விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :10, பிப்ரவரி 2016(19:34 IST)
மாற்றம் செய்த நாள் :10, பிப்ரவரி 2016(19:34 IST)

விசாரணை - ஒரு பார்வை!

வறு செய்யாத போதும் போலீஸைப் பார்த்தால் ஒருவித பயம் வரக்கூடிய நிலையில் தான் இன்றைய சமுதாயம் இருக்கிறது. மக்களைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட இரும்புக் கரம், மக்களின் கழுத்தை நெறிக்கும்போது தனிமனிதனால் என்ன செய்யமுடியும் என்பதை வலியுடன் விளக்குகிறது விசாரணை. 

பிழைப்புத் தேடி ஆந்திரா செல்லும் தமிழர்கள், ஆந்திர போலிஸின் அராஜகத்தால் பொய் வழக்கில் கைதாகிறார்கள். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி தாக்கப்படுகிறார்கள். தங்கள் மீது பாயும் லத்தி, பூட்ஸ் கால்களை எதிர்த்து நின்று அடிவாங்கினாலும் நட்பு, நன்றிக்கடன் என்ற சென்டிமென்டில் சிக்கி ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு எங்கள் மீது குற்றமில்லை. அடித்து வாக்குமூலம் வாங்கினார்கள். நாங்கள் நிரபராதி என அழுதுபுலம்புகிறார்கள். மொழி புரியாத ஆந்திர நீதிபதி, அந்த சமயத்தில் அங்கு வந்திருக்கும் தமிழக போலிஸை அழைத்து விசாரிக்கிறார். 

தமிழ் போலிஸ் தமிழனுக்கு சாதகமாக தான் பேசுவார், என தப்பிக்கப் பார்க்கும் ஆந்திர போலிஸை ’அப்ப ஆந்திர போலிஸ் தமிழனுக்கு எதிரா தான் பேசுறீங்களா?; என ஆந்திர போலிஸ் வாயை அடைக்கிறார் நீதிபதி. தமிழக போலிஸ் ‘இவன் நிரபராதி, அடித்து வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள்’ என உண்மையைச் சொல்லி அவர்களை விடுதலை செய்ய உதவுகிறார். அடுத்து உடைகிறது தமிழக போலிஸின் முகம். ’தம்பி, உனக்கு நான் உதவுன மாதிரி எனக்கு நீ ஒரு உதவி செய்யேன்’ என விடுதலை செய்யப்பட்ட தினேஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் கேட்கிறார் போலிஸ் சமுத்திரக்கனி. நன்றிக்கடனாய் ஒரு உதவியை செய்கிறார்கள். சமுத்திரக்கனி தேடி வந்த பெரும் அரசியல்வாதிகளின் கணக்குவழக்கை பார்க்கும் ஆடிட்டரான கிஷோரை கடத்திக்கொண்டு தமிழகம் விரைகிறது சமுத்திரக்கனி மற்றும் தினேஷ் டீம்.

’நம்ம மண்ணுல கால் வெச்சாச்சு இனி எந்த பிரச்சனையும் இல்லடா’ என குதூகலிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவர்களை போலிஸ் கரம் விடுவதாயில்லை. ஆயுதபூஜை வருது. ஸ்டேஷனை சுத்தப்படுத்திக் குடுத்துட்டு போங்க’ என்ற சமுத்திரக்கனியின் வார்த்தைக்காக மீண்டும் நன்றிக்கடனாய் ஸ்டேஷனில் வேலைகளை கவனிக்கிறார்கள். அதே சமயம் கடத்திவரப்பட்ட கிஷோரினால் அவர்களுக்கு ஆபத்து நெருங்குகிறது. ’அரசியல் ஆட்டத்துல நீயும் நானும் சிறு காய்கள். இது பெரிய சிஸ்டம். இது சின்ன விளையாட்டு’ என கிஷோர் எவ்வளவு சொல்லியும் கேட்காத சமுத்திரக்கனிக்கு விஷயம் புரியும்போது காலம் கடந்துவிடுகிறது.

உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை திரைப்படம் எடுக்கப்பட்டதாக அறிவித்திருக்கும் வெற்றிமாறன் எந்த பகுதி என்று சொல்லியிருந்தால் படத்தின் தாக்கம் கொஞ்சம் குறைந்திருக்கும். ஆந்திர போலிஸ் அப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழக போலிஸும் இப்படியா? என பதற வைக்கிறார். கிஷோரின் இறப்புக்குப்பின் நகரும் ஒவ்வொரு காட்சியும் மனதை துடிதுடிக்க வைக்கிறது. 

பலவீனமான இதயம் உடையவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என அறிவிப்பை போடாமல் வெற்றிமாறன் ஏன் விட்டார் என தெரியவில்லை. அத்தனை அழுத்தமாக இதயத்தை அழுத்துகிறது விசாரணை. ஆந்திர போலிஸிடம் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு அடியும் நம்மை வெளவெளத்து போகவைக்கிறது. நிற்கமுடியாமல் தினேஷ் கீழே விழும் காட்சியில், எழுந்து சென்று பிடிக்க தோன்றும் அளவிற்கு படத்துடன் நம்மை கட்டிப்போட்டு வைக்கிறார் வெற்றிமாறன். இஸ்லாமிய பெயரை சொன்னதும், ஆந்திர போலிஸ் தீவிரவாத அமைப்புகளின் பெயரைச் சொல்வதும், தமிழன் என்றதும் விடுதலைப் புலிகளா? எனக் கேட்பதும் என எல்லா அரசியலையும் பேசியிருக்கிறார்.

எடிட்டிங்கில் கிஷோர் எடுத்துக்கொண்டிருக்கும் கவனம், படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் தாக்கத்தை அத்தனை ஆழமாய் ரசிகனின் மனதிற்குள் பதிக்க, திரைக்கதையில் இத்தனை பொறுமை தேவையோ எனத் தோன்றுகிறது. இறப்பதற்கு முன்பு படத்தை முடித்துக்கொடுத்துவிட்ட கிஷோருக்கு வெற்றிமாறன் இந்த படத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறார். சிறு அறையை ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக காட்டுவதும், அந்த காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான தொடர்ச்சியில் லைட்டிங் மாறாமலும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் ராமலிங்கம். தினேஷ் தமிழ்த்திரையுலகின் மறக்கமுடியாத நடிகராக வர அத்தனை தகுதிகளும் இருக்கிறது. ‘சார் காப்பாத்துங்க சார்’, ‘சார் தானடா நம்மள காப்பாத்துனார்’, ‘சார் நீங்க தான சார் காப்பாத்துனீங்க’என்ற மூன்று வசனங்கள் வரும் இடங்கள் அவரது திறமைக்குச் சான்று. மூன்று கட்டத்தில் பேசப்படும் இந்த மூன்று வசனத்தில் எத்தனை துன்பம், எத்தனை மகிழ்ச்சி, எத்தனை ஏமாற்றம்.

காதலியாக ஆனந்தி கதாபாத்திரம் மூன்று காட்சிகள் தான் என்றாலும், தினேஷிடம் பேசும் அந்த ஒரு காட்சிக்காக அவர் தேவைப்படுகிறார். தெலுங்கில் பேசப்படும் அந்த காட்சிக்கு மட்டும் சப்-டைட்டில் போடாமல் விட்டிருக்கும் வெற்றிமாறன் அதன் விளக்கத்தையும் அடுத்த காட்சியில் சொல்லிவிடுகிறார். உண்மையில் ஆனந்தியின் திறமையான நடிப்பால், மொழி புரியாமல் அவர் சொல்ல வந்தது புரிகிறது. அதேபோல் ஜி.வி.பிரகாஷ். இந்த மாதிரி ஒரு படத்தில் இருக்க ஆசைப்பட்டாரோ என்னவோ, அவருக்கான ஸ்கோப் மிகக்குறைவு. பெரும்பாலும் அடிக்கும் சத்தமும், போலிஸ் அதட்டும் சத்தமுமாக பின்னணி இசையை கவனிக்கும் நிலையில் ரசிகர்களை உட்காரவைக்கவில்லை வெற்றிமாறன்.

முதல் பாதியில் ஆந்திர போலிஸின் முரட்டு அடியால் உடல் பதற, இரண்டாம் பாதியில் தமிழக போலிஸின் நம்பிக்கை துரோகத்தால் மனம் பதறுகிறது. க்ளைமாக்ஸில் ’உங்களை நம்பி தான சார் நாங்க வந்தோம்’ என தினேஷ் கதறும் காட்சியில், இனி போலிஸை மட்டும் நம்பவேகூடாது என நினைக்கும் அளவுக்கு மாறிவிடுகிறோம். அனைத்து காக்கிச் சட்டைக்குள்ளும் ஒரு நரி தான் இருக்கிறது என வெற்றிமாறன் சொல்லவில்லை. காக்கிச் சட்டைக்குள் இருக்கும் சிங்கங்களுக்கு எப்படி நரி வேஷம் போடப்படுகிறது என டீடெய்லாக விளக்குகிறார். விசாரணம் படத்தைப் பார்த்த பிறகு வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருக்கும் நமக்கு தெரிந்தவர்களுக்கு ஃபோன் செய்து விசாரிக்கும் அளவிற்கு விசாரணை திரைப்படம் ஒரு பாதிப்பை உண்டாக்குகிறது.

விசாரணை - உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :