விமர்சனம்

குலேபகாவலி
 ................................................................
சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :15, பிப்ரவரி 2016(13:6 IST)
மாற்றம் செய்த நாள் :15, பிப்ரவரி 2016(13:6 IST)

ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!

சுயநலத்திற்காக நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி வைப்பது சரியா? பணமுதலைகளின் கோரப்பற்களுக்கிடையே சிக்கி மக்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்களை கூண்டோடு அழிக்க ஒருவன் ஒருநாள் வந்தே தீருவான்... என்பன போன்ற கருத்துக்களை எல்லாம் சொல்லியிருந்தால் சில மாதங்களில் ஜில் ஜங் ஜக் பற்ரி மறந்துபோயிருக்கக்கூடும். ஆனால் ஜில் ஜங் ஜக் கொடுப்பதோ முழு இரு மணிநேர கொண்டாட்டம்.பெண் என்ற வாடையே இல்லாமல் முழு படத்தையும் நகர்த்தியிருப்பதால் தான் இப்படி ஒரு டைட்டில் கார்ட் ஓடுகிறது என்பதை கடைசியில் தான் புரிந்துகொள்ள முடிகிறது. ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ஜில்லுனு ஒரு டைட்டில் கார்ட். முடிந்ததும் தொடர்கிறார் சித்தார்த். படம் நடக்கும் காலகட்டத்தை கதையாக சொல்லி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார். தெய்வா என்ற கடத்தல் மன்னனின் அனைத்து கடத்தல் பொருட்களும் பிடிபட்டுபோக, கடைசி 4 கிலோ கொக்கைன் போதைப் பொருளை விற்றுவிட்டு செட்டில் ஆகிவிட முடிவெடுக்கிறான். 

கொக்கைனை பெயிண்டில் கலந்து கார் மீது பூசி சுலபமாக கடத்திவிட ஐடியா கொடுக்கிறான் சைண்டிஸ்ட் மருந்து. கொக்கைன் காரை பத்திரமாக டெலிவரி செய்ய தேர்ந்தெடுக்கும் மூன்று பேர் தான் ஜில் ஜங் ஜக். காரை கையில் வாங்கிய சிறிது நேரத்திலேயே அதை பறிகொடுத்துவிட தெய்வாவிடமிருந்தும், தெய்வாவின் பரம எதிரியான ரோலக்ஸ் ராவுத்தரிடமிருந்தும் அவர்களை மோதவிட்டு எப்படி தப்பிக்கிறான் என்பது டபுள் தமாக்கா கொண்டாட்டம்.’ஒரு பெரிய விஷயம் பன்னனும்னா, 9 சின்ன விஷயம் பன்றதுல தப்பு இல்லை’ என்பதை தாரக மந்திரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் இதுவரை நாம் ஆங்காங்கு பார்த்த ஒன்பது விஷயங்கள் இருக்கின்றன. இதனால் கிடைத்திருக்கும் ஒரு பெரிய விஷயம் ஜில் ஜங் ஜக் என்ற பொழுதுபோக்கு படம். எல்லா கதாபாத்திரத்திற்கும் தனித்தனி மேனரிசம் கொடுத்து, அது எங்கும் மிஸ் ஆகாமல் கொண்டுபோயிருக்கும் இயக்குனர் தீரஜ் வைத்திக்கு பாராட்டுக்கள். ஹரஹர மஹாதேவகி வாய்ஸ் மாடுலேஷனில் ஒரு கதாபாத்திரத்தை படம் முழுக்க கொண்டு வந்து படத்தின் துவக்கத்தில் ஆரம்பித்த சிரிப்பை கடைசியில் தான் நிறுத்தவிடுகிறார். அட்டாக் ஆல்பர்ட்டாக நடித்திருக்கும் சாய் தீனாவிற்கு வில்லன் கேரக்டர்கள் கிடைத்தால் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார்.

ஆல்ரெடி ஆல்பம் ஹிட் கொடுத்துவிட்ட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசையிலும் பிண்ணி எடுத்துவிட்டார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பக்தி பாடல் ஸ்டைலில் பிண்னனி இசை கொடுத்து அசத்திவிட்டார். ’கேசனோவா’ பாடலில் ஆண்ட்ரியாவையும். ‘டோமரு லார்டு’ பாடலில் கவிதா தாமஸையும் பாடவைத்து படத்தில் பெண்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

படம் முழுக்க திரைக்கதையோடு பிண்ணிப் பிணைந்திருப்பது கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, டபுள் மீனிங்கும் தான். டபுள் மீனிங் வசனம் பேசாத கதாபாத்திரத்தை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசு என அறிவிக்கலாம் படக்குழு. ஆனாலும் நெருடல் இல்லாமல், குபீர் சிரிப்புகளின் காரணமாக அவை இருப்பது படத்தின் வெற்றியில் தெரியும். சித்தார்த் வழக்கம் போலவே தனக்கு இணையாக அவினாஷ், சனந்த் ஆகிய இருவரது கதாபாத்திரங்களை அனுமதித்திருக்கிறார். கிடைத்த வாய்ப்பை இருவரும் சிறப்பாக உபயோகித்துக்கொண்டனர். இதில் அதிகம் ஸ்கோர் செய்பவர் சனந்த் தான். அவ்வப்போது ரஜினியைப் போல் ஸ்டைல் காட்டினாலும், ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது செய்து படம் பார்ப்பவரை கவர்ந்துவிடுகிறார். 

ஆர்.ஜே பாலாஜியின் கதாபாத்திரம் அப்படியே டீலில் விடப்பட்டுவிட்டது வருத்தம் தான். ரோலக்ஸ் ராவுத்தர் வீட்டில் பெட்ரோல் கிடங்கு வெடிவிபத்தில் மாட்டிக்கிடக்கும் சேந்தனுக்கு பதில் ஆர்.ஜே.பாலாஜியை காட்டியிருந்தால் படமும் முழுமையடைந்திருக்கும், கலகலப்பும் கூடியிருக்கும். ஆனாலும் அந்த ‘பொண்டாட்டி வெடி’ க்ளைமேக்ஸ் நன்றாகவே இருந்தது. மொத்தத்தில் ஜக்-என துவங்கினாலும், ஹர ஹர மஹாதேவகி வாய்ஸ், ராவுத்தரின் சியர் கேர்ள்ஸ் மூலம் ஜங்-என உற்சாகம் பற்றிக்கொள்ள ‘ஜில்’ என்ற உணர்வைத் தருகிறது ’சொப்பண சுந்தரியை யார் வெச்சிருந்தது’ என்ற கேள்விக்கான விடை. படத்தை ஆரவாரத்துடன் ரசித்துப் பார்க்கும் யூத் டீமை பார்க்கும் போது காதலர் தினத்திற்கு முன்பு இப்படி ஒரு படம் சூப் பாய்ஸுக்கு கண்டிப்பாக தேவை என்று தோன்றுகிறது. 

ஜில் ஜங் ஜக் - சூப் பாய்ஸின் காக்டெயில்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :