விமர்சனம்

நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
தனி ஒருவன் - மக்களை வென்றவன்!
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!

னது கற்பனைத் திறனால் பிரச்சனைக்குரிய தீர்வை சொல்லாவிட்டாலும், இப்படி ஏன் யோசிக்கக்கூடாது என படங்கள் மூலம் சொல்வது ஒரு படைப்பாளியின் வேலை. இப்படியெல்லாம் அறிமுகம் கொடுக்கும் அளவிற்கு பெரிய பிரச்சனையைப் பற்றி நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க திரைப்படம் பேசவில்லை என்றாலும் ஆண்களுக்கான படம் இது என்ற வகையான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாதவன். அப்படி என்ன ஆண்கள் பிரச்சனை என்பதை பார்ப்போம்...பேங்க் அசிஸ்டண்ட் மேனேஜரான சரவணன், தனது மூன்று நண்பர்களுடன் சென்னையில் ஒரு ரூமில் தங்கியிருக்கிறார். நண்பர்களோடு சரக்கு, சிகரெட், சேட்டை என வாழ்ந்து வரும் சரவணனுக்கு திருமணத்திற்கு பெண்பார்த்து, ஃபோட்டோவையும் முகவரியையும் அனுப்புகிறார் அவரது அம்மா. இரவில் காதலியுடன் கடலை போடும் நண்பனின் செல்ஃபோனை பிடுங்கி, ‘ஏண்டீ நைட் 12 மணிக்கு என்னடி இவனோட கடலை’ என திட்டு நண்பனின் காதலுக்கு சரவணன் சமாதி கட்டிவிட, அந்த கோபத்தில் சரவணனின் அம்மா அனுப்பிய கொரியரில் பலான இடத்தின் அட்ரஸை வைத்துவிடுகிறார் சரவணனின் நண்பன்.

வருங்கால மனைவியின் படமாக நினைத்து அதை பிள்ளையார் முன் வைத்து சரவணன் வேண்டும் போது அந்த ஃபோட்டோ பறந்து போய் ஒரு பெண்ணின் காலடியில் விழுகிறது.(ஹீரோயின் ஜோதி இன்ட்ரொடக்‌ஷன்). திடீரென்று ஒருவன் காலில் விழவும், கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் ஜோதியை பெண்பார்க்கப் போகும் செய்தி சொல்லி சமாதானப்படுத்திவிட்டுச் செல்கிறார் சரவணன்.

பலான வீட்டுக்குச் சென்று திருமணத்திற்கு பெண் பார்க்க வந்திருக்கிறேன் என சரவணன் சொல்ல, அடித்து விரட்டிவிடுகிறார்கள். மீண்டும் அதே கோவிலில் அதே பிள்ளையாரிடம் உட்கார்ந்திருக்கும் சரவணனை சந்திக்கும் ஜோதி விஷயம் அறிந்து சிரித்துவிடுகிறார். ‘என்னை யாருமே புரிஞ்சிக்கல’ என சங்கடப்படும் சரவணனிடம், ‘உங்களை புரிஞ்சவங்க உங்க பக்கத்துலயே இருப்பாங்க. தேடிப் பாருங்க’ என குறிப்பால் காதலை சொல்ல ஜோதி அப்பாவிடம் சென்று பேசுகிறார் சரவணன்.சித்த வைத்தியரான ஜோதியின் தந்தை சரவணனுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆண்மை பரிசோதனை செய்தபின் பெண்ணை கட்டிக்கொடுக்க ஓகே சொல்கிறார். அந்த பரிசோதனைக்கான சோகமான ப்ளாஷ்பேக் படத்தில் வருகிறது. எல்லாம் கை கூடிவர திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு நான்கே நாட்கள் இருக்க அந்த அசம்பாவிதம் நடந்து சரவணனின் ஆண்மையை கேள்விக்குள்ளாக்கிவிடுவது ட்விஸ்ட். மீதி க்ளைமாக்ஸ்.

அவ்வளவு முக்கியமான பிரச்சனையா இது என்பதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே உணரக்கூடிய விஷயம் என்பதால் படத்தின் திரைக்கதையைப் பார்ப்போம். முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் சரி திரைக்கதை இழுத்துக்கொண்டே செல்கிறது. குறைவான கதாபாத்திரங்கள் என்பதால் எல்லோருக்கும் க்ளோஸ்-அப் வைத்து சோதிக்கிறார்.இரண்டாம் பாதியில் சிங்கமுத்து, ’லொள்ளு சபா’ஸ்வாமிநாதன் வந்த பிறகு தான் தியேட்டர் கலைகட்டுகிறது. ஹீரோ இந்த படத்தில் அறிமுகம் என்றாலும் சமாளித்துவிட்டார். ஹீரோவின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் அவ்வப்போது காமெடியில் ஜெயித்துவிடுகிறார்கள்.

இயக்குனர் காமெடி விஷயத்தில் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எந்த செண்டிமெண்டும் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடி படமாக மாறியிருந்தால் நாலு பேர் இல்லை நாலு லட்சம் பேர் பேசக்கூடிய படமாக வந்திருக்கும். ஆண்கள் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை ‘பாத்து போங்க சார்’ என சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - பாத்து போங்க!1

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : gowtham Date :12/29/2015 8:37:26 PM
பூலோகம் விமர்சனம் போடுங்க ஐ விமர்சனம் கூட போடிங்களே என்ன பிரெச்சனை