விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
கொடி - விமர்சனம்

முந்தைய சில படங்களில் சத்தத்தை எதிர்பர்த்த தனுஷ் படங்கள் சைலண்ட்டாக சென்றுவிட்ட நிலையில், இந்த தீபாவளிக்கு அரசியல் பட்டாசாய் சரவெடியாய் வெடித்து வெற்றிக்கொடி ஏற்றி உள்ளார் தனுஷ். ஆடுகளம் படத்தில் இணைந்திருக்க வேண்டிய திரிஷா தனுஷ் ஜோடி, அதிரடியாய் களமிறங்கி உள்ளது கொடி படத்தில். அரசியல் சூழ்ச்சிகள், சமூக நலன், பதவிக்கான போராட்டம், அதற்காக சாகடிக்கப்படும் அப்பாவிகள், இதற்கிடையில் காதல் என ரசிகர்களுக்கு அதிரடி விருந்து வைத்திருக்கிறது கொடி. 

கட்சிக்காக தந்தை செய்த தியாகத்தை மனதில் வைத்து கட்சிக்கும் மக்களுக்கும் உண்மையாய் இருக்க நினைக்கும் அரசியல்வாதியாக ஒரு தனுஷ் (கொடி). படிப்பும் புத்தகமுமாய் பேராசியராக இன்னொரு தனுஷ் (அன்பு). எல்லாவற்றையும் விட பதவி தான் முக்கியம் என்று அரசியலில் இறங்கி அவமானங்களைத் தாண்டி பல முயற்சிகளை செய்து கட்சியில் தன் வளர்ச்சிக்காக பாடுபடும் த்ரிஷா. எதிர்ரெதிர் கட்சிகளில் இருந்தாலும் அரசியல் கொள்கைகளைத் தாண்டி த்ரிஷாவுக்கும் தனுஷுக்கும் யாருக்கும் தெரியாமல் காதல் கொடி பறந்துகொண்டிருக்கிறது. 

த்ரிஷா - தனுஷ் எதிர் எதிர் கட்சிகளில் இருந்து வேட்பாளராக போட்டியிட... யார் வெல்வார்கள் என்ற போட்டி பரபரப்பாக இருந்துவர, தனுஷுக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு அமைவதாக தெரியவர, பதவிக்காக எதையும் செய்யும் த்ரிஷா, தன் காதலனை கொலை செய்கிறார். தனுஷைக் கொன்றது தான் தான் என்பது வெளியே யாருக்கும் தெரியாது என்று நம்பிக்கொண்டிருக்கிறார் த்ரிஷா. தனுஷைக் கொன்றது யார்? தனுஷ் இடத்தில் அவர் தம்பி அன்பு எப்படி வருகிறார்? த்ரிஷா யாரால் பழிவாங்கப்படுகிறார் என்பது அரசியல் அதிரடி நிறைந்த மீதிக் கதை. 

முதல் முறையாக இரட்டைவேடத்தில் தனுஷ் இரண்டு விதமான நடிப்பில் அசத்துகிறார். கொடி இறந்துவிட்ட பிறகு, அந்த இடத்தில் அன்பு அதே கெட்டப்பில் தோன்றும் காட்சி சரவெடி பட்டாசு. ஹீரோயினாக வளம் வந்த த்ரிஷா, வித்தியாசமான படங்களையும் சமீபகாலத்தில் முயற்சித்தார். ஆனாலும் அவை எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அரசியல்வாதியாக மட்டுமில்லாமல்... சூழ்ச்சிகள் நிறைந்த வில்லியாக ஒவ்வொரு காட்சியிலும் சிக்ஸர் அடிக்கிறார். பிரேமம் மலையாள படத்தில் தமிழ் ரசிகர்களை வசீகரித்த அனுபமா காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். தனுஷின் நண்பராக வரும் காளி வெங்கட் காமெடி செய்வதோடு நிற்காமல், த்ரிஷாவைக் கொல்லும் காட்சியில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அரசியல் தலைவர்களாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜயகுமாரும் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாய் பொருந்துகிறார்கள். அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம் போலவே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். 

படத்திற்கு மிகவும் பலமாக இருப்பது சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை என்றே சொல்லலாம். பொதுவாக கொடி கதாபாத்திரம் தோன்றும் காட்சிகளில் இசை அதிர்கிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி பாராட்ட வைக்கிறது. ‘ஏ சுழலி...’ பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல் என்பதில் சந்தேகமில்லை. படத்தின் முதல் பாதி சரவெடியாய் வேகமாய் வெடித்து முடிய... இரண்டாம் பாதியில் சில காட்சிகள் குருவி வெடியாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சி ஆட்டொ பாம் போல சத்தமாய் வெடிக்கிறது. 

கொடி - வெற்றிக்கொடி 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [6]

Name : கிழவி Date :11/9/2016 2:34:07 PM
படம் சூப்பரோ சூப்பர்
Name : சம்சுதீன் Date :11/7/2016 11:24:49 AM
தனுஷின் சூப்பர் ஹிட் படம் கொடி
Name : வெற்றி Date :11/3/2016 10:53:41 AM
கொடி படம் சூப்பர். வசூலில் கோடிகளில் புரட்சி இந்த கொடி
Name : vinoth k Date :11/3/2016 12:53:40 AM
தனுஷ், திரிஷா, SA .சந்திரசேகர் நடிப்பு சூப்பர். தனுஷின் சூப்பர் ஹிட் மூவி கொடி....
Name : தமிழ்த்தென்றல் Date :11/2/2016 3:06:19 PM
கொடி படம் சூப்பர். படம் மிக நன்றாக உள்ளது., குடும்பத்துடன் கண்டு களிக்கவேண்டிய படம்.
Name : N.RAJA PANDY Date :11/1/2016 5:42:30 PM
படம் சூப்பர் தனுஷ் ஆக்ட்டிங் நைஸ் திரிஷா ஆக்ட்டிங் சூப்பர்