விமர்சனம்

குலேபகாவலி
 ................................................................
சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :31, மே 2016(17:39 IST)
மாற்றம் செய்த நாள் :31, மே 2016(17:39 IST)

இது நம்ம ஆளு - விமர்சனம்

       வரும் ஆனா வராது என்று இழுபறியில் இருந்துவந்த ‘இது நம்ம ஆளு’ ஒரு வழியாக திரைக்கு வந்திருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடியை திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமைந்திருக்கிறது. ‘பீப்’ பாடலின் மூலம் பல பிரச்சனைகளில் சிக்கித்தவித்த சிம்புவுக்கு இப்படத்தின் பாசிடிவ் ரிசல்ட் ஒரு எனர்ஜியை கொடுத்துள்ளது. சிம்பு சென்னையிள் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நண்பராகவும் கிட்டத்தட்ட சிம்புவின் டூ வீலருக்கு டிரைவராகவும் சூரி இருக்கிறார். இந்த நிலையிள் அப்பாவின் கட்டாயத்தால் சிம்புவிற்கு பெண் பார்க்க செல்கின்றனர். பெண்ணாக நயன்தாராவை பார்த்தவுடன் சிம்புவிற்கு பிடித்துவிடுகிறது. பெண் பார்க்க வந்த இடத்தில் நயன்தாரா சிம்புவிடம்... உங்களுக்கு காதலித்த அனுபவம் இருக்கிறதா என்று கேட்டதும், ஆண்ட்ரியாவுனான காதல் கதையை எடுத்து விடுகிறார் சிம்பு. 

சிம்பு - ஆண்ட்ரியா காதல் என்ன ஆனது? சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்தார்களா? என்பது மீதி கதை.படம் முழுக்க கலர்ஃபுல்லாக வரும் சிம்பு இந்த படத்தில் முழு நீள காதல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாராவின் நடிப்பும் அழகும் படத்தின் பலம். சிம்பு - நயன் தாரா காதல் காட்சிகள் ரசிகர்களிடையே அமோக ஆதரவு பெற்றுள்ளது. இவர்கள் நடிக்கிறார்களா... அல்லது இது அவர்களின் உண்மைக் கதையா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். சிம்பு - நயன் காதல் ஊர் அறிந்த உண்மை, அதை திரையில் திரைக்கதையாக சொல்லி, தன் கற்பனைகளை கலந்து கல்லா கட்ட நினைத்த இயக்குனர் பாண்டிராஜ் உண்மையிலேயே கெட்டிக்காரர்தான். தன் மீது வரும் விமர்சனங்களையும் விளையாட்டாக எடுத்து அதற்கு படத்தில் பதில் சொல்லி காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துகிறார் சிம்பு. 

முன்னாள் காதலியாக வரும் ஆண்ட்ரியா ஆங்காங்கே வந்தாலும் அவர் வரும் காட்சிகளில் சுவாரஸ்யமே இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவருக்கும் சிம்புவுக்கும் காதல் ஏற்படும் மால் காட்சி நன்றாகவே இருக்கிறது. சூரி அவரது ஒருவரி காமெடியில் அபாரமாக சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் வெறுக்க வைக்கிறார். கதையில் பெரிய அளவிற்கு நம்பிக்கை செலுத்தாமல் வெறும் கதாபாத்திரங்களின் போக்கை மட்டுமே நம்பி சுவாரஸ்யமாக படமகா உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பாண்டிராஜின் வசனங்கள் அற்புதம். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியனின் காட்சிகள் கச்சிதம்... மூன்று வருடம் பெட்டியில் பூட்டி வைத்திருந்தாலும் படம் புதுப்பொலிவுடன் கலர்ஃபுல்லாக இருப்பதற்கு அவரே காரணம். 

இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் சிம்புவின் தம்பி குறளரசன். "கண்ணே உன் காதல்" மற்றும் "எனக்காக பொறந்தாலோ" கேட்கும்படி உள்ளது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் வாய்ப்பை நல்லபடியாகவே பயன்படுத்துயுள்ளார் குறளரசன். 

சிம்பு ரசிகர்களுக்கும், நிச்சையம் செய்தபின் காதலிப்பவர்களுக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதல் பாதியில் சுவாரஸ்யங்கள் அதிகம். அதே அளவிற்கு இரண்டாம் பாதியில் கொஞ்சம் திருப்பங்கள் இருந்திருந்தால் அனைவரையும் சந்தோஷப்படுத்திருக்கும் ‘இது நம்ம ஆளு’. 

இது நம்ம ஆளு - லேட் ஆனாலும் டேஸ்ட் மாறவில்லை!
                               
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : Rajagopalan Date :6/3/2016 4:17:34 PM
படம் மரண மொக்கை. தயவு செய்து யாரும் பார்க்க வேண்டாம்.
Name : Ragumar Date :6/3/2016 1:11:52 AM
நல்ல படம்