விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :23, ஜூலை 2016(10:50 IST)
மாற்றம் செய்த நாள் :23, ஜூலை 2016(10:50 IST)கபாலி - விமர்சனம்

உலகம் முழுக்க ரஜினி ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளியாகி உள்ளது சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கபாலி. இயக்குனர், தொழில் நுட்பக்கலைஞர்கள், நடிகர்கள் என ஒரு இளைமைக் கூட்டணியுடன் களமிறங்கி உள்ளார் ரஜினி. இவர்களுடன் நரைத்த முடியுடன் வந்தாலும் இளைமையாகவே இருக்கிறார் ரஜினியும்! முற்றிலும் மாறுபட்ட களம்,  உழைக்கும் மக்களுக்கான அரசியலை பேசும் வசனங்கள் என ஒரு புது வகையான ரஜினி படம் தான் கபாலி. 

பல வருடங்களுக்கு பிறகு மலேசிய சிறையிலிருந்து வெளியே வருகிறார் கபாலி (ரஜினி). மலேசியாவில் நசுக்கபடுகிற தமிழர்களுக்கு அவர்களது உரிமைகளை பெற்றுத் தரும் தலைவராக உருவெடுத்த கபாலி சிறையில் இருந்த நேரம் பல கேங்ஸ்டர் கும்பல்கள் அதிகரித்துவிடுகிறது. வெளியே வந்தவுடன் கடத்தல் தொழில் செய்யும் டான்களை ஒரு கைப்பார்க்கிறர் கபாலி, அதே சமயத்தில் தன் மனைவியையும் மகளையும் கொன்றவர்களையும் தேடிவருகிறார். தீய சக்திகளை தட்டிக்கேட்கும் கபாலி வெளியே வந்ததால் கடத்தல் தொழில்கள் அனைத்தும் முடங்குப்போகிறது. கபாலி பல நல்ல விஷயங்களை செய்வதால், மலேசிய போலிசும் கபாலிக்கு உதவியாக  இருக்கிறது. இதனால் எதிரிகள் கபாலியை கொலை செய்ய ஒருவரை நியமிக்கிறார்கள். அவர் தான் யோகி (தன்ஷிகா).

தான் நடத்தி வரும் பள்ளி மாணவர்களிடம் தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சந்தர்ப்பம் கபாலிக்கு கிடைக்கிறது. மலேசிய உழைக்கும் தமிழ் மக்களுக்கான தலைவராக தமிழ் நேசன் (நாசர்) இருந்தது தெரியவருகிறது. ஆங்கிலேயர் தோட்டத்தில் சீனர்களுக்கு அதிக கூலியும், தமிழர்களுக்கு குறைவான கூலியும் வழங்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களுக்கான குரல் கொடுத்து சமத்துவமான நிலையை உருவாக்குகிறார் கபாலி. இதை அறிந்த தமிழ் நேசன் கபாலியை அழைத்து பாராட்டியதோடு தன்னை அவரோடு சேர்த்துக்கொண்டதை சொல்கிறார் கபாலி. 

தமிழ் நேசன் நல்லவராக இருப்பதால் அவரது கேங்கில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் சமாச்சாரங்களில் தன் ஆட்கள் ஈடுபட கூடாது என கண்டிக்கிறார். இதனால் வீரசேகரன் (கிஷோர்) அவரை கொலை செய்கிறார். தமிழ் நேசன் இடத்துக்கு அடுத்த தலைவராக உருவெடுக்கிறார் கபாலி. இதை வீரசேகரனால் தாங்க முடியாமல் கபாலியை கொல்ல திட்டமிடுகிறார். கபாலியின் நண்பனும், தமிழ் நேசனின் மகனுமான தமிழ் மாறனை இதற்கு பயன்படுத்துகிறார் வீரசேகரன். தமிழ் மாறனுக்கும் கபாலிக்கு ஏற்படும் சண்டையில் தமிழ் மாறன் இறந்துவிடுகிறார். இதற்காகவே கபாலி சிறை செல்கிறார் என்பது பின்னர் தெரிகிறது. அதே நேரத்தில் கர்பிணியாக இருந்த கபாலியின் மனைவி குமுதவள்ளியையும் கொன்றுவிட்டார்கள் என்றே நினைக்கிறார் கபாலி. காபாலியை கொலை செய்ய பின்தொடரும் யோகிக்கு கபாலி தான் தன் தந்தை என்ற உண்மை தெரியவருகிறது. பின்னர் தன் மனைவியையும் தமிழகம் வந்து மீட்கிறார் கபாலி. கபாலியை காலி செய்ய மலேசியாவில் உள்ள எல்லா கேங் லீடர்களும் திட்டம் தீட்டுகிறார்கள். கபாலி அவர்களை எப்படி காலி செய்கிறார் என்பது படத்தின் மீதி காட்சிகளில் உள்ளது. 

கபாலியாக வரும் ரஜினி தான் ஒரு சூப்பர் ஹீரோ தான் என்பதை காட்சிக்கு காட்சி தன் அசத்தல் நடிப்பால் நிரூபிக்கிறார். இன்னும் பத்து படங்களுக்கு மேல் நடிக்கும் சுறுசுறுப்பு ரஜினியிடம் உள்ளது. இளமையாக வரும் ரஜினி கூலி உயர்வைப்பற்றி பேசும் காட்சி அற்புதம். சந்தோஷ் நாராயணனின் ‘நெருப்புடா...’ பின்னணி இசை தெறித்து எழ ரஜினியின் நடையும் அசைவுகளும் ரசிகர்களுக்கு விருந்து. ஆனால், ஸ்லோமோஷன் எஃபெக்ட்ஸ் போட்டு பல மணி நேரம் அதற்கு செலவிடாமல் இயல்பான ரஜினியாக வருவதும் ஒரு தனி அழகுதான். 

ராதிகா ஆப்தே சில காட்சிகளே இருந்தாலும் சிறந்த நடிப்பு. அவர் பேசும் சில வசனங்களும் ஆழமாகவே இருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பின் கணவரை சந்திக்கும் காட்சியில் அசத்தல் நடிப்பு. படிய வாரிய தலையில் மல்லிகைபூவோடு தோற்றத்திலும் கூட அழகாகவே இருக்கிறார் ராதிகா ஆப்தே. தன்ஷிகா சரியான தேர்வு. அவர் ஹேர் ஸ்டைலும் உடையும் கச்சிதமாய் பொருந்துகிறது. நடிப்பிலும் கூட ஆச்சரியப்படுத்துகிறார்.கிஷோர் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கூர்மையான நடிப்பு... கொடுத்த வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார். தினேஷ், ஜான் விஜய், ரித்விகா என நடிகர் பட்டாளமே ரஜினியை சுற்றி உள்ளது. அனைவரும் அவரவர் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். ரஜினியை எதிர்க்கும் மலேசிய வில்லன், ஒரு வில்லன் போலவே இல்லாமல் இருப்பது பெரிய மைனஸ். ரஜினிக்கு ஏற்ற வகையில் சண்டைக்காட்சிகளை திறமையாக அமைத்திருக்கும் அன்பு - அறிவு பாராட்டுக்குறியவர்கள். 

பல கோடி செலவில் செட் போட்டு அதில் ரஜினியை கொண்டு நிறுத்தி ஒரு நாயகியுடன் டூயட் பாட வைக்கும் படமாக கபாலி இல்லை. சந்திரமுகி வடிவேலுவின் காட்சிகள் போல குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளும் இல்லை. 

இது ரஜினி படமாக இல்லாமல் ரஞ்சித் படமாகவே இருக்கிறது. இருந்தும் ரஜினியை ரசிக்க பல காட்சிகளை அமைத்திருக்கிறார் பா.ரஞ்சித். ரஜினிக்காக கதை அமைக்காமல், தன் கதைக்குள் ரஜினியை நடிக்க வைத்திருக்கும் பா.ரஞ்சித்தை தாராளமாய் பாராட்டலாம். ஆனால், அதே வேளையில் ரஜினி ஒரு கவர்ச்சிகரமான வியாபாரப் பொருளாகப் பார்க்கப்படும் நிலையில் கொஞ்சம் மசாலா சேர்த்திருக்கலாம்... தவறே இல்லை! உழைக்கும் மக்களுக்கான உரிமைகளையும், உழைக்கும் மக்களின் குரலாய் ரஜினியை பேச வைத்திருப்பதும் பா.ரஞ்சித்தின் அசாதாரணமான வெற்றி. தான் அணிந்திருக்கும் கோட்டு சூட்டை காண்பித்து உடையும் கூட ஒரு வகை எதிர்ப்பு உணர்வு தான்! என்று ரஜினி பேசும் வசனம் உச்சகட்டம். இப்போது பல வகையான விமர்சனங்களை கபாலி பெற்றாலும் ரஜினிக்கு ஒரு மாஸ்டர் பீஸ் படம் என்பதில் சந்தேகமில்லை. 

“மாடு மாதிரி உழைக்குறேன்... இழக்குறதுக்கு ஒன்னுமே இல்லை... நான் முன்னுக்கு வருவது தான் உனக்கு பிரச்சனைன்னா... நான் முன்னுக்கு வருவேண்டா!” என உழைக்கும் மக்களின் பிரதினிதியாக ரஜினியை ரஞ்சித் முன்னிருத்தி இருப்பது சூப்பர்! 

கபாலி - கெத்துடா..!
  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [55]

Name : Jayaprakash Date :2/7/2017 12:48:43 PM
இயக்குனர் ரஞ்சித் அவர்களே இது போன்ற படைப்புகள் இன்னும் நிறைய வேண்டும் இந்த சமுதாயத்திற்கு. ரஜினியை போன்று பெரிய நடிகர்களை பேச வைத்து சாதி கொடுமையை நீக்க வேண்டும். உங்களுக்கு துணையாக என்னை போன்று பலர் இருக்கின்றனர். உங்கள் போராட்டம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்
Name : Jayaprakash Date :2/7/2017 12:41:49 PM
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு. இன்றைய சூழலில் இப்படி ஒரு படம் வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. சாதி வெறி பிடித்த நாய்களுக்கு மத்தியிலும் , சாதி அரசியல் பேசும் தேவிடியா பசங்களுக்கு மத்தியில் இது போன்ற படைப்பு அதுவும் ரஜினியை வைத்து சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. ரஜினிக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறான் .
Name : baburaj Date :9/25/2016 1:12:03 PM
கபாலி படம் அருமை..வசனங்கள் அல்லது காட்சியமைப்புகள் மூலமாக மறைமுகமாக ஆதிக்க சக்திகளை எதிரப்பது,அச்சமூக பெண்களுக்கு தாங்களும் ஒரு ஹீரோ என நிரூபிப்பது என பல ஆண்டுகளாக தமிழ் சினிமா உச்ச கதாநாயகர்கள் கதைகளை தேர்வு செய்து வெற்றி பெறுகிறார்கள்.உண்மையான உழைப்பு,நேர்மை, மேன்மை குணம் இவையே வெற்றிக்கு அடித்தளம்..அதை இப்படம் உணர்த்துகிறது.சிகரெட்டை தூக்கிபோட்டு ஸ்டைலாக பிடிப்பது, இன்னபிற மாயையான விஷயங்களை விட்டுவிட்டு ரஜினி நடித்திருக்கிறார்.
Name : Appu Nihirthan Date :8/16/2016 12:44:33 PM
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் திரைக்கு வந்த 25 நாட்கள் ஆகிவிட்டது. இன்றும் இப்படம் தமிழகத்தில் சுமார் 220 திரையரங்குகளுக்கு மேல் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தின் மூலம் ரஜினியின் மார்க்கெட் மேலும் உச்சத்தை தொட்டுள்ளது, கபாலி இதுவரை ரூ 500 கோடியை வசூலில் மட்டும் தாண்டிவிட்டதாக கூறப்படுகின்றது.
Name : paul Date :8/12/2016 1:06:32 PM
தென்னிந்திய அளவில் தமிழ்நாடு தவிர்த்து பிற பகுதிகளில் கபாலி இதுவரை ரூ 76 கோடிகளை வசூலித்துள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் வாங்கிய விலையை விட மூன்று மடங்குக்கும் மேல் ரூ 31 கோடி வசூலித்துள்ளது கபாலி. கேரளாவில் ரூ 17 கோடிகள். தெலுங்கில் முதல் இரண்டு வாரங்கள் பிரமாதமாக ஓடிய கபாலியின் வசூல் மூன்றாவது வாரத்தில்தான் குறைந்ததாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். அதேநேரம் நிஜாம் பகுதியில் இன்னும் கபாலி திருப்தியான வசூலுடன் ஓடுவதாகக் கூறுகிறார்கள். இதுவரை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 40.41 கோடியை கபாலி வசூலித்துள்ளது. வட இந்தியப் பகுதிகளில் வேறு எந்தத் தென்னிந்திய மொழிப் படத்துக்கும் கிடைக்காத அளவு ரூ 44 கோடி வசூல் கிடைத்துள்ளது கபாலியின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்புகளுக்கு. குறிப்பாக கபாலி இந்தியை விட, சப் டைட்டிலுடன் கூடிய நேரடி தமிழ்ப் படத்துக்குத்தான் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்தியில் தானே சொந்தமாக ரிலீஸ் செய்தார் கலைப்புலி தாணு என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் ரூ 214 கோடிகளைக் குவித்துள்ளது கபாலி. இது 20 நாட்கள் கணக்கு. சர்வதேச அளவில் கபால
Name : panneer Date :8/12/2016 1:05:53 PM
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ப்ளாக்பஸ்டர் படமான கபாலியின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடிகளைத் தாண்டியுள்ளது. நூறாண்டு தமிழ் சினிமா சரித்திரத்தில் எந்தத் தமிழ்ப் படமும் தமிழக எல்லைக்குள் மட்டும் இத்தனை கோடிகளை வசூலித்ததில்லை. அந்த வகையில் சரித்திரம் படைத்துள்ளது கபாலி. கபாலி படம் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது. இன்றோடு மூன்றாவது வாரத்தைத் தாண்டுகிறது. இந்தப் படத்தின் வசூல் குறித்து முழுமையான வெளிப்படையான தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்கள் அனைத்துமே சாதாரண டிக்கெட் விலை மற்றும் போடப்பட்ட காட்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டவை. ஆனால் ரஜினி படத்தைப் பொறுத்தவரை இந்த கணக்கீடுகள் தவறானவை. காரணம், முதல் மூன்று தினங்களில் அத்தனை டிக்கெட்டுகளும் குறைந்தது ரூ 300 முதல் அதிகபட்சம் ரூ 2500 வரை விற்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்துத் திரையரங்குகளிலுமே கபாலிதான் திரையிடப்பட்டது. ஆனால் வசூல் கணக்கு என்று காட்டியிருப்பது ரூ 120, 95, 90, 50, 40, 30, 10 டிக்கெட்டுகளைத்தான். முதல் வாரத்தின் திங்கள்கிழமையிலிருந்துதான் டிக்கெட்டுகள் சாதாரண விலைக்கு விற்கப்பட்டன. இரண்
Name : anushaw Date :8/11/2016 1:16:19 PM
படம் மிகவும் அருமை நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் கபாலியை பார்த்து மகிழ்ந்தேன் ரஜினி கபாலி நெருப்புடா உண்மையான தமிழன்டா
Name : kumarasamy siva Date :8/9/2016 1:06:27 PM
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி எக்கச்சக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. குறிப்பாக வசூலில் கபாலிக்கு அருகில்கூட எந்தப் படமும் வரமுடியாத நிலை. இதனால் கோடிகள் என்பதே சர்வசாதாரண வார்த்தையாகிவிட்டது மீடியாவில். சில தேசிய நாளிதழ்களில் கபாலி ஏற்கெனவே ரூ 700 கோடியைக் குவித்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முந்தைய வர்த்தகங்கள், பிராண்டிங், ஸ்பான்சர்கள், தொலைக்காட்சி உரிமை, ஆடியோ விற்பனை மூலம் மட்டும் ரூ 220 கோடி வந்துள்ளதாகவும், திரையரங்குகளில் நேரடி வசூல் மூலம் மட்டுமே ரூ 500 கோடி வந்துள்ளதாகவும் பிடிஐ, The Financial Express போன்றவை செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு முன்பு ரூ 500 கோடிக்கு மேல் குவித்த இந்தியப் படங்கள் பாகுபலி மற்றும் பிகே. இந்தத் தொகையைக் குவிக்க அவற்றுக்கு கிட்டத்தட்ட 4 வாரங்கள் தேவைப்பட்டன. அதுவும் பிகே சீனாவில் வெளியாகி அந்தத் தொகையும் சேர்ந்த பிறகுதான் பெரிய வசூலைக் குவித்தது. பாகுபலி கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுத்துக் கொண்டது. கடந்த மாதம் வெளியான சுல்தான் படம் இன்னும் ரூ 500 கோடி க்ளப்புக்குள் நுழையவில்லை. ரூ 490 கோடியை அந்தப் படம் வசூலித்துள்ளதாகக்
Name : kumarasamy siva Date :8/8/2016 5:38:26 PM
தம்பி சரிஎஸ்ராஜ் ரஜனி தமிழன் என்ற நினைப்பில் இருக்கின்றேர்ர்களா. ரஜனி கன்னடக்காரன் என்பது தேடிஜாத? தமிழனுக்கு எண்ணச்செய்து இருக்கான்?கொண்டாடாதீர்கள் துரத்தி அடியுங்கள்.
Name : kumarasamy Date :8/8/2016 10:18:36 AM
Rajinikanth starrer Kabali has grossed around 17.26 crores in Chennai. These are huge numbers and as expected Rajinikanth has set a new all-time record at the Chennai city box office.
Name : Charlesraj Date :8/8/2016 10:13:49 AM
ரஜினிடா தமிழன்டா கபாலிடா வெற்றிடா வசூல் வேட்டைடா
Name : Kumarasamy Date :8/6/2016 12:23:57 PM
நடமாடும் தெய்வம் கலியுக கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் புரட்சி செய்து வருகிறது. தமிழனின் பெருமையை உலகறிய செய்த மனித தெய்வம் ரஜினி அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்கவே !!!
Name : charlesraj Date :8/6/2016 10:50:13 AM
இது ஒரு படம் டப்பா படம் தப்பா பாட்டு போங்கடா நல்ல படம் போய் பாருங்க
Name : kumarasamy Date :8/6/2016 12:06:16 AM
ஐயா தமிழ்நாடடை விடடே துரத்தவேண்டிய ஒருத்தனின் படத்திற்கு இத்தனை விளம்பரமும் வசூலும்? நினைத்துப்பார்க்கவே வெட்கமாயிருக்கின்றது. வெட்கமில்லாத தமிழன் என்றுதான் நிமிருவனோ தெரியவில்லை.
Name : kumarasamy Date :8/5/2016 11:50:28 PM
இதெல்லாம் ஒரு படம் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் .ரஜனி ஒரு தமிழனிற்கு செய்தது என்ன தமிழனாய் இவனை ஏன் வாழவைக்கவேண்டும் அறிவுகெடட தமிழா அண்ணன் சீமான் சொல்வது நூறுவீதம் உண்மை தமிழ் மண்ணில் இருந்து அகற்ற வேண்டிய மூன்று நபர்களில் முதலாவது நபர் ராஜனிஜெ.மற்றவர்கள் ஜாரென்பது புரியுதா?
Name : தணிகாசலம் Date :8/5/2016 10:15:17 AM
கபாலி இந்த அளவு மாபெரும் வசூலையும், வெற்றியையும், உலகத் தமிழர்களிடம் மட்டுமல்ல, தமிழரல்லாதோர் மத்தியிலும் தாக்கத்தையும் ரஜினி ஒருவரால் மட்டுமே சாத்தியம், சூப்பர் ஸ்டாரின் படம் என்று நினைத்து வருபவர்களுக்கு சூப்பர் ஸ்டார் + ரஞ்சித் காம்பினேஷனில் ஒரு புதுவித விருந்து. மிகவும் விருப்பத்துடன் நடித்து ‘ புரட்சிகரமான படம்’ என்று சான்றும் கொடுத்துள்ள ’கபாலி’ மூலம் ரஜினிஅவர்கள், தன் ரசிகர்களைச் சமூகச் சீர்த்திருத்தச் சிந்தனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தமிழர்கள் வாழ்வு மலரட்டும்.. வாழிய செந்தமிழ்
Name : JRAVICHANDRAN Date :8/4/2016 1:30:02 PM
கபாலி படம் வெகு சூப்பர். ரொம்ப நன்றாக உள்ளது.இது வரை 3 முறை திரை அரங்கம் சென்று பார்த்து விட்டேன்,.
Name : தணிகாசலம் Date :8/3/2016 10:07:58 AM
கபாலி -யின் வருமானத்தை வைத்து "அப்பா" திரைப்படம் போன்ற நல்ல கதையம்சம் உள்ள பத்து திரைப்படங்கள் தயாரிக்க 50விழுக்காடு மானியமாக கொடுக்க வேண்டும்.
Name : RAVICHANDRAN Date :8/2/2016 11:26:36 AM
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கபாலி மிக நன்றாக உள்ளது. இது வரை மூன்று முறை பார்த்து விட்டேன். படம் அலுக்கவில்லை.அதில் இரண்டு முறை குடும்பத்தோடு பார்த்தேன்., தலைவர் நடிப்பில் பின்னி விட்டார்.
Name : JRAVICHANDRAN Date :8/1/2016 5:28:19 PM
ரஜினியின் கேவலமான படங்களில் இதுவும் ஒன்று, இதற்க்கு முன்னாள் பாபா என்று ஒரு படம் ,அதில் பாட்டுக்களாவது பரவாயில்லை. 2.5 மணி நேரம் வீணானதுதான் மிச்சம், இதற்க்கு விமர்சனமே தேவை இல்லை, குப்பை படம், ரஜினி ப்ளீஸ் ரசிககிகளாய் விட்டு விடுங்கள்.
Name : Thamizh Date :8/1/2016 10:27:12 AM
ரஜினிடா தமிழன்டா கபாலிடா நெருப்புடா ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘கபாலி’ படம் தலைநகர் அபுஜாவில் இரண்டு காட்சிகளும், மற்றொரு பெரிய நகரான லாகோஸ்-ல் இரண்டு காட்சிகளும், போர்ட் ஹர்கோர்ட், கனோ ஆகிய ஊர்களில் தலா ஒரு காட்சி என மொத்தம் 6 காட்சிகள் திரையிட்டுள்ளார்கள். நைஜீரியா தலைநகரான அபுஜா-வில் வசிக்கும் ரஜினி ரசிகர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த திலீப், எல்விஸ், ராஜேந்திரன், ராஜ், கணேஷ், செந்தில், ஹரி ஆகியோர் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்காக படத்தை தங்களது சொந்த முயற்சியால் திரையிட்டுள்ளார்கள். ‘கபாலி’ படத்தைப் பார்க்க தமிழ் மக்கள், இந்திய மக்கள், நைஜீரியா, அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு மக்கள் ஆகியோரும் படத்தை ஆர்வத்துடன் வந்து ரசித்துள்ளார்கள். 6 காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்பட்டுள்ளது. படம் பார்க்க வந்த அனைவருக்கும் மதிய உணவும், இரவு உணவும் ரஜினி ரசிகர்கள் சார்பில் வழங்கப்பட்டது. நைஜீரிய நாட்டுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி ‘கபாலி’ படக் காட்சியைத் துவக்கி வைத்துள்ளார். அனைவரும் ‘கபாலி
Name : karigalan Date :7/29/2016 10:48:50 AM
ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வசூலில் தினமும் ஒரு சாதனைப் படைத்து வருகிறது. இந்தப் படம் வெளியான ஆறாவது நாளில் ரூ 300 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வார இறுதி நாட்களிலும் பெரும்பாலான அரங்குகளில் காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளதால், ரூ 400 கோடிகளை எளிதாகத் தாண்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரூ 400 கோடியைத் தாண்டினால், கபாலிதான் ரஜினியின் திரையுலக வாழ்க்கையிலேயே அதிக தொகையை வசூலித்த திரைப்படம். கபாலியின் வெளிநாட்டு வசூல்தான் அத்தனை இந்திய சினிமாக்காரர்களையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் உரிமையை ரூ 8.5 கோடிக்கு வாங்கியிருந்தனர் அமெரிக்க விநியோகஸ்தர்கள். இந்தத் தொகையை முதல் நாளே தாண்டிவிட்டது கபாலி. முதல் மூன்று நாட்களில் மட்டுமே ரூ 28 கோடியைக் குவித்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியத
Name : ஆரோக்கியவேல் Date :7/28/2016 11:16:27 AM
கபாலி படம் வசூலில் வரலாற்று சாதனை புரிந்து வருகிறது.மக்கள் குடும்பம் குடும்பமாக படத்துக்கு வருகை தர ஆரம்பித்து விட்டார்கள். ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி மக்களுக்கு., மகிழ்ச்சி என்னடா வயிறு எரியுதா ??? இந்த இதை படி இன்னும் எரியும். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நடிப்பில் வெளிவந்த கபாலி படம் வசூலில் வரலாற்று சாதனை புரிந்து வருகிறது.மக்கள் குடும்பம் குடும்பமாக படத்துக்கு வருகை தர ஆரம்பித்து விட்டார்கள். ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி மக்களுக்கு.,
Name : கலையரசன் Date :7/27/2016 5:37:15 PM
ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தை ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு குறிப்பிட்ட விலைக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வியாபாரம் செய்துள்ளார். ஒவ்வொரு ஏரியாவிலும் ‘கபாலி’ எவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆனது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய ரூபாவில் பின்வருமாறு, சென்னை சிட்டி – ரூ. 6.30 கோடி. செங்கல்பட்டு – ரூ. 14.00 கோடி. கோயம்புத்தூர் – ரூ. 13.00 கோடி. மதுரை – ரூ. 8.10 கோடி. திருச்சி / தஞ்சாவூர் – ரூ. 7.40 கோடி. சேலம் – ரூ. 6.40 கோடி. திருநெல்வேலி / கன்னியாகுமாரி – ரூ. 4.85 கோடி. தென் ஆற்காடு – ரூ. 3.95 கோடி. வட ஆற்காடு – ரூ. 4.50 கோடி. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.68.50 கோடிகளுக்கு ‘கபாலி’ வியாபாரம் ஆகியுள்ளது. இதுதவிர, மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும், செட்டலைட் உரிமம், ஆடியோ உரிமம் ஆகியவற்றிலும் குறிப்பிட்ட விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. அதை கீழே பார்ப்போம்.. ஆந்திரா / தெலுங்கனா (தியேட்டர் மற்றும் செட்டலைட் உரிமை) – ரூ. 32.00 கோடி கர்நாடகா (அனைத்து மொழிகளுக்கும்) – ரூ. 10.50 கோடி. கேரளா (தியேட்டர் மற்ற
Name : விஜய் Date :7/27/2016 3:27:06 PM
கபாலி படம் இந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் படம். இந்தியாவில் மட்டும் கபாலி முதல் 3 நாட்களில் ரூ.300 கோடி வரலாற்று வசூல் சாதனை புரிந்து உள்ளது. மேலும், யுஎஸ்ஸில் அமீர் கானின் தூம் 3 முதல் வார இறுதியில் 3.88 மில்லியன் டாலர்கள் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அமீர் கானின் பிகே 3.5 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த சாதனையை கபாலி நையப்புடைத்திருக்கிறது. முதல்வார இறுதியில் கபாலி யுஎஸ்ஸில் 4.04 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது (சில இணையதளங்களில் 3.7 மில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது முழுமையான வசூல் கிடையாது. ஹாலிவுட் படங்களின் வசூலை வெளியிடும் இணையதளம் 4.04 என கபாலியின் உண்மையான வசூலை வெளியிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 26 கோடிகளாகும்). இது ஓபனிங் வீக் எண்ட் வசூல் சாதனை மட்டுமே. அதேநேரம் யுஎஸ் ஒட்டு மொத்த வசூலில் சாதனை படைக்க கபாலி இது போல் ஒரு மடங்கு இன்னும் வசூலிக்க வேண்டியுள்ளது. சல்மான் கானின் சுல்தான் கடந்த ஞாயிறுவரை யுஎஸ்ஸில் 31.61 கோடிகளை வசூலித்துள்ளது. கனடா, யுகே மற்றும் அயர்லாந்து, ஆஸ்ட்ரேலியா, மலேசியா போன்ற நாடுகளி
Name : தமிழ்நேசன் Date :7/27/2016 10:45:00 AM
ஏழைகளின் மன்னன், பாட்டாளிகளின் தலைவன், ஒடுக்கப்பட்ட மக்களின் காவலன் எங்கள் தலைவர் ரஜினி அவர்களின் நடிப்பில் வெளிவந்துள்ள காவியம் கபாலி, உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வசூலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட்டது.
Name : kumar p Date :7/26/2016 9:55:50 PM
சூப்பர் சூப்பர் சூப்பர்
Name : தமிழ்ச்செல்வன் Date :7/26/2016 12:55:13 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கபாலி படம் மாபெரும் வெற்றி படைப்பாக உலக தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
Name : karthik Date :7/26/2016 10:02:04 AM
Padatha muthal thadava partha pozhuthu pidikkala but second time partha pozhuthu pidithu irunthathu athuvum Rajini sir ovvaru asaivilum nadippai velipaduthiya vitham pudumayagavum arumayagavum irunthathu & anaithu saga tamil nadigargalum avargaludaya pangai cerappa seithu iruntharkal ithu RaJini sir in maarupatta movie nice movie vaazthukkal
Name : panneer Date :7/25/2016 9:15:23 PM
நாட்டுக்கு இதுவா முக்கியம்
Name : Thamizh Date :7/25/2016 4:13:52 PM
கார்ப்பரேட் கம்பனிக்கு எல்லா டிக்கெட்டையும் வித்து காசாக்கிட்டு ரஜினியோட உண்மையான ரசிகர்களை ஏமாற்றி இருக்க தேவை இல்லை. அரசியல் + பிசினஸ் இரண்டும் சேர்ந்து யார் ரசிகனாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயல்கிறதோ என்ற அச்சம் எழுகிறது. 1000 கொடுக்க முடிஞ்சா முன்னுரிமை, கொடுக்க முடியாட்டி 100 ஆகும்போது வந்து பாருன்னு ரசிகனா அவமான படுத்திடீங்களே. மகிழ்ச்சி இல்லை இகழ்ச்சி.
Name : paul Date :7/25/2016 2:08:49 PM
திரு. ரஜினி என்கிற சிவாஜி ராவ் நடித்த கபாலி திரைபடம்மூலம் தமிழ்நாட்டுக்கு எல்லா வளமும் கிடைக்குமா நக்கீரன்!
Name : விஜய் Date :7/25/2016 10:09:17 AM
கபாலி வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி. வாழ்க உலக சூப்பர்ஸ்டார் ரஜினி
Name : Appu Nihirthan Date :7/25/2016 9:20:47 AM
பாலசந்தர் மாணவனை மீண்டும் பார்த்த மகிழ்ச்சி.இத்தனை நாளாய் எதிர் பார்த்தது கபாலியில் ஓரளவு கிடைத்தது. மற்றும் படி படம் ரஞ்சித் படமும் இல்லாமல் ரஜினி படமும் இல்லாமல் சாதாரண ரஜினி ரசிகனை ஏமாற்றி விட்ட்து. அதிக பில்டப்பு படம் சாதாரணம், அதிகரித்த டிக்கட் விலையு படத்தின் வசூலுக்கு பாதகமில்லாமல் இருக்கலாம். வாழ்த்துக்கள் ரஜினி.
Name : karigalan Date :7/25/2016 6:30:01 AM
#Kabali worst story .Highly Disappointed ரஜினி wasted ரஞ்சித் worst FLOP
Name : ram Date :7/25/2016 6:24:36 AM
கபாலி வெறுப்புடா உனக்கு என்ன? very fworst screenplay it test's your Patience to the core. Highly Disappointed பிளாப் பிளாப்
Name : Rajarajan Date :7/25/2016 6:21:53 AM
T#Kabali very flat screenplay it test's your Patience to the core.Highly Disappointed FLOP
Name : krish Date :7/25/2016 4:24:58 AM
கபாலி flop
Name : Ravi Date :7/25/2016 3:30:49 AM
Mr Babu ஒரு நல்லவர தப்பசொல்வது தவரு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படம் பார்க்கவேண்டாம் நாட்டில எவ்வளவோ பிரச்சனைக்கு காரனமான நபர்கள் இருக்கும்போது கன்டிக்க வேண்டிய விசயங்கள்இருக்கும்போது நீங்க இப்படி இருப்பது காமடியாக இருக்கிறது
Name : Ravi Date :7/25/2016 3:04:32 AM
நாங்க ரஜனி படம்பார்க்க விரும்பினோம் ரஞ்சித் 50 %தான்தந்து இருக்கின்றார் சூப்பர்ஸ்டார்னாஒருமாஸ் படமா இருக்கனும்
Name : Ravi Date :7/25/2016 3:03:38 AM
நாங்க ரஜனி படம்பார்க்க விரும்பினோம் ரஞ்சித் 50 %தான்தந்து இருக்கின்றார் சூப்பர்ஸ்டார்னாஒருமாஸ் படமா இருக்கனும்
Name : Thambi Velupraba Date :7/24/2016 7:45:43 PM
தோழர்களே! கபாலி திரைப்படம் ரஜினி என்னும் நடிகனை வெகுகாலத்திற்கு பின்பு வெளிகொணர்ந்த ஒரு படம்..ரஜினி என்னும் அற்புத நடிகனை 'இந்த சினியுலகம் கடந்த பல்லாண்டுகளாக வெறும் 'வர்த்தக கொள்ளைக்கு' மட்டுமே பயன்படுத்திவந்திருக்கிறது..அவரை பின்தொடரும் 'நல்இதயம் கொண்ட ரசிகர்களை வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாக மட்டும் தான் தொடர்ந்து வைத்திருக்கிறது..அந்த அற்புத கலைஞனுக்குள் இருக்கு மாறுபட்ட நடிப்பை வெளிக்கொணர்ந்து அவருடைய ரசிகர்களின் ரசனையை/ சமுக சிந்தனையை வளர்ப்பதற்கு எந்த வாய்ப்புமே கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.. MGR அவர்கள் அந்த விஷயத்தில் மிகத்தெளிவாக இருந்தார் ''கூலியாக, மீனவராக, கழைக்கூத்தாடியாக, நாடோடியாக, பெரும்பணக்காரராக, நரிக்குறவராக-என்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து எல்லா தரப்பு ரசிகர்களிடமும் ஒற்றுமையையும்-வர்க்க பேதமும் இல்லாமல் இன்றும் நம் எல்லோர் மனங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..அவருக்கு பிறகு 'எல்லா தளத்திலும், வயதிலும் ஏன் இந்த உலகெங்கிலும் ரசிகர்களை கொண்ட ஒரே கலைஞன் ரஜினிகாந்த் மட்டுமே..ஆனால் ரஜினி என்னும் நடிகனின் நடிப்பு திறனும், அவரின் ரசிகர்களின் ரசனையும் வர்த்
Name : கந்தசாமி Date :7/24/2016 5:06:15 PM
மலேசியாவுல தமிழருக்காக போராடுற மாதிரி நடிக்க தான் தெரியும். அப்பாவி ரசிகன் பணத்தை சட்ட விரோதமாக கொள்ளையடிக்கும் செயலை தடுக்க கண்டிக்க துப்பில்ல. வெட்கம் கெட்ட மீடியாக்கள் ஊதிபெருக்க எதிர்பார்ப்பினை அதிகமாக்கி பணம் பண்ணியாச்சி. கல்லாவை ரொப்பியாச்சி. கோர்ட்டும் கூட அதிகம் விலைக்கு டிக்கெட் விக்குறத கண்டிக்கல. கொள்ளையடிக்குற வியாபாரம் இல்லையா அதான் எல்லோரும் எல்லாத்தையும் மூடிக்கிட்டாங்க. படம் ப்ளாபா என்னன்னு தெரியல ஆனா கண்டிப்பா ப்ளாப் ஆகனும் அப்ப தான் ஓவர் பில்டப் பன்றவன் திருந்துவான்.
Name : anjali Date :7/24/2016 3:38:16 PM
கபாலி எப்போவுமே கெத்து.ஆன ரஞ்சித் தான் வெத்து.....இந்த படம் சூப்பர்ஸ்டாரால் தான் இவ்வளவு மவுசு....... ரஞ்சித் இனி எங்க சூப்பர்ஸ்டாரை வச்சி எந்த படத்தையும் பண்ணிடாத.இது என் வேண்டுகோள்
Name : Bharathikumar Date :7/24/2016 12:47:13 PM
ரஜினி என்பதால் உங்கள் விமர்சனம் மிகைப்படுத்தி எழுதிவிடுவீர்கள் எனநினைதேன். மிக சரியாக விமர்சனம் மகிழிச்சி. கோடி கணக்கில் படம் எடுத்து வெளியிட்டால் ஒரு சில வரிகளில் சமூக வலைத்தளங்கள் பொறுப்பில்லாமல் விமர்சங்கள் எல்லா படங்களுக்கும் வெளியிடுவது சரியில்லை. பாரதிக்குமார்
Name : rajasekar Date :7/24/2016 11:10:03 AM
இது தான் சரியான நேரம் ரஜினி சினிமா இல் இருந்து ஓய்வு பெற. இல்லை என்றால் மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்து விடுவார்கள். ராஜசேகர்
Name : raju Date :7/24/2016 9:42:38 AM
திரு . பாபு நீங்க சொல்லுருத்துல இருந்து ஒன்றுதெரியுது நீக்க உங்களுக்கு புடிச்ச நடிகருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கிக்குடுக்கணும். அதிக விலை கொடுத்து பார்ப்பது இப்ப இருக்கிற எல்லா முன்னணி நடிகருக்கும் பொருந்தும். நீக்கல் ரஜினி மட்டும் சொல்லுவது ஏன்?
Name : kumaran Date :7/23/2016 8:22:30 PM
ஏன் இந்த ஓவர் pildup ஏன் சாப்பாடுக்கு இருக்கிற பணத்தையும் சுரண்டவாடா உங்களிட்கு பணம்தான் உலகமாட ? கொஞ்சம்தான்னும் திருத்துங்கடா
Name : R.BABU Date :7/23/2016 1:14:41 PM
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது தயவு செய்து கபாலி கோமாளி என இன்னும் மக்களை மாய வலையில் மூழ்கவிடாதீர்.உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக திரு ரஜினி என்றால் ஏன் உழைக்கும் மக்களின் ஒரு மாத வருமானத்தை ஒரே நாளில் தியேட்டரில் சுரண்ட இவர் அனுமதிக்கிறார்.தான் சம்பாதித்து தன் மகள் மருமக பிள்ளைகள் கோடியில் புரள நம்மை சுரண்டும் நவீன எந்திரன்.மக்களே இன்னுமா இவரை நம்புகிறீர்
Name : satheeshkumar Date :7/23/2016 1:12:21 PM
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலை உலகுக்கு சூப்பர்ஸ்டார் மூலம் உணர்த்திய பா. ரஞ்சித் அவர்களுக்கு நன்றி இவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம்
Name : thendral Date :7/23/2016 12:26:50 PM
நல்ல படம். சரியான விமர்சனம் .
Name : syed mubarack Date :7/23/2016 11:42:52 AM
நக்கீரன் விமர்சனம் எப்போதும் சரியாக தான் இருக்கும் என்பதற்கு கபாலி விமர்சனம் ஓர் உதாரணம் சூப்பர் நன்றி நக்கீரன்
Name : lenin Date :7/23/2016 2:45:00 AM
கபாலி - கெத்துடா..
Name : R.Nadarajah switzerland Date :7/22/2016 8:05:40 PM
ரஜனி இறை நம்பிக்கை உடையவர் மற்றவர் மனம் நோக பேசமாட்டார் தன் உழைப்பு தன் தொழில் என நினைத்து வாள்பவர் பிறர் குறைசொன்னாலும் அதை பொருட் படுத்தாதவர் சிறியவர் பெரியவர் என பார்க்காதவர் எல்லோரிடமும் அன்பு செலுத்துவார் அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்க வளமுடன்
Name : RAJESH Date :7/22/2016 7:54:20 PM
சும்மா சொல்லக்கூடாது காபலி பிளாப் , ஓவர் பில்டப் உலகுக்கு ஆகாது