விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................

றெக்க - விமர்சனம்

        முதல் முறையாக விஜய் சேதுபதி கமர்ஷியல் களத்தில் இறங்கி இருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் எதார்த்தமாகவும் அழுத்தமான   காட்சிகளோடும்  கொண்டதாகவே   எப்போதும் இருக்கும். ஆனால் பறந்து பறந்து வில்லன்களை அடிப்பது. பஞ்ச் வசனங்கள் பேசுவது, கனவு உலகத்தில் டூயட் பாடுவது என பக்கா மசாலா படத்தில் பளிச்சென பதிகிறார் விஜய் சேதுபதி. சொல்லபோனால் படத்தில் கதை என்று எதுவும் இல்லை. அன்பான அப்பா, பாசமான அம்மா, உயிருக்கு உயிராக தங்கைகள். காமெடி பண்ண கூடவே ஒரு நண்பன்... என்று கமர்ஷியல் பட ஹீரோவுக்கு தேவையான அத்தனை அம்சமும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு இருக்கிறது. முதல் காட்சியில் வில்லனுடன் ஹீரோ மோதல், ஹீரோவுக்கு ஒரு அறிமுகப் பாடல், பிறகு ஹீரோயின் அறிமுகம், ஹீரோயின் லட்சுமி மேனனுக்கு ஹீரோ விஜய் சேதுபதியை பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்ள... உடனே ஒரு டூயட் பாட ஃபாரின் லொகெஷன் தேடி பறக்கிறார்கள் இருவரும். லட்சுமி மேனனை விஜய் சேதுபதி கூட்டிக்கொண்டு போக, அவரைத் துரத்துகிறது வில்லன் கும்பல்... என்னடா இது பழைய சோறா இருக்கே என்று பார்த்தாலும் கூட... பச்சமிளகாய் கடித்த மாதிரி விஜய் சேதுபதி நடிப்பில் அசத்துகிறார். நடிப்பதே தெரியாமல் நடிப்பதுதான் விஜய் சேதுபதியின் ஸ்டைல். அதை இந்தப் படத்திலும் சரியாகவே செய்திருக்கிறார். 

இப்படி வழக்கமாக செல்லும் திரைக்கதையில் ஒரு அற்புதமான ஃபிளாஷ் பேக் வந்து போவது மனதுக்கு ஆறுதல். அக்கா தம்பிக்கு இடையே உள்ள பாசத்தை இரண்டாம் பாதியில் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். காதலியை பிரிந்த சோகத்தில் கிஷோர் பைத்தியமாக திரிவதும், அவரின் வெகுளியான நடிப்பும் நம்மை நெகிழவைக்கிறது. சண்டைக்காட்சிகளில் வில்லன்களை புரட்டிப்போடும் விஜய் சேதுபதி, தன்னை உணார்ந்து எதார்த்தமாகவே நடித்திருக்கிறார். இரண்டு வில்லன்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சியில் விஜய் சேதுபதி அதிரடியில் இறங்க... மூவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது சுவாரஸ்யமான சண்டைக் காட்சி. மாடர்ன் உடையில் வரும் லட்சுமி மேனன் பரவசப்படுத்தினாலும், அவரை பாவாடை தாவணியில் பார்ப்பதில் தான் ரசிகர்களுக்கு முழு நிறைவு. 

டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. படத்தில் ஹீரோயின் பெயர் பாரதி என்பதாலோ பாடல் வரிகளில் யுகபாரதி பட்டை கிளப்புகிறார். கனவுப் பாடல்களை வெறுப்பவர்கள் கூட விஜய் சேதுபதிக்காக ரசிக்கிற வாய்ப்பு இருக்கிறது. இது தான் வாழ்க்கை என்று சொல்லும் படங்களும் உண்டு... இப்படி இருந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று எண்ணத்தோன்றும் படங்களும் உண்டு. அந்த விதத்தில் றெக்க ஒரு சூப்பர் ஹீரோவாக நம்மை நினைத்துக் கொள்ள உதவும் படம். 

றெக்க - உயரப்பறக்கும்! 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : Anton Date :11/10/2016 3:27:37 PM
விஜய்க்கு ஆக்ஷன் படம் கொஞ்சம் நல்ல வரேல்ல. இவர் கொஞ்சம் ஸ்டைல் சேர்க்க வேண்டும். உடைகள் கவனிக்க வேண்டும். ஆக்ஷன் படம் என்றால் உடை ஸ்டைல் தேவை.
Name : anonymous Date :10/13/2016 10:42:45 AM
நல்ல நடிப்பு திறமையும் அழகும்(கருப்பாக இருந்தால் அழகு என்று ஏற்று கொள்ள மாட்டார்கள் தமிழ் நாட்டில்) இணைந்த ஒரு நடிகர் விஜய் சேதுபதி. சினிமா நடிகர் நடிகைகளுக்கு அழகான தோற்றம் மிக முக்கியமான ஒன்று. தனது தோற்ற பொலிவு , dressing style இவற்றில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது அவசியம் விஜய் சேதுபதி.