விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :6, ஜூன் 2016(17:57 IST)
மாற்றம் செய்த நாள் :6, ஜூன் 2016(17:57 IST)

இறைவி - விமர்சனம்

கற்புக்கரசி கண்ணகி! ஆம், அவள் கோவலன் வரும் வரை காத்திருந்தாள்... கோவலன் நிலையில் கண்ணகி இருந்திருந்தால், அவள் வரும் வரை கோவலன் காத்துக்கொண்டு இருந்திருப்பானா? இந்த காலச்சூழலுக்கும் இந்த பகுத்தறிவு நிறைந்த கேள்வி அவசியமாகவே இருக்கிறது. பெண் என்பவள் ஆண் என்ற சொல்லில் அடங்கி இருக்க வேண்டும் என்ற கொடிய விஷத்தை இந்த சமூகத்தில் விதைத்து வைத்திருக்கிறார்கள். ஆண்களை சார்ந்தவர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களின் பலவீனமா? அல்லது சமூகம் அமைத்துக் கொடுத்திருக்கும் கோட்பாடா? ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த சமூகத்தின் மீது கொடுக்கப்படும் சாட்டையடி தான் “இறைவி”.திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, கதாபாத்திரப்படைப்பில் புதுமை என தன் முந்தைய இரண்டு படங்களில் வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ், அழுத்தமான காட்சிகள், உறவுகளின் சுயநலம், பெண்களின் இயலாமை, ஆண்களின் திமிர் என நம் சிந்தனையில் ஆயிரம் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பக்கூடிய படைப்பை இறைவியாக கொடுத்திருக்கிறார்.

மழையில் கைகளை நீட்டியபடி தன் வருங்கால கணவனைப் பற்றிய கனவில் இருக்கும் அஞ்சலியின் காட்சியில் தொடங்குகிறது படம். ஒரு நல்ல கணவனை தேர்தெடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் கைகளை நீட்டி மழையை ரசிக்கும் கமாலினி முகர்ஜி. வாழ்ந்து முடித்த வடிவுக்கரசி, தன் கணவனைப் பற்றிய புலம்பல்களுடன் அன்புத்துளிகளுக்காக ஏங்கி மழைத்துளிகளில் மௌனமாய் கைகளை நீட்டுகிறார். இந்த மூன்று பெண்களின் வாழ்வும் சில ஆண்களால் எப்படி திசைமாறிப் போகிறது என்பதே படம். 

விஜய் சேதுபதியின் அறிமுகக்காட்சி கொஞ்சம் நெளியவைக்கிறது, இருந்தாலும் படத்தின் முக்கியக் காட்சியில் அஞ்சலி கேட்கும் கேள்விகளுக்கு விடையாக அந்த காட்சிகள் இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. முதலாளிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் கண்மூடித்தனமான விசுவாசம். ஒரு மூன்றெழுத்து விஷயத்துக்காக பூஜாவிடம் அடிமையாகிக் கிடப்பது, அஞ்சலியுடன் முதலிரவை முடித்துக்கொண்டு, இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று வெட்கப்படாமல் ஆண்களுக்கே உரிய கேவலத்தை வெளிப்படுத்துவது... இரண்டாம் பாதியில் சதி வலையில் சிக்கி மீள முடியாமல் தவிப்பது என விஜய் சேதுபதி எதார்த்த நடிப்பில் அசத்தி இருக்கிறார்.நானும் நடிகன் தான் என்று தன்னை நடிகனாக நிரூபித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ஒரு குடிகாரக் கணவன்! அவர் குடிப்பதை படத்தில் பல வகையில் நியாயப்படுத்துகிறார்கள். தான் இயக்கிய திரைப்படம் தயாரிப்பாளார் பிரச்சனையால் வெளிவராத சூழலில் மதுவுக்கு அடிமையாகிறார் எஸ்.ஜே.சூர்யா. நள்ளிரவில் குப்பைக்கிடங்கில் காலி பாட்டில்களில் சரக்கைத்தேடும் காட்சி ஒரு அசல் குடிகாரனை கண்முன் கொண்டு வருகிறது. நடப்பதை சகித்துக்கொள்ள முடியாமலும், தன் கணவர் மீது வைத்திருக்கும் அன்பை பொய்யாக்க விரும்பாமலும், தன்னை சுற்றி எழும் கேள்விகளுக்கு விடை தேடி தன் மகளுடன் காலத்தை நகர்த்தும் பெண்ணாக வரும் கமாலினி முகர்ஜி எளிமையான நடிப்பில் மனதில் பதிகிறார்.பாபி சிம்மா அதிகம் அளட்டிக்கொள்ளாமல் படம் முழுக்க வந்தாலும், கதையில் திருப்பமே அவரால் தான்! தன் நடிப்பை வெளிப்படுத்த படத்தில் ஒரே ஒரு காட்சி தான் என்றாலும், கொடுக்கப்பட்ட நேரத்தில் சிக்ஸர் அடிக்கிறார். தன் தாயோடு பேசுவது போல் தன் மனதில் இருக்கும் விஷயங்களை சொல்லும் காட்சி நம்மை இமைக்காமல் கவனிக்கவைக்கிறது. தன் கணவர் முன் எதையும் பேச முடியாமல் இருந்த வடிவுக்கரசி கடைசி வரை பேசாமலே போனது இதயத்தை கனமாக்குகிறது. மௌனமாய் இமைகளை மூடும் காட்சி அவர் நடிப்புக்கு சாட்சி. ராதாரவி, கருணா என பலரும் கதைக்கு பலம்.இதுவரை நடித்த படங்களில் சவால்களான கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் அஞ்சலி, இதிலும் ஒரு ஆழமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ‘நீ மட்டும் யோக்கியமா?’ என்று விஜய் சேதுபதியை வார்த்தைகளால் அடிக்கும் காட்சி உச்சம். ‘என்ன கேட்டாலும், அவனோடு படுத்தியான்னு நீ கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேன்... என் மீது நம்பிக்கை இருந்தா வா... வாழலாம்...’ என்று அஞ்சலி பேசும் வசனங்களுக்கு ஒவ்வொரு பெண்ணின் இதயமும் கைத்தட்டும். அது கைத்தட்டல் அல்ல, ஒவ்வொரு ஆணின் சிந்தனைக்கு கிடைத்த சாட்டையடி. முதல் காட்சியில் ஆயிரம் கனவுகளோடு மழையை நோக்கி கையை நீட்டும் அஞ்சலி, கடைசிக் காட்சியில் ஆயிரம் கேள்விகளோடு நம்பிக்கையுடன் மழையை நோக்கி கையை நீட்டும் அஞ்சலி நம் இதயங்களில் சிறகடித்து வட்டமிடுகிறார் அஞ்சலி. 

கொலை எந்த வகையிலும் தீர்வாகாது என்ற போதிலும், அந்த மூன்று கொடூரக் கொலைகள் அதிர வைக்கிறது. தன் முந்தைய படத்தயாரிப்பாளரின் (ஜிகர்தண்டா - கதிரேசன்) மீது உள்ளக் கோபத்தை தீர்த்துக்கொள்ள ‘இறைவி’ படத்தின் தயாரிப்பாளரை பயன்படுத்தி இருப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. இந்த சமூகம் எந்த அளவுக்கு சுயநலம் மிக்கது என்பதை அந்த கொலைகள் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன. அந்த ரத்தவெறிக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.இரண்டாம் பாதியில் வரும் எஸ்.ஜே.சூர்யாவின் மசாலா பாட்டு எடிட்டர் விவேக் ஹர்ஷனால் வெட்டி எறியப்பட்டிருக்க வேண்டும். மற்ற பாடல்களில் சந்தோஷ் நாராயணனின் இசை புதுமைகளை நிகழ்த்துகிறது. ஒளிப்பதிவிலும் நம் உணர்வுகளை ஒன்றாக்கி ஒளியால் வித்தைகள் செய்கிறார் சிவக்குமார் விஜயன். மழைவிட்ட நேரம்... கொடியில் ஈரமாக இருக்கும் கைதி உடை சரிந்து கீழே விழுகிறது... விஜய் சேதுபதி சிறையிலிருந்து விடுதலையாகிறார்... இதுபோன்ற காட்சிகளை தமிழ்சினிமாவில் அறிவுஜீவி இயக்குனர்கள் படத்தில் மட்டுமே பார்க்க முடியும். 

‘இறைவி’ பல விவாதங்களை எழுப்பும். ஒரு படைப்பு அல்லது சினிமா அதை செய்வதே நியாயமாகும். காலத்தின் சூழல்கள் ஒரு மனிதனை எப்படி புறட்டிப்போடுகிறது, கோபம் ஒரு மனிதனை எப்படி அழிக்கிறது என்பதை இப்படம் வெளிச்சம் போடுகிறது. ஆண்கள் எல்லா சூழலிலும் கோழைகளாகவே இருப்பதையும், பெண்கள் கம்பீரத்தோடு அதை எதிர்கொள்ளும் சக்தியாக இருப்பதையும் படம் உணர்த்துகிறது. 

இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்! 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [12]

Name : serma Date :1/19/2017 12:07:30 PM
i love this movie and i am so impress anjali acting. and anjali big fan . anjali i love uuuuuuuuuuuuuuuuu so much
Name : ananthakrishnan Date :9/2/2016 9:52:21 AM
பெண்ணின் வலிமை போற்றப்படும்
Name : raghav Date :6/29/2016 6:12:05 PM
வன்முறைக்கு Oreo padam
Name : Guna Date :6/25/2016 1:51:34 AM
Semma aruvai
Name : rakesh Date :6/25/2016 1:50:17 AM
இறைவிக்கு koduthathaமார்க் 10/100 Removed from all cinemas கார்த்திக் சுப்பாராஜ் hard luck Better luck later
Name : raju Date :6/17/2016 8:25:34 PM
கொலை எந்த வகையிலும் தீர்வாகாது என்ற போதிலும், அந்த மூன்று கொடூரக் கொலைகள் அதிர வைக்கிறது. தன் முந்தைய படத்தயாரிப்பாளரின் (ஜிகர்தண்டா - கதிரேசன்) மீது உள்ளக் கோபத்தை தீர்த்துக்கொள்ள ‘இறைவி’ படத்தின் தயாரிப்பாளரை பயன்படுத்தி இருப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. இந்த சமூகம் எந்த அளவுக்கு சுயநலம் மிக்கது என்பதை அந்த கொலைகள் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன. அந்த ரத்தவெறிக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். படம் பிக் bore
Name : karthik Date :6/17/2016 8:22:18 PM
Mosamana padam Biggest flop
Name : malarmannan Date :6/12/2016 11:23:39 AM
சிறந்த படம்
Name : anonymous Date :6/12/2016 9:22:05 AM
மணவாழ்வு பற்றி ஆணுக்கு பெரிதாக கனவுகள் இருக்காது. எல்லோரும் marry பண்ணுகிறார்கள். நானும் என்ற ரீதியில் தான். ஆனால் பெண்கள் ஏராளம் கனவுகளுடன்...உலகில் ஆண் என்றாலே நினைவுக்கு வருவது child abuse .காதலின் பெயரில் ஆசிட் வீச்சுகள், பலாத்காரம் செய்யபடும்/கொல்லப்படும் அப்பாவி சிறுமிகள்,பெண்கள், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கொடூரமானவை. அதற்கும் பெண்களின் உடை தான் காரணம் தனது செயல் தவறல்ல என்பான் ஆண். கடவுளின் படைப்பில் ஒவ்வொன்றிற்கும் ஒரு இயற்கைகுணம் "எவ்வளவு கேவலமான பிறவிங்க இல்ல நம்ம"
Name : rajaram Date :6/11/2016 5:31:50 PM
Worst movie
Name : ravixhandran Date :6/11/2016 7:24:46 AM
எல்லா ஆண்களும் அப்படி Illai எல்லா பெண்களும் இப்படி Illai படம் Nalla இலலை படம் ஸ்லொவ் அண்ட் dragging
Name : Mani Date :6/10/2016 6:07:54 PM
பெண்மையின் மகத்துவத்தை உணர்த்தும் அருமையான படம். Wonderful drama script by Karthik Subbaraj. My heart goes to Ponni character, Anjali cast it very very well!! பகுத்தறிவு தந்தை பெரியார் பெண் விடுதலை தத்துவத்தை இந்த படம் போற்றுகிறது.