விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
மிருதன் - விமர்சனம்!

மிருகத்திலிருந்து வந்தவன் மனிதன். அந்த மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தனம் மீண்டும் தூண்டிவிடப்பட்டால் என்ன நிகழும் என்பது தான் மிருதன் திரைப்படம். மேக்கிங், கதாபாத்திரத் தேர்வு என வெற்றிபெரும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன், ஒரு கதைசொல்லியாக இன்னும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். மிருதன் படத்தின் முக்கிய நிகழ்வு முதல் காட்சி தான். படத்திற்கு தாமதமாக சென்று, அதை தவறவிட்டால் ஒருமணி நேரம் 52 நிமிடங்கள் எதுவும் புரியாது. ஊட்டியில் ட்ராஃபிக் எஸ்.ஐ-ஆக பணிபுரிபவர் ஜெயம் ரவி. அவரது தங்கையாக ‘என்னை அறிந்தால்’ அனிகா. தங்கைக்காக திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் அண்ணன். அண்னனுக்கு திருமணம் செய்துவைக்க துடிக்கும் தங்கை என இரண்டேபேர் கொண்ட இயல்பான குடும்பம், நண்பன் காளி வெங்கட்டுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறது. ஊர் எம்.எல்.ஏ R.N.R.மனோகரின் மகளாக டாக்டர் லட்சுமி மேனன். இப்படியாக முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவிட்டு கதைக்கு நகர்கிறார். 

அணுக்கழிவு வைரஸால் ஊரே பாதிக்கப்பட்டு பாதி மனிதன் பாதி மிருகமாக திரியும் மிருதன்களிடையே தன் தங்கையை தொலைத்துவிடுகிறார் ரவி. கடிக்க வரும் மிருதன்களிடம் சண்டைப்போட்டுக்கொண்டே தங்கையை தேடும்போது ஒரு ஃபோன் அழைப்பு வருகிறது தங்கையைப் பற்றிய தகவல்களுடன். ஃபோன் ஆசாமி சொன்ன அட்ரஸுக்கு சென்று பார்த்தால், அங்கே அவர் தங்கையுடன் லட்சுமி மேனன் மற்றும் டாக்டர் குழுவும் இருக்கிறது. கோயமுத்தூர் மருத்துவமனைக்கு அந்த டாக்டர் குழு சென்றால் தான் இதற்கு மாற்றுமருந்து தயாரிக்கமுடியும் என்று லட்சுமி மேனன் சொல்ல அங்கிருந்து கிளம்புகிறது அந்த மனிதக்குழு.பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டியை விட்டு வெளியாறாமல் கட்டுப்படுத்தப்பட்ட நம்பிக்கையில் செல்லும் இவர்களுக்கு மேட்டுப்பாளையத்தில் காத்திருக்கிறது அதிர்ச்சி. கோயமுத்தூர் வரை பரவிவிட்ட இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து தன் தங்கை மற்றும் காதலியை ரவி எப்படி காப்பாற்றுகிறார் என்பது அசாத்தியமான இரண்டாம் பாதியும் க்ளைமேக்ஸும். அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சா? என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியாது. முதல் பாதியிலும் இயக்குனர் சரியாக கவனம் செலுத்தியிருந்தால் அதகளமாக இருந்திருக்கும். 

வைரஸ் பரவக்கூடிய அணுக்கழிவுகளை இப்படியா லாரியில் ஏற்றுவார்கள்? என்ற கேள்வி ஹாலிவுட் படங்களில் மட்டுமே அதையெல்லாம் பார்த்துவந்த நமக்கு எழ வாய்ப்புண்டு. ஆனால் தமிழகத்தின் பல இடங்களில் சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள், கடலில் கொட்டப்படும் அணுக்கழிவுகள் அப்படித்தான் கையாளப்படுகின்றன என்பது சோகமான உண்மை.ஜெயம் ரவி எத்தனை பேரை அடித்தாலும், அதை மக்கள் நம்பும்படி தன்னை வளர்த்துக்கொண்ட நடிகர். மிருதனில் அவரது அசாத்திய சக்திக்கு சரியான காரணமும் சொல்லப்பட்டுவிட்டதால் இவரை கையில் பிடிக்கவே முடியவில்லை. அடித்து நொறுக்குகிறார்.  ShotGun துப்பாக்கியை சுடுவதில் ஒரு அழகும் கம்பீரமும் இருக்கிறது. அது ஜெயம் ரவிக்கு அப்படியே பொருந்துகிறது. தமிழ்நாட்டில் பல போலிஸுக்கு துப்பாக்கியில் சுட மறந்துபோன அவலத்தையும் சொல்லியிருக்கிறார்கள் படத்தில். ஆக்‌ஷன் ஹீரோவாக க்ளைமேக்ஸிலும், நடிகனாக தங்கையை கொல்லவேண்டிய சமயத்திலும், லட்சுமி மேனனை காப்பாற்றும் காட்சியிலும் தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். 

லட்சுமி மேனனுக்கும், ’பேபி’ அனிகாவுக்கும் தான் அதிக போட்டி. நடிப்பில் இருவரும் மிரட்டுகிறார்கள். அழகு தேவதையாக லட்சுமி மேனனும், குட்டி தேவதையாக அனிகாவும் படம் முழுக்க வலம் வருகிறார்கள். ‘என்னை கொல்ல போறாங்களா?’ என கேட்கும் காட்சியில் அனிகாவும், தனியாக மிருதன்களிடம் சிக்கிவிட்ட காட்சியில் லட்சுமி மேனனும் பார்க்கும் ஒரு பார்வை ஆயிரம் கதை பேசுகிறது.இந்த படத்திற்கு கிராஃபிக்ஸ் செலவை விட இம்மான் உபயோகித்த ட்ரம்ஸ் செலவு தான் அதிகமாக இருக்கவேண்டும். சிறு இடைவெளி விட்டு டம டம டம-வென ட்ரம்ஸை ஒலிக்கவிடுவது கட்டிடம் இடுந்து தலையில் விழுவது போல இருக்கிறது. முதல் பாதி வரை இதை பொறுத்துக்கொண்டால், இரண்டாம் பாதியில் அதுவே பழகிவிடும். ஆனால் கடைசியாக ‘மிருதா மிருதா’ பாடலில் நம்மை மகிழ்வித்துவிடுகிறார். அதன் காட்சி அமைப்பும் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. மற்றபடி தேவையில்லாமல் இவரிடமிருந்து ’முன்னாள் காதலி’ பாடலை வாங்கி அதை படத்திலும் வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் அட்டகாசமான பின்னணி இசையை கொடுத்து நேர்மை செய்துள்ள இம்மானுக்கு பாராட்டுக்கள். 

ஒளிப்பதிவு, எடிட்டிங், கிராஃபிக்ஸ் இந்த மூன்றும் படத்தை காப்பாற்றிவிட்டது. அதிகம் கண்ணை உறுத்தாமலும், கதையை இழுக்காமலும் படத்தை வெட்டி ஒட்டிய இவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். க்ளைமாக்ஸில் மிருதன் 2 என்று என்ட் கார்ட் போட்டிருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் சொதப்பியதை நேர் செய்யும் அளவிற்கு அடுத்த ஸ்கிரிப்ட் வேலைகளை செய்தாலே மிருதன் 2 ஹிட் ஆகிவிடும் வாழ்த்துக்கள். உலகின் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் தமிழர்கள் பலர் இருக்கும்போது, கோயமுத்தூர் டாக்டர்களால் வைரஸுக்கு எதிர்மருந்து கண்டுபிடிக்க முடியாதா? முடியும் என படத்தில் காட்டியதற்கு நன்றிகள். லாஸ் ஏஞ்சல்ஸ், நியூ ஜெர்சி தெருக்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த மிருதன்களை கோயமுத்தூர் சாலைகளில் ஓடவிட்டு வெற்றிபெற வைத்திருக்கும் இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர்.

மிருதன் - பாராட்டப்பட வேண்டியவன்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :