விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :12, பிப்ரவரி 2016(19:15 IST)
மாற்றம் செய்த நாள் :12, பிப்ரவரி 2016(19:15 IST)

வில் அம்பு - விமர்சனம்!

வில்லினால் எய்யப்படும் அம்பிற்கு தானே ஆபத்து என்ற எண்ணத்தில் இஷ்டத்திற்கும் அம்புகளை எய்யலாம். ஒருநாள் அந்த அம்பு திரும்பி வந்து வில்லையேதாக்கினால் என்ன ஆகும் என்பது தான் கதை. அதிகம் பிரயத்தனப்படாமல் எளிய கதையை எளிய முறையில் சொல்லியிருக்கிறார் ரமேஷ் சுப்ரமணியம். இவர் சுசீந்திரனிடம் அசிஸ்டண்டாக பணியாற்றியவர்.திருடன், முரடன் என பெயர்பெற்ற படிப்பறிவில்லாத ஸ்ரீ ஒருபுறம். வீட்டிற்கு அடங்கி பெற்றவர்களின் ஆசையை பூர்த்தி செய்வதற்காகவே பிறந்த ஹரிஷ் கல்யாண் ஒருபுறம். இந்த இரண்டு அம்புகளும் வேறு இரு வில்களுக்காக சீற்ப்பாய்ந்து தாக்கி ஒடிந்து, பூமாரங்காக மாறி மீண்டும் வில்லையே தாக்குவது தான் கதை. சமூகத்தால் புறக்கணிக்கப்படும் இளைஞனை பயன்படுத்திக்கொள்ள எத்தனை பயங்கரமானவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை காட்டி பஉஅமுறுத்துகிறது வில் அம்பு. காதலிக்க தேவையான தகுதி பணமும், அந்தஸ்தும் தானா என ஸ்ரீ-சம்ஸ்கிருதி ஜோடியின் காதல் ஒருபுறம் விவாதிக்க, காதலிக்க இரு மனம் இருந்தால் போதும் என நிரூபிக்கிறது ஹரிஷ் கல்யாண்-சாந்தினி ஜோடி. சமூகத்தில் நிலவும் பல சீரழிவுக்காரணிகளை தொட்டுச் செல்கிறது திரைக்கதை. ரொம்பவும் சென்ஸிடீவான விஷயங்களை பேசும் இந்த படம் சீரியஸான படமா? என்றால், இல்லை. யோகி பாபுவின் அசால்ட் காமெடிகளில் அதிர்கிறது அரங்கம். ஸ்ரீ-சம்ஸ்கிருதி காதல் காட்சிகளில் இருக்கும் அழகியல், ஹரிஷ் - சிருஷ்டி டாங்கே காதல் காட்சிகளில் இருக்கும் நெருக்கம் என சிரிப்பு இன்பம் துன்பம் ஆகிய பல உணர்வுகளையும் உணரவைக்கிறது வில் அம்பு.

நம் பிள்ளை பொறியியல் படிக்கனும், ஐடி வேலைக்கு போகனும், படிப்பு கடனை அடைக்கனும், தனி வீடு வாங்கனும் என பெற்றோர்களின் திட்டமிடலுக்கு இன்னும் எத்தனை இளைஞர்களை பலி கொடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வியை பெற்றோர் கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர். வீட்டு அரசியல் முதல் நாட்டு அரசியல் வரை பேசுகிறது திரைப்படம். அரசியலில் நிரந்தர நண்பனும் அல்ல, எதிரியும் அல்ல என்பதை உணர்த்திவிட்டு செத்துப்போகிறார் நந்தகுமார்.ஸ்ரீ - ஹரிஷ் கல்யாண் இருவரும் ஒவ்வொருவரை கடந்து செல்லும்போது ஏற்படும் மாற்றம் தான் இருவரது வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது. திரைக்கதையை அந்த வகையில் லாவகமாக உருவாக்கியிருந்ததற்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். இசையமைப்பாளர் நவின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருந்ததாலும், திரைக்கதை ஓட்டத்தை தேக்கி நிறுத்தாததாலும் பாடல்களையும் ரசிக்க முடிகிறது. பின்னணி இசையிலும் படத்திற்கு வலுசேர்ந்த்திருக்கிறார் நவின்.

காதலித்ததால் திருட்டு கொலையெல்லாம் கைவிட்டு திருந்திய ஸ்ரீ கதாபாத்திரமும், காதலிக்கப்பட்டதால் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றப்பட்ட ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரமும் சொல்வது ’காதலிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்’ என்பது தான். வில் அம்பு பேசுவது ‘நன்மையை நினைச்சா நல்லது தானா தேடி வரும்’ என்பது தான். பெற்றோர்களை அழைத்துக்கொண்டு போய் மகன்கள் காட்ட வேண்டிய திரைப்படம். பிள்ளைகளை அழைத்துப்போய் பெற்றவர்கள் காட்டவேண்டிய திரைப்படம்.

வில் அம்பு - குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :