விமர்சனம்

குலேபகாவலி
 ................................................................
சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :10, மே 2016(15:16 IST)
மாற்றம் செய்த நாள் :10, மே 2016(15:16 IST)

24 - லாஜிக் இல்லா மேஜிக்

வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ நடந்து முடிந்துவிட்ட விஷயத்தை யார் மாற்ற முடியும்? முடியாது என்பது மட்டுமே பதிலாக இருக்கும்... கடவுளை நம்புகிறவர்களும் கூட, நடந்து முடிந்ததை எப்படி சரி செய்யலாம் என்று யோசிப்பார்களே தவிர நடந்ததை மாற்ற முயற்சிக்கமாட்டார்கள். அப்படி மாற்ற முடியும் என்று ஒரு மனிதன் செய்து காட்டினால். அது தான் ‘24’. முதல்வன் படத்தில் ஒரு வசனம் வரும்... “டேப் ரெக்கார்டரில் இருப்பது போலவே வாழ்க்கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் எவ்வளாவு நல்லா இருக்கும்” என்று. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் வாழக்கைக்கும் ஒரு ரீவைண்ட் பட்டனை பொறுத்துவதே 24.ஆத்ரேயா - சேதுபதி என இரண்டு சூர்யாவும் அண்ணன் தம்பிகள். விஞ்ஞானி சேதுபதி ஒரு அபூர்வ கடிகாரத்தை (வாட்ச்) கண்டுபிடிக்கிறார். அதில் நேரத்தை சரி செய்வதன் மூலம் காலத்தை பின்னோக்கித் தள்ள முடியும். இந்த அபூர்வ கடிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார் ஆத்ரேயா. அதற்காக எதையும் செய்யத் துணியும் அவர் தன் தம்பியையும் அவர் மனைவியையும் கொலைசெய்கிறார். இருந்தாலும் அந்த கைக்கடிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை. 

பல வருடங்கள் ஓடிவிட வாட்ச் மெக்கானிக்காக இருக்கும் சேதுபதியின் மகன் மணி (நிகழ்கால சூர்யா) சரண்யாவிடம் வளர்கிறார். அந்த அபூர்வ கடிகாரமும் அவரிடமே உள்ளது. ஆனால் அதைப்பற்றி எதுவும் தெரியாமல் இருக்கிறார் நிகழ்கால சூர்யா. ஒரு நாள் உண்மை தெரிய வருகிறது. தன் கையில் இருப்பது கடிகாரமல்ல அது மந்திர வித்தைகள் செய்யும் ஒரு அபூர்வ பொருள் என்றும் சில சம்பவங்களால் உணர்ந்துகொள்கிறார். சமந்தாவின் மீது சூர்யாவுக்கு காதல் வர, அந்த கடிகாரத்தை பயன்படுத்தி மாயாஜாலங்கள் செய்து சமந்தாவின் இதயத்தை வெல்கிறார். விளையாட்டு தனமாக சுற்றித்திரிந்த சூர்யாவின் வாழ்வில் திடீரென புயலாக ஒரு பிரச்சனை வருகிறது. பல வருடங்களாக படுக்கையில் இருக்கும் ஆத்ரேயா கண்விழிக்கிறார். கடிகாரத்தைக் கைப்பற்றும் வெறியும் வேகமும் மீண்டும் வருகிறது. பேப்பரில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்ததின் மூலம் நிகழ்கால சூர்யா (மணி) ஆத்ரேயாவின் வலையில் தானாக விழுந்துவிடுகிறார். கடிகாரம் தன் வசம் வந்துவிடுகிறது... நடக்க முடியாமல் கைகால்களை அசைக்க முடியாமல் இருக்கும் ஆத்ரேயா பல வருடங்களுக்கு முன்பு தன் இளமை காலத்துக்கு செல்லலாம் என்று கனவோடு கடிகாரத்தை பின்னோக்கி திருப்ப...  ஆனால் ஒரு பெருத்த ஏமாற்றம். நேரத்தைப் பின்நோக்கிக் கடத்த முடியும், ஆனால் 24 மணி நேரத்திற்குள்ளாக மட்டுமே அது முடியும் அதை கடந்துபோக முடியாது என்ற உண்மை புரிகிறது. 

வருடங்களைக் கூட கடந்துபோக முடியும், ஆனால் அது சேதுபதியின் மகன் மணியால் மட்டுமே முடியும் என்று புரிந்துகொண்டு. நிகழ்கால சூர்யாவிடம் நல்லவன் போல நடிக்க சதி திட்டம் தீட்டுகிறார். என்ன நடக்கிறது? சரண்யாவிடம் நிகழ்கால சூர்யா எப்படி வந்து சேர்ந்தார்? சூர்யாவும் சமந்தாவும் சேர்ந்தார்களா? கடிகரம் யார் கைக்கு சென்றது? என்ற கேள்விகள் பிறக்க...  பல வருடங்களுக்கு பின்னோக்கி சென்று குழந்தையாக மாற்றம் பெறும் சூர்யா என ஒரு கனவு லோகத்துக்கு கொண்டு செல்கிறது மீதி காட்சிகள். நேரத்தை நிறுத்தி வைத்து சூர்யா செய்யும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. மழைத்துளிகளை நிறுத்தி வைத்து அவர் விளையாடும் போது “இதெல்லாம் நம்புற மாதிரியா சார் இருக்கு” என்ற கேள்வி வந்துபோகிறது. இது தான் கதை என்று படத்தின் தன்மையை உணர்கிற வரைக்கும் “என்னாமா ரீல் விடுறானுங்க” என்று கிண்டல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன திரையரங்கில். பொய் சொன்னாலும் அதை நம்புற மாதிரி சொன்னா அதிலும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார். ஒரு புத்தகத்தை காட்சி வடியில் கொண்டுவந்து ஒரு சுவாரஸ்யமான கதையை சொல்லி திருப்புமுனை காட்சிகளோடு பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார்.’

சேதுபதி, ஆத்ரேயா, மணி என மூன்று விதமான கதாபாத்திரங்களிலும் சிக்ஸர் அடிக்கிறார் சூர்யா. வில்லத்தனமான குரலோடும் ஒரு வித்தியாசமான உடல்மொழியோடும் ஆத்ரேயா முதலிடம் பிடிக்கிறார். குறும்புத்தனமாக துள்ளித்திரியும் நிகழ்கால சூர்யா “நான் சேதுபதி புள்ளடா” என்று கெத்தோடு ஆத்ரேயாவிடம் வசனம் பேசும் காட்சி மாஸ்! வழக்கமாக ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் அதே வேலையை மீண்டும் செய்திருக்கிறார் சமந்தா. பிரியாணி விருந்தில் வைக்கப்படும் இனிப்பைப் போலவே வந்து போகிறார் சமந்தா. கௌரவத் தோற்றம் என்றாலும் நித்யா மேனன் அழுத்தமான நடிப்பில் கதைக்கு பலம் சேர்க்கிறார். தான் வாழ்க்கையை இழந்த கதையையும் சூர்யாவை அடைந்த கதையையும் விளக்கும் காட்சியில் சரண்யா பொன்வண்ணன் இதயத்தை ஈரம் செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையில் பிரம்மாண்டம் சேர்த்தாலும், பாடல்களில் புரியாத புதுக்கவிதையைப் போலவே அமைந்திருக்கிறது அவர் இசை. இதுவரை கேட்டாத புதுவித இசை என்றாலும் சாமான்ய ரசிகர்கள் தொட முடியாத தூரத்தில் வானம் போல விரிந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். மொத்ததில் “24” சூர்யாவின் ஒரு புதிய முயற்சி. மூன்று விதமாக அவர் கொடுத்திருக்கும் நடிப்பும் அதற்கான உழைப்பும் சாதாரணமானதல்ல. லாஜிக்கைப் பற்றி கவலைப்படாமல் மேஜிக்கை மட்டும் ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் ஏற்றதாகவே இருக்கும். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [5]

Name : selva Date :5/17/2016 5:13:32 AM
ரொம்ப போர். தூக்கத்தை கெடுக்க அவப்போது திடீரென்று ஒரு சண்டை! வாட்ச் டெக்னிசியன், கடைசியா எப்படி சயன்ஸ் டீச்சரா போக முடியும்? கொடுமை.
Name : chandru Date :5/14/2016 8:12:37 AM
PADAM OK, NOT BAD, VIJAY AND AJITH FANSUKKU PUDIKKADHU
Name : jeyavarmen Date :5/13/2016 5:17:39 PM
அப்பன், மகன் வில்லன் ,எல்லாமே சூரியா,எண்ட கடவுளே, உனக்கு வேற ஒருவரும் நடிக்க கிடைக்கவில்லையா.வீண் காசு 12 டாலர் தியேட்டருக்கு.உதவாத படம்,வெங்காய கதை .பரதேசி.
Name : thameem Date :5/12/2016 6:13:25 PM
supppppppppppppppppp,,, டைரக்டர் ஹீட்சப்
Name : M.V.THANGAVEL Date :5/12/2016 3:29:23 PM
படம் சூப்பர்! சூர்யா நடிப்பு சூப்பர்!சரண்யா நடிப்பு சூப்பர்!