விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்

ந்த வருடத்தில் தொடர்ந்து நல்ல படங்களையே கொடுத்து வரும் விஜய் சேதுபதி நடித்த இன்னொரு படம் "ஆண்டவன் கட்டளை". காக்கா முட்டை, குற்றமே தண்டனை என பாராட்டுகளை பெற்ற இயக்குனர் மணிகண்டன் முற்றிலும் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு நல்ல கருத்தை நகைச்சுவை கலந்து சொல்ல முற்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.நேர்மையான மனிதன் சூழ்நிலைகளால் குறுக்கு வழியில் செல்ல, தவறை திருத்திக்கொள்ள நினைக்க மீண்டும் குறுக்கு வழியில் தள்ளப்படுவதே "ஆண்டவன் கட்டளை". மதுரையில் உள்ள ஒரு கிராமத்திலிருக்கும் காந்தி (விஜய் சேதுபதி) தனது கடனை அடைப்பதற்காக லண்டன் சென்று பணம் சம்பாதிக்க முடிவெடுக்கிறார். பாஸ்போர்ட் எடுக்க தப்பான நபர்களுடன் சேர்ந்து குறுக்கு வழியில் செல்ல பல சிக்கலில் மாட்டி லண்டனுக்கு செல்ல முடியாமல் போகிறது. பின்பு சென்னையிலே நாசர் நடத்தும் கூத்துபட்டறையில் வேலைக்கு சேர்ந்துவிடுகிறார். கல்யாணமே ஆகாமல் கார்மேககுழலி என்ற பெயரை தன் மனைவியின் பெயராக பாஸ்போர்ட்டில் போட்டுவிட, அதை அழிக்க முற்படுவதிலே மீதி கதை செல்கிறது. ஊடகத்தை சேர்ந்தவராக வரும் கார்மேகக்குழலி (ரித்திகா) கதையில் எண்ட்ரி கொடுப்பது சுவாரஸ்யம். 

காந்தியாக விஜய்சேதுபதி மிகவும் கச்சிதமாக நடித்துள்ளார். சிரமமே இல்லாமல் திரையில் வாழ்ந்துவிட்டு செல்கிறார். ஊமையாக நடிக்கும் இடத்தில் கைதட்டல்களை அள்ளுகிறார். அவருக்கு நண்பனாக வரும் யோகிபாபு வழக்கம் போல் ஒப்புக்காக இல்லாமல் கதையின் முக்கிய அம்சமாக இருப்பது கூடுதல் சிறப்பு. ஒரு கட்டத்தில் உருக்கமான இடத்தில் கூட சிரிப்பு வரவழைத்து விடுகிறார்.

கார்மேககுழலியாக வரும் ரித்திகாவை விட அந்த பெயரே படம் முழுவதும் வலம் வருகிறது. பெரிய கதாபாத்திரம் இல்லையென்றாலும் முந்தைய படத்தின் சாயல் தெரியாமல் நடித்துள்ளார் ரித்திகா. படத்தின் பலமே படம் முழுவதும் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள்தான். நடிப்பு சொல்லித்தருபவராக நாசர், விவாகரத்து வாங்கித் தருவதாக சொல்லும் வக்கீல் மற்றும் அவர் உதவியாளர், சிங்கம்புலி, ட்ராவல் ஏஜென்சியில் இருப்பவர் என அனைவரும் அவரவர் பங்கை நிறைவாக செய்துள்ளனர். முக்கியமாக படம் முழுவதும் இலங்கை தமிழராக வரும் நேசன் கவனத்தை ஈர்க்கிறார். இதற்கு பிறகு பல வாய்ப்புகள்  அவருக்கு கிடைக்கும் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

படத்தின் பலமே புதுமையான காட்சிகளும் வசனங்களும் தான். நீதிமன்றம், ட்ராவல் ஏஜென்சி என இரண்டு மூன்று சூழ்நிலைகளை மட்டுமே வைத்து சுவாரஸ்யமான எழுத்தின் மூலமாக நம்மை உட்காரவைத்து விடுகிறார் இயக்குனர். வழக்கமான சினிமா வழக்கத்தை உடைத்து திரைக்கதையை அமைத்துள்ளது பாராட்டத்தக்கது.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என நிறைவாகவே அமைந்திருக்கிறது அனைத்தும். வரிசையாக வெற்றியை காணும் விஜய் சேதுபதி இந்தப் படத்திலும் அந்த வெற்றியை தொடர்கிறார். 

ஆண்டவன் கட்டளை - அட்டகாசம்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :