விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :13, ஆகஸ்ட் 2016(11:46 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2016(11:46 IST)ஜோக்கர் - ஒரு பார்வை

           திரைப்படம் என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல... பார்வையாளனை சிந்திக்க வைக்கவும் வேண்டும். நம்மை சுற்றி நடக்கும் அரசியல், ஊழல், கொள்ளை என எதையும் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது அதிகார வர்கத்திற்கு வசதியாக அமைந்துவிடுகிறது. டிஜிட்டல் இந்தியா என்று கோஷங்கள் எழுப்பும் அரசியல்வாதிகள் கழிவறை வசதிகள் இல்லாத பல கிராமங்கள் இந்தியாவில் இருப்பதை அறியாமல் இருப்பார்களா என்ன? இதை எதிர்த்து யார் கேள்வி கேட்பது? அப்படி ஒருவர் கேட்டால் அவருக்கு பெயர் “ஜோக்கர்”.

மன்னர் மன்னன் மல்லிகாவை அநியாயதுக்கு காதலிக்கிறார். அவர்கள் காதல் மலரும் இடம் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத களம். ஆம், அது ஒரு கட்சி பொதுக்கூட்டம். ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் ஒரு குவாட்டருக்கும் கொஞ்சம் பணத்திற்கும் அந்தக் கட்சியின் கூட்டத்திற்கு லாரியில் மக்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தன் தந்தைக்காக மல்லிகா குவாட்டர் பாட்டில் வாங்க கூட்டத்தில் திண்டாடுகிற நேரம் மன்னர் மன்னன் அதற்கு உதவி செய்கிறார். பிரியாணிக்கு அடித்துக்கொள்ளும் கூட்டத்திலும் அவரே உதவி செய்கிறார். இப்படி துவங்கும் இவர்கள் சந்திப்பு காதலாகிறது. ஆனால், காதலுக்கு வில்லனாய் வருகிறது கக்கூஸ். ஆம், படிக்கும் பள்ளியிலும் வீட்டிலும் கழிவறை இல்லாமல் அவதிப்படும் மல்லிகா, தன் புகுந்த வீட்டிலாவது கழிவறை இருக்க வேண்டும் என்று கருதுகிறார். மன்னர் மன்னன் எப்படியாவது தன் வீட்டில் கழிவறை கட்டிவிட காசு சேர்க்கிறார். கழிவறை கட்டி முடிப்பதற்குள்ளாகவே இருவரும் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். இந்த நேரத்தில் தான் கிராமங்களில் கழிவறை கட்டித்தரும் திட்டத்தை ஜனாதிபதி அறிவிக்கிறார். தன் கனவு நிறைவேறப்போவதை நினைத்து மகிழ்கிறாள் மல்லிகா. கழிவறை கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் ஒரு சர்வதேச ஊழல் நடக்கிறது. அந்த சதி வலையில் சிக்கி சின்னாபின்னமாகிறது மல்லிகாவின் வாழ்வு. அந்த அநீதியை எதிர்த்து போராடுகிறார் மன்னர் மன்னன். சட்டத்தின் முன்பு சாமான்யனின் குரல் வென்றுவிடுமா என்ன?

அதிகாரிகளின் அலட்சியம், அரசியல்வாதிகளின் அராஜகம், சட்டத்தின் கடமை, சமூகத்தின் சகிப்புத்தன்மை என படம் முழுக்க அரசியல் அனல் பறக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதி முதல் முகநூலில் வளம் வரும் யுவகிருஷ்ணா வரை யாரையும் விட்டுவைக்க வில்லை ஜோக்கர். முகநூல் பதிவுகளால் தனக்கு ஆதரவு திரட்டுவது சுவாரஸ்யம். அரசியல் பேசும் இப்படத்தை படமாக்க தர்மபுரி மாவட்டத்தை தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். மது ஒழிப்பைப் பற்றி பேசும் ஒரு கட்சியின் அரசியல் மாநாட்டில் மேடைக்கு பின்புறம் குவாட்டர் பாடில்கள் கொடுக்கப்படுகிறது...

கார்ப்பரேட் சுரண்டலை கண்டிப்பது, மணல் கொள்ளையை எதிர்த்து பேசுவது, பெப்சி - கொக்கக் கோலாவை விஷம் என்று விமர்சிப்பது, கர்த்தர் எப்படி காப்பாற்றுவார் என்று பகுத்தறிவு பேசுவது, மது ஒழிப்பைப் பற்றி பேசுவது, மினரல் வாட்டரை எதிர்த்து கோஷம் போடுவது, விவசயிகளின் தற்கொலையை பேசுவது, பெரியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்துவைப்பது... டி.வி, கிரைண்டர், மிக்சி, மின்விசிறி என இலவசங்கள் கொடுக்கும் அரசால் ஒரு கக்கூஸ் கட்டித்தர முடியாதது ஏன் என்று கேள்வி கேட்பது என தூங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தின் மீது ஓங்கி ஒரு சாட்டையடி கொடுக்கிறார் இயக்குனர் ராஜுமுருகன். மன்னர் மன்னாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தன் கர்ப்பிணி மனைவி அடிபட்டு கிடப்பதை பார்த்து கதரும் காட்சி அதற்கு உதாரணம். சிறையில் இருக்கும்போது தன் மனைவியை நினைத்து நெகிழ்வது நம் இதயங்களை கலங்க வைக்கிறது. மல்லிகாவாக ரம்யா பாண்டியன் கிராமத்து சாமந்திபோல அசத்தலான அழகு. ‘ஜாஸ்மின்’ பாடலில் வரும் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. 

மிலிட்டரியாக எழுத்தாளர் பவா செல்லதுரை அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இசையாக வரும் காயத்திரி கிருஷ்ணா இயல்பான நடிப்பால் அசத்துகிறார். படத்தில் முக்கியமானவர் பொன்னூஞ்சல் கதாபாத்திரத்தில் வரும் மு.ராமசாமி. இப்படி தெருவுக்கு ஒரு ராமசாமி இருந்தால் மக்களுக்கான விடுதலை விரைவில் சாத்தியமாகும். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் நம்மைப் பார்த்து பேசும் வசனம்... வசனமல்ல... உண்மை! செழியனின் ஒளிப்பதிவு, சீயன் ரோல்டனின் இசை, யுகபாரதியின் அதிரடியான வரிகள், வேலுச்சாமியின் படத்தொகுப்பு என அனைத்தும் படத்திற்கு பலம். 

குக்கூ படத்தில் எதார்த்தமான காட்சிகளோடு நம் இதயங்களில் இடம் பிடித்த இயக்குனர் ராஜுமுருகன், எந்த விதத்திலும் தன்னை சமரசம் செய்துகொள்ளாமல் மீண்டும் சமூகத்துக்கு தேவையான அரசியலை பேசியிருக்கிறார். 
 
படம் பார்த்து வெளியே வரும் போது இப்படியே சொல்லத் தோன்றுகிறது... 
“ஏ சமூகமே... காந்தியாக இருந்தது போதும், பகத்சிங்கை கட்டவிழ்த்துவிடு!”

ஜோக்கர் - ஹீரோ!

- பெலிக்ஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : pandian karaikudi Date :8/22/2016 2:05:48 PM
சமீபகாலமாக திரைப்படம் பார்க்காத என்னை தியேட்டருக்கு அழைத்துவந்தான் இந்த ஜோக்கர் இல்லை இல்லை ஹீரோ ராஜு முருகன் vaalthukkal
Name : R.sasikumar Date :8/21/2016 11:04:46 PM
படம் முழுக்க வரும் இந்த காகாட்சிகள்நம்நாட்டைஆளும்கட்சி மற்றும்எதிர்கட்சிகள்மட்டுமினறிஆல்இந்திய்அரசியலுக்கேசரியானபாடம்