விமர்சனம்

நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
தனி ஒருவன் - மக்களை வென்றவன்!
......................................
தர்மதுரை

ப்போதுமே ரோலர் கோஸ்டர் பயணமாக இல்லாமல் இரவு நேர படகு பயணமாகவே இருக்கும் இயக்குனர் சீனுராமசாமியின் படங்கள். சமூகத்தில் இருக்கும் முரண்பாடுகளை அதிகம் விவாதிக்காமல், சமூகத்தை சிந்திக்க வைக்கும் முன்னேற்றத்திற்கான சிந்தனைகளை தன் படைப்புகளில் பதிய வைப்பார். ஒரு மனிதனின் வாழ்வியல், அவன் சந்திக்கும் பிரச்சனைகள், அவனுக்கான ஒரு வாழ்க்கை காத்திருப்பதை உணர்த்தும் நம்பிக்கை என உணர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் குழைத்து வண்ணங்களாக திரையில் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். 


தன் மருத்துவப் படிப்பை முடித்த தர்மதுரை (விஜய் சேதுபதி) தன் கல்லூரி பேராசிரியர் சொன்ன கொள்கையின் அடிப்படையில் சொந்த கிராமத்தில் மருத்துவராக இருந்து வருகிறார். அதே ஊரைச்சேர்ந்த அன்புச்செல்வி (ஐஸ்வர்யா ராஜேஷ்) பிடித்துப்போக தன் காதலை சொல்கிறார் தர்மதுரை. தன் அம்மா, அண்ணன், தம்பிகள் என குடும்பமாக அன்புச்செல்வியை பெண் கேட்கிறார்கள். இருவீட்டாரும் சம்பந்தம் தெரிவிக்கிறார்கள். ஒரே சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பொருளாதார அடிப்படையில் அன்புச்செல்வி தாழ்ந்தவராகவே தெரிகிறார் தர்மதுரை குடும்பத்துக்கு. கல்யாணம் நடப்பதில் பிரச்சனைகள் ஏற்பட, அன்புச்செல்வி தற்கொலை செய்துகொள்கிறார். பூந்தோட்டமாக இருந்த தர்மதுரையின் வாழ்க்கை பாலைவனமாய் மாறுகிறது. விடிந்தால் குடிப்பதும், குடித்தால் விடிவதும் என மதுவுக்கு அடிமையாகி அட்டகாசங்கள் செய்கிறார் தர்மதுரை. மகனை நேசிக்கும் பாண்டியம்மாள் (ராதிகா) எங்காவது போ... ஆறு மாதம் கழித்து திரும்பி வா... என்று சொல்லி மாற்றத்தை எதிர்பார்த்து தர்மதுரையை அனுப்பிவைக்கிறார். தான் நினைத்த வாழ்க்கையை அடையமுடியாமல் போன தர்மதுரையின் தவிப்பும், தான் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை ஏமாற்றமாக போன சுபாஷினியின் (தமன்னா) கண்ணீரும் ஒன்று சேர்கிறது... இதற்கிடையில் தர்மதுரை பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார் என ஊர் ஊராக அவரைத் தேடி வருகிறார்கள், அவரின் அண்ணன் தம்பிகள். பணம் என்ன ஆனது? தர்மதுரைக்கு என்ன ஆனது? என்ற கேள்விகளோடு நகர்கிறது திரைக்கதை. ஒரு புத்தகத்தை படித்து முடிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை க்ளைமாக்ஸ் காட்சியில் ஏற்படுத்துகிறார் இயக்குனர்.விஜய் சேதுபதியின் நடிப்பு அசத்தல்... ஒரு கிராமத்து இளைஞனின் கோபம், கண்ணீர், சந்தோஷம், பாசம் என நம் இதயங்களை மென்மையாக்குகிறது அவரின் நடிப்பு. கண்களில் பாசம், தோற்றத்தில் கம்பீரம் என்று ராதிகா ஒரு ஆழமான நடிப்பை அற்புதமாக கொடுத்திருக்கிறார். கிராமத்து டிசம்பர் பூவைப்போல ஐஸ்வர்யா என்றால், நகரத்து ஒற்றை ரோஜாவைப்போல தமன்னா... இருவருமே நியாயமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கல்லூரி தோழியாக வரும் ஸ்ருஷ்டி டாங்கே தன் வெகுளியான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். பேராசிரியராக வரும் ராஜேஷ் இதயங்களில் பதிகிறார். அவர் கதாபாத்திரம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு கஞ்சா கருப்பு அசத்தல் காமெடி!

நீண்ட நாட்களுக்கு பிறகு யுவனின் இசை கிராமத்து கதவுகளை திறந்துவிடுகிறது. வைரமுத்துவின் வரிகள் யுவனின் இசைக்கு சிறகுகளை கட்டிவிட, காட்டின் மௌனமாய்... மழையின் துள்ளலாய்... வெப்பத்தின் புழுக்கமாய்... மலரின் மென்மையாய்... படத்துக்குள் நம்மை கடத்திச் செல்கிறது இசை. இந்தக் கூட்டணி தொடர்ந்தால் பல நல்ல பாடல்கள் நம் செவிகளை நனைக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுகுமாரின் கேமரா யானையின் கம்பீரம்! புழுதிக்காடும் கூட கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது.

ஏழை மக்களிடம் சுரண்டிப் பிழைக்கும் கார்ப்பரேட் மருத்துவர்களுக்கு ஒரு பாடமாய் வந்திருக்கிறது தர்மதுரை. மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை உணர ஊசியாய் இருக்கிறது பல காட்சிகள். திருநங்கைகளை மதிக்க கற்றுக்கொடுக்கும் இயக்குனரை தாராளமாய் பாராட்டலாம். 

மெதுவாக நகர்ந்து செல்லும் காட்சிகள் தான்... இருந்தாலும் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அந்த உணர்ச்சிக் குளத்தில் மீண்டும் நீந்த விருப்பம் வரும் என்பதில் சந்தேகமில்லை! 

தர்மதுரை - அருமருந்து!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : jana Date :8/23/2016 8:36:20 PM
விஜய்சேதுபதி ஒரு அற்புதமான நடிகர் .அண்மைக்காலங்களில் அவர் தேர்ந்து எடுத்து நடிக்கும் காதாபாத்திரங்களும் மிக சிறந்த பாத்திரங்களாக அமைகின்றன .வாழ்த்துக்கள் .எந்த சினிமாவை எடுத்தாலும் காதல் தோல்வி முடிவு தற்கொலை ,கொலை ,குடி இதை தவிர நல்லமுடிவே இல்லையா ? இயக்குனர்களுக்கு !தவறான முடிவுகளை சமுதாயத்திற்கு கற்பிற்காதீர்கள் சினிமாக்கார்களே .....