு குறையாக தெரிகிறார். பெண்பார்க்க வந்த ஆர்யாவை பல இடங்களில் தற்செயலாக சந்திக்க, பிறகு அதுவே திட்டமிட்டு தொடர அனுஷ்காவிற்குள் எக்ஸ்ட்ரா சைஸ் பீட்சா அளவுக்கு காதல் மலர்கிறது.அனுஷ்கா-ஆர்யா இடையே விவரிக்க முடியாத ஏதோ ஒரு மெல்லுணர்வு இழையோட நண்பர்களாய் தொடர்கின்றனர். அந்த சமயம் அனுஷ்காவிற்கு எதிர்பதமாக, அதாவது ஒல்லியாக... செக்ஸியாக... ஆர்யாவின் தோழியாக வரும் சோனல்(கதைப்படி வரும் பெயரான சிம்ரன் என்றே அழைப்போம்) ஆர்யாவை காதலிக்கிறார். ஆர்யாவும் தனிமையிலிருக்கும் சிம்ரனுக்கு இதழ்மூலம் ஆதரவு தர, அனுஷ்கா இதை பார்த்துவிடுகிறார். இத்தனை வருடங்களாக தனது உடலமைப்பை பற்றி கவலைப்படாத அனுஷ்கா முதல்முறையாக வெடித்து அழுகிறார். 

ஆர்யா அனுஷ்காவின் உடல்பற்றி எந்த குறையும் கூறவில்லையென்றாலும் அடிபட்ட மனது எதையும் தனக்கு நேர்மாறாக யோசித்து நொந்துகொள்கிறது. இதயத்தில் பட்ட அடியின் வலியால் துடிக்கும் அனுஷ்காவிற்கு மேலும் ஒரு அடியாக விழுகிறது, அவரது தோழி பவனி கவலைக்கிடமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல். மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொள்ள உடல் எடையை குறைக்க ‘சைஸ் ஜீரோ’ என்ற தனியார் ஃபிட்னஸ் செண்டரில் சேர்ந்த பவனி, அங்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக கிட்னியை இழந்துவிட்டதாக சொல்ல அவருக்கு நியாயம் கேட்டு புறப்படுகிறார் அனுஷ்கா. அவருக்கு உதவ வருகிறார்கள் ஆர்யாவும், சிம்ரனும். அனுஷ்கா ஒல்லி ஆனாரா? இல்லையா? படத்துல பாருங்க சார்.அழகு மட்டும் இருந்தால், இந்த காலத்தில் நடிகைகளுக்கு வாய்ப்பும் அதனால் பணமும் கிடைத்துவிடுகிறது. ஆனால் பெயர், புகழ் இதையெல்லாம் சம்பாதிக்க முயற்சியெடுக்கும் முன்பே திரைத்துறையிலிருந்து வீசியெறியப்படுகிறார்கள் பல நடிகைகள். ஆனால் அனுஷ்கா போன்ற சில நடிகைகள் தான் புதிய கதாபாத்திரத்திற்காக இத்தனை போட்டிகள் நிறைந்த திரையுலகில் தைரியமான முயற்சிகள் எடுத்து வெற்றிபெற்று பெயரும் புகழும் பெருகிறார்கள். உடல் எடையை அதிகப்படுத்தியதோடு அதே உடலோடு ஒடியிருக்கிறார், ஒரு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். க்ளைமேக்ஸில் மாடியிலிருந்து இறங்கியிருக்கிறார். அந்த ஒரு பாடல் ரசிகர்கள் தவறவிட்டு விடக்கூடாத பாடல் அது.உடற்பயிற்சி, ஃபிட்னஸ் பற்றிய படம் என்பதால் அதிக ஸ்கோப் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லியிருப்பார் போல ஆர்யா. கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். சிம்ரனாக நடித்திருக்கும் சோனல் அழகாக இருக்கிறார். மிக முக்கியமான விஷயம் மாஸ்டர் பரத்தின் மாற்றம் தான். உத்தம புத்திரன் படத்தில் குண்டாக வரும் சிறுவன் நியாபகம் இருக்கிறதா? அவர் தான் அனுஷ்காவின் தம்பியாக நடித்திருக்கிறார். அந்த குரலை வைத்து மட்டும்தான் கண்டுபிடிக்கமுடியும். அந்த அளவிற்கு இளைத்து, வாலிபத்தில் நுழையும் இளைஞனாக பார்க்கவும் அம்சமாக இருக்கிறார். இந்த படத்திற்கு இவரைவிட சிறந்த தேர்வு இருக்கமுடியாது.

மரகதமணியின் பின்னணி இசை கவர்ந்த அளவிற்கு பாடல்கள் ஒட்டாமல் இருக்கிறது. அனுஷ்கா ஊர்வசியிடம் பேசும் காட்சி, ஆர்யா காதலை மறைக்கும் காட்சி, மறைக்கமுடியாமல் சொல்லிவிடும் காட்சி என பல இடங்களில் பின்னணி இசையிலேயே பட்டய கிளப்பியிருக்கிறார். அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வண்ணங்கள் தான் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தை ஒரு இந்திப் படமாக வேற்றுமைப்படுத்தி பார்க்கவைக்கின்றன.


ஏதாவது குறை சொல்லியே ஆகவேண்டுமென்றால், அனுஷ்காவின் பருமன் காட்சிக்கு காட்சி மாறுபட்டிருப்பதை சொல்லலாம். இரண்டாம் பாதிக்கு மேல் அந்த ஓட்டம் ஓடி, அவ்வளவு உடற்பயிற்சி எடுத்த அனுஷ்கா ஒரு கிலோவாவது குறைந்தார் என்று காட்டியிருந்தால் மனது சாந்தப்பட்டிருக்கும் இயக்குனர் சார். உடல் பருமனாக இருப்பது பற்றி வீட்டில் குறை சொல்ல, வெளியே குறை சொல்ல.... அதை சரி செய்ய அவர்கள் ஏதோ ஒரு நிறுவனத்தை நாடிச் செல்ல... அங்கு கொடுக்கப்படும் மருந்தால் சில வருடங்களில் ஏதோ ஒரு நோய் ஏற்பட... என எதற்கு இத்தனை பிரச்சனைகள். குண்டாக இருப்பது குறை அல்ல. குண்டாக இருப்பதை சுட்டிக்காட்டுவது தான் குறை என்றெல்லாம் வசனம் பேசாமல் காட்சிப்படுத்து புரியவைத்த இயக்குனருக்கு பாராட்டுகள். 

இஞ்சி இடுப்பழகி - அது குண்டு இல்ல, க்யூட்டு!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :