விமர்சனம்

நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
தனி ஒருவன் - மக்களை வென்றவன்!
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம் 

ல விருதுகளை வாங்கி மக்களின் இதயங்களையும் வென்ற காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டனின் அடுத்த படம் ‘குற்றமே தண்டனை’. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நீடித்து வரும் சமூகத்தில், ஒரு பெண்ணின் கொலையை மையமாக வைத்து திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் எதார்த்தமான காட்சிகளோடும் நிறைவான இசையோடும் வெளிவந்திருக்கிறது ‘குற்றமே தண்டனை’.பார்வை குறைபாடு கொண்டவராக இருக்கிறார் விதார்த். அவர் வசித்து வரும் மாடிக்குடியிருப்பில் பலதரப்பட்ட மனிதர்களும் வாழ்ந்து வருகிறார்கள். கிரெடிட் கார்டு பணத்தை வசூலிக்கும் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன் வாழ்க்கையை நடத்தும் விதார்த் தன் கண்களை பரிசோதிக்க மருத்துவமனைக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது. 

இந்த நிலையில் தான் தன் எதிர்த்த வீட்டில் வசித்து வரும் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார். போலிஸ் விசாரணையில் ஐஸ்வர்யாவுக்கு பலருடன் தொடர்புகள் இருப்பது தெரியவருகிறது. ஐஸ்வர்யா வீட்டுக்கு சிலர் வருவதை பார்த்த விதார்த், போலிசுக்கு முக்கிய சாட்சியாக அமைகிறார். போலிஸுக்கு இரண்டு பேர் மீது சந்தேகம் வர... அந்த இருவரும் தப்பித்துக்கொள்ள விதார்த்துக்கு பணம் தர முன்வருகிறார்கள். தன் பார்வை குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இருவரிடமும் பேரம் பேச தொடங்குகிறார் விதார்த். விதார்த்தை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் எதிர் தரப்பினர்.இதற்கிடையில் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பூஜா திவாரியுடன் விதார்த்துக்கு நட்பு ஏற்படுகிறது. தன் மருத்துவ செலவிற்கு பணம் சேர்க்கும் விதார்த் ஓடிக்கொண்டே இருக்கிறார் தன் இலக்கை நோக்கி. ஏமாற்றம், நெருக்கடி, பதட்டம் என விதார்த் அடுத்தடுத்த சூழல்களை சந்திக்கிறார். அவர் செய்த தவறு அவரை வாழ்க்கை முழுக்க எப்படி துரத்திக்கொண்டு வருகிறது என்பது மீதிக் கதை.

மைனாவுக்கு பிறகு சில தோல்விகள் சில வெற்றிகள் என பயணித்த விதார்த்துக்கு நெஞ்சை நிமிர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. பார்வைக் குறைபாடு உள்ள ஒருவாராய் அவரது மேனரிசம் பாராட்டுக்குறியது. குற்றத்தை உணர்ந்து கண்ணீர்விடும் காட்சி அவர் நடிப்புக்கு சாட்சி. ஐஸ்வர்யாவைச் சுற்றிதான் கதை நகர்கிறது என்றாலும், அவர் திரையில் வரும் காட்சிகள் குறைவுதான். இருந்தாலும் தன் தேர்ந்த நடிப்பால் அசால்ட் செய்கிறார். அடுத்தடுத்த படங்களில் பல நல்ல படங்களில் அவரின் பங்களிப்பு இருக்கும் என்பது நிச்சயம். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருவார் என்று சொன்னால் மிகையில்லை. 

இறைவி படத்தில் நடித்தவரா இவர் என்று பூஜா திவாரியும், ஜோக்கர் படத்தில் நடித்தவரா இவர் என்று குரு சோமசுந்தரமும் வியக்க வைக்கிறார்கள். படத்தில் முக்கியமாக ஒருவரின் நடிப்பு அசாதாரணமாய் இருக்கிறது. அவர் நாசர்! அவருக்கு நடிப்பு சொல்லியாத்தர வேண்டும். அசத்துகிறார் மனிதர். ரகுமான் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். 

படத்தில் இசை இருந்ததா என்ற கேள்வியே வரலாம்? அது தான் இசைஞானி இளையராஜா! கதையோடு கதையாய் தன் ஆர்மோனியத்தின் ஜீவனை காட்சிகளில் கலந்துவிட்டார். கண்களை மூடிக்கேட்டாலும் காட்சிகள் புரியும் அளவிற்கு அவர் இசை மெய்மறக்க வைக்கிறது. இசை என்பது இதான் என இன்றைய, நாளைய இசையமைப்பாளர்களுக்கு இளையராஜாவின் பாடம் இப்படம்! 

காக்கா முட்டையில் எளிய மனிதர்களின் வாழ்க்கையை உலக அரங்கில் சொல்லி பாராட்டுகளை அள்ளிக்கொண்டவர் இயக்குனர் மணிகண்டன். இதிலும் அவர் காட்டும் எளிய மனிதர்கள் நம் இதயங்களை வலம் வருகிறார்கள். 

திரைக்கதையாக அடுத்தடுத்த ஆச்சரியங்களோடு நம்மை பிரமிக்க வைக்கிறார் இயக்குனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வரும் சூழலில், அந்த வன்முறைக்கு காரணமே பெண்கள் தான் என பெண்கள் மீதே பழிபோடும் விதமாக படம் அமைந்திருப்பது நியாயமானதா? என்ற கேள்வியும் நம் மனதில் எழாமல் இல்லை.

குற்றமே தண்டனை - சுவாரஸ்யமான திருப்பங்களுடன்...


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : gurumanin Date :9/29/2016 7:26:57 AM
மிக நல்ல படம். கதாநாயகனுக்கு கண்ணில் உள்ள குறைபாட்டிற்கும் (டுபுலர் விஷன்) கதைக்கும் என்ன சம்பந்தம்? இக்குறையினால்தான் கதைக்கோ, நடக்கும் நிகழ்வுகளுக்கோ பிரச்சனையா? குழப்பமாக உள்ளது.