விமர்சனம்

கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
தனி ஒருவன் - மக்களை வென்றவன்!
......................................
சகலகலாவல்லவன் - ரகளை செய்கிறான்!
......................................
மாரி - வெரி சாரி!
......................................
பாகுபலி - பிரம்மிப்பு!
......................................
மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்!
......................................
உத்தம வில்லன் - ஒரு பார்வை!
......................................
யூகன் - சிரமப்படுகிறான்!
......................................
கங்காரு - அதீத அன்பு ஆபத்தில் முடியும்!
......................................
ஓ காதல் கண்மணி - ஓகே சொல்ல வைக்கிறாள்!
......................................
சகாப்தம் - விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!

ருண்குமார் என்ற ஒரு படைப்பாளியின் மீது விஜய் சேதுபதியால் வைக்கப்பட்ட நம்பிக்கையில் பிறந்தது தான் சேதுபதி திரைப்படம். இரண்டு ஹிட் கொடுத்தாலே ஆக்‌ஷன் ஹீரோ உருவெடுத்து பறந்து பறந்து அடித்து வில்லன்களை பறக்கவிடும் நடிகர்கள் வாய்க்கப்பட்ட தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி போல இன்னொருவரை பல வருடங்களுக்கு தேடவேண்டாம். இவரே இருப்பார்.கூலிப்படையால் வெறித்தனமாக வேட்டையாடப்படும் போலிஸ் ஒருவரின் கொலை கேஸை விசாரிக்கிறார் விஜய்சேதுபதி. போலிஸை கொலை செய்யும் தைரியம் இனி எவனுக்கும் வரக்கூடாது எனும் வெறியில், போலிஸ் புத்தியை கூர்தீட்டி விசாரணை நடத்த அகப்பட்டுக்கொள்கிறார் வேல ராமமூர்த்தி. கொலைக்கூட்டத் தலைவனோ, அரசியல் புள்ளியோ அல்ல இவர். கெட்டவர் பயந்து நடுங்கும், நல்லவர் மரியாதை கொடுக்கும் ஊர்ப் பெரியவர். நியாயத்தின் பின் நிற்கும் கட்டப் பஞ்சாயத்துக்காரர். போலிஸை கொலை செய்யும் அளவிற்கு இவருக்கு என்ன வஞ்சம்? என நினைக்கும்போதே காரணத்தை விளக்கும் இடத்தில் முதல் வெற்றி பெறுகிறார் இயக்குனர்.அவரது இடத்திற்குள் புகுந்து பளார் அறைகளுடன் வேல ராமமூர்த்தியை விஜய் சேதுபதி கைது செய்துவரும் காட்சியில், அருவாள் - வேல்கம்புகளை பறக்கவிடாமல், இசையைக் கூட மெல்லிசாகக் கொடுத்த இடத்தில் வெற்றிபெறுகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா. தன்னை அடித்ததோடு மட்டுமல்லாமல், இரண்டு நாள் உணவு இல்லாமல் காரிலேயே சுற்றவைத்த அவமானத்தால் அடிபட்ட புலியாக தனது பழிவாங்கல்களை நடத்தும் காட்சிகளில் வேல ராமமூர்த்தி புலியாகவே இருக்கிறார். அவருக்கு ஒரு பாடலை வைத்து இயக்குனரும் ஸ்ருதி கூட்டுகிறார்.

செயின் பறிப்பு கேஸை விசாரிக்கும்போது தற்செயலாக நடந்துவிடும் அசம்பாவிதத்தில் சிக்கி வீழ்ந்துவிடும் விஜய்சேதுபதியை, வீழ்ந்த பின்னும் அடிக்கும் காட்சிகளிலும் அதில் காட்டும் குரூரத்திலும் வெற்றிபெறுகிறார் வேல ராமமூர்த்தி. போலிஸ்ல எல்லாருமே கெட்டவங்க இல்லை. நல்லவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை என்பதை தன் நடிப்பாலும், படத்தின் கருவை மற்ற கதாபாத்திரத்துடன் இணைந்து முன்நிறுத்தி புரியவைத்ததிலும் வெற்றிபெறுவது விஜய்சேதுபதி மட்டுமல்ல மொத்த படக்குழுவும் தான். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடிப்பது பின்னடைவு ஆகாதா? என்ற கேள்விகளையும் மீறி ரம்யா நம்பீசன் நடித்ததற்கு காரணம் அந்த கதாபாத்திரத்தின் தன்மை. அதை உணர்ந்து நடித்து தன்னை முத்திரைப் பதித்துக்கொண்ட ரம்யா நம்பீசனுக்கு பாராட்டுக்கள். விஜய்சேதுபதியின் எஸ்.ஐ-ஆக வருபவர், விசாரணை கமிஷனில் வருபவர், வேல ராமமூர்த்தியின் தங்கை மகனாக வருபவர் என படத்தில் கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரங்கள் பல. அவர்களுக்கு இடம் கொடுத்து நடித்தாலும், வழக்கம்போல எல்லோர் மனதையும் கவர்ந்துகொள்பவர் விஜய்சேதுபதி. மாஸ் நடிகராக விஜய் சேதுபதியும், ரொமாண்டிக், ஆக்‌ஷன் பட இயக்குனராக அருண்குமாரும் தங்களை நிரூபித்துக்கொண்டது சேதுபதியின் கெத்து.

போலிஸ் செய்யும் அநியாயங்களையும் அராஜகங்களையும் பற்றி படங்கள் வரும்போது, நேர்மை மறந்த போலிஸ்களுக்கு அந்த படத்தை சமர்ப்பணம் செய்வது போலவே... சேதுபதி மாதிரியான படங்கள் வரும்போது அவற்றை, நேர்மை தவறாத் போலிஸ் அதிகாரிகளுக்கும், நேர்மை தவறாததால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட, தற்கொலை செய்துகொண்ட போலிஸ்களுக்கு இந்த படங்களை சமர்ப்பணம் செய்யலாம். 

சேதுபதி - ஒரிஜினல் போலிஸ்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : indian-maldives Date :3/21/2016 12:22:58 PM
super, great tamil nadu got one more chief minister for future..........?!!!!!!!!!!!!!!!!