விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :13, செப்டம்பர் 2016(12:2 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2016(12:2 IST)

இருமுகன்

         சாதாரண உழைப்பு, கதாபாத்திறத்திற்காக தன்னையே ஒப்படைக்கும் அர்ப்பணிப்பு, வியக்க வைக்கும் அசத்தல் நடிப்பு என தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் விக்ரம். ஆனால் அவரின் உழைப்பை இப்படி வீணாக்கும் இயக்குனர்களை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள், பிரம்மாண்டம் சேர்க்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒரு மெகா சைஸ் வெடியைத் தயாரித்து அதை புஸ்வாணமாய் வெடிக்கச் செய்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இப்படம். 

Image result

ஸ்பீட் என்ற ஊக்க மருந்தை தயார் செய்கிறார் லவ் ( வில்லன் விக்ரம் ). இதை எடுத்துக்கொண்டால் ஐந்து நிமிடத்திற்கு அபார சக்தி நம் உடலில் பிறக்கும். அப்போது நம்மை தாக்க வருபவர்களை நாம் எளிதாக சண்டைப்போட்டு வெல்லலாம். இதை உபயோகித்து மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை அதிரடியாக தாக்குகிறார் ஒரு முதியவர். இந்த ஊக்க மருத்தைப் பயன்படுத்தி பல தாக்குதல்கள் உலகம் எங்கும் நடக்கலாம் என்ற அச்சுறுத்தலில் இருக்கிறது இந்தியா. லவ் எங்கே இருக்கிறார் என்ற தேடலில் இந்தியா இறங்க. அதற்காக அழைக்கப்படுகிறார் அந்த வில்லன் லவ்-வால் பாதிக்கப்பட்ட அகிலன் (முன்னாள் ரா அதிகாரி விக்ரம்). 

இந்த ஆபரேஷனுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரியான ஆயுஷியுடன் (நித்யா மேனன்) மலேசியா செல்கிறார் அகிலன். மலேசியாவில் பல முயற்சிகளுக்கு பிறகு வில்லன் லவ்-வை கண்டுபிடிக்கிறார்கள் இருவரும். லவ்-வால் கொல்லப்பட்டார் என்று நினைத்த தன் மனைவி மீராவை (நயந்தாரா) அங்கே பார்க்கிறார் விக்ரம். அதன் பிறகு வழக்கமான சினிமா சாகசங்களுடன் வில்லனை வென்று தன் மனைவியோடு ஜாலி டூர் போகிறார் அகிலன். 

இடைவேளையில் இருக்கும் ஒரு திருப்பம், சஸ்பென்ஸ்... சாகசங்கள்... என விறுவிறுப்பான க்ளைமாக்ஸ் காட்சி... இந்த இரண்டையும் நம்பி இரண்டரை மணி நேரத்தை வீணடித்திருக்கிறார் இயக்குனர். படத்தின் முதல் பாதி வேகமாக நகர்வது ஆறுதல். இரண்டாவது பாதியில் நம் பொறுமைக்கு சோதனை கொடுப்பது வேதனை. லாஜிக் ஓட்டைகள் பல இருப்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாமல் போனது ஏமாற்றமே. 

பல வருடங்களுக்கு முன்பு வந்த அவ்வைஷண்முகி படத்திலேயே மேக்-அப் விஷயத்தில் நூறு சதவிகிதம் சரியாக இருப்பார் கமல். மேக்-அப் என்ற பெயரில் விக்ரமின் தோற்றம் எரிச்சலைத் தவிர எதையும் ஏற்படுத்தவில்லை. சீரியஸான முறுக்கேற்றிய விக்ரம், இன்னொரு பக்கம் நளினத்தோடு நடக்கும் வில்லன் விக்ரம் என நடிப்பில் அசத்துகிறார் விக்ரம். க்ளோராஃபார்மை பயன்படுத்தி மயக்கமுற செய்வது, சிரிப்பு வாயுவை பயன்படுத்தி சிரிக்க வைப்பது என சிரிப்பாய் சிரிக்க வைக்கிறது பல காட்சிகள். வில்லன் திரவங்களின் பெயர்களை சொல்லி வேதியல் வகுப்பு எடுப்பது கடுப்பு. 

தம்பிராமைய்யா காமெடி செய்ய முயற்சிக்கிறார். ஆனால் நமக்கு தான் சிரிப்பே வரல. நயன் தாரா, நித்யாமேனன், நாசர் என நடிப்பு ஜாம்பவான்கள் இருந்தும் திருப்தியில்லாத திரைக்கதையால் அனைவருமே காணாமல் போகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் பளிச்சிடுகிறார். பாடல்கள் சொல்லும் படியாக இல்லை. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது.   

ஸ்பீட் என்ற ஊக்க மருந்தை ஹிட்லர் தன் படைவீரர்களுக்கு பயன்படுத்தினான் என்ற வரலாற்று தகவல்கள் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், முழுமையான படமாக சுமார் என்றே சொல்ல வைக்கிறது “இருமுகன்”. 

இருமுகன் - ஒருமுறை மட்டுமே!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]

Name : dhanbal Date :9/15/2016 3:06:54 PM
very bore
Name : rajapandy Date :9/14/2016 3:05:20 PM
படம் சூப்பர் விக்ரம் ஆக்ட்டிங் சூப்பர்
Name : Rajkumar Date :9/11/2016 12:11:24 PM
உங்கள திருப்தி படுத்த ரெம்ப கஷ்டம் ....படம் சூப்பர் ....