விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, டிசம்பர் 2016(15:35 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2016(15:35 IST)
பிணமாக போனாலும் உனக்கு பொதுவீதியில் செல்ல அனுமதி இல்லை என்று சொல்லும் ஆதிக்கக் குரலுக்கு எதிராக முழக்கமிட்டு, அதற்காக தன்னையே தியாகம் செய்து தன்னை பிணமாக பொதுவீதியில் கொண்டு செல்ல வைக்கிறான் ஒரு மாவீரன். ஆம், வீரம் என்றால் என்ன என்று கூட தமிழ் சினிமாவில் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. மக்களுக்கான போர்க்களத்தில் தன்னையே மக்களின் விடுதலைக்காக அற்பணிப்பவனே மாவீரன் என்ற உண்மையை அழுத்தமாக சொல்கிறது “மாவீரன் கிட்டு”.பெரிய காரணங்கள் இல்லை என்றாலும், மக்கள் விடுதலைக்காக தன்னை ஒப்படைக்கும் ஒரு மாவீரனின் கதாபாத்திரத்திற்கு ஈழப்போராளி கிட்டுவின் பெயரை வைத்திருப்பதும், அந்த கதாபாத்திரம் ஈழப்போராளி திலீபனைப்போல தோற்றமளிப்பதும் உலகத்தமிழர்களின் உள்ளத்தில் ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறது. 80களில் பழனி அருகே நடக்கும் கதையாக சொல்லப்படுகிறது... பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் என இவர்களின் சாதி ஒழிப்புக்கான நூல்களைக் திரையில் காண்பித்தபடி தொடங்குகிறது படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி எந்த அளவிற்கு அவசியம் என்பதையும், கல்வி மட்டுமே சமூக முன்னேற்றதிற்கு அவசியமானது என்பதையும் அழகாகவே படம் விளக்குகிறது. தனக்கு கிடைத்த இடத்தில் கிராமத்துக் பிள்ளைகளை அழைத்து கிட்டு பாடம் எடுக்கும் காட்சி ஒரு போர்வீரன் களத்தில் நின்று பயிற்சி கொடுக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. சாதிய பெருமை பேசும் ஆதிக்கவாதிகளை உழைக்கும் மக்கள் எதிர்க்கும்போது, அவர்களுக்கு வரும் கோபத்தில், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊருக்கு வரும் பேருந்தை நிறுத்தி வைத்து குழந்தைகளின் படிப்பை கெடுக்க நினைத்ததும், மக்களிடம் பணத்தைத் திரட்டி ஒரு பேருந்தை வாங்கி அதில் “காளிமுத்து அய்யா இரதம்” என்று அந்த ஊர் மக்களுக்காக போராடியவரின் பெயரை அதில் போடுவது படத்தில் வரும் அதிரடி காட்சி. 

கோமதி கிட்டுவிடம் (ஸ்ரீதிவ்யா விஷ்ணுவிடம்) காதலை சொன்ன நேரம், அதை நிராகரிக்க முடியாமல் கிட்டு சொல்லும் காரணங்கள் நம்மை நெகிழ வைக்கிறது. தனக்கான முன்னேற்றம் என்பதைவிட, தான் படித்து கலெக்டர் ஆவதால் மக்களுக்கு ஏற்படுகிற நம்மைகளையே அந்த இடத்தில் கிட்டு முன் வைக்கிறான். அதைவிட படத்தின் அற்புதம், கோமதியின் தந்தை கிட்டுவை ஏற்றுக்கொண்டு உனக்காக நாங்கள் காத்திருப்போம் என்று உறுதி சொல்வது தான். சுயசாதி மறுப்பு என்பது இருந்தால் மட்டுமே சமூகம் மேன்மை அடையும் என்பதற்கு இந்தக் காட்சியே சாட்சி.   

படத்தின் பெரும் பலம் பார்த்திபனின் நடிப்பு. படம் முழுக்க கருப்புச்சட்டையுடன் அனல் பறக்கும், அதே சமயம் கூர்மையான வசனங்களுடன் அசத்துகிறார் சின்ராசுவாக வரும் பார்த்திபன். தன் மனைவியுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு சினிமாவுக்கு செல்லும் பார்த்திபன் போகும் வழியில் வேறு ஒரு செய்தி கேட்டு, சினிமாவுக்கு போகாமல் பிரச்சனையை தீர்த்து வைக்க போலிஸ் ஸ்டேஷன் போகிறார். ஒரு போராட்டக்காரரின் வாழ்வையும் அவர் சிந்தனைகளையும் சுசீந்திரன் நினைத்ததை விடவும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் பார்த்திபன். படத்தில் ஒரு பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார் பார்த்திபன். அந்த இடம் தான் பலர் கூடி அரசியல் பேசவும் பயன்படுகிறது. அந்த இடத்தில் தான் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கிறார் கிட்டு. இப்படி சாதி ஒழிப்பிற்காக முன்னின்றவர்களுக்கு அன்றைய காலகட்டிங்களில் பிரிண்டிங் பிரஸ்கள் கைகொடுத்தது என்பதை நினைவு படுத்துகிறார் இயக்குனர். 

பாம்பு கடித்து உயிர் போகிற நிலையில் ஒரு பெண்ணைத் தொட்டுத் தூக்கி அவள் உயிரைக் காப்பாற்றினால் கூட, அவளத் தொட்டுத் தூக்க உனக்கு என்ன தைரியம் என்ற அதிகார குரல் ஒலிப்பதை என்னவென்று சொல்வது. அந்தக் காட்சியை இயக்குனர் கையாண்ட விதம் அசத்தல். சாதியின் பெருமைக்காக தன் சொந்த மகளை கொலை செய்யும் கொடூர தந்தைகள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை எப்படி மறுக்க முடியும். சாதி ஒழிப்புக்காக முன்வரும் முற்போக்காளர்களையும் சாதியவாதிகள் கொலை செய்வதை இல்லை என்று சொல்ல முடியுமா. இவர்களையெல்லாம் படிக்க வைத்து கெடுத்துவிட்டார் காமராஜர் என்று சொல்லும் ஆதிக்கசாதியினர் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்தியாவின் பல கிராமங்களுக்கு பல சின்ராசுகள் தேவைப்படுகிறார்கள் என்பதை படம் சொல்கிறது. 

“அடிச்சுகிட்டே இருக்கான், திருப்பி அடிச்சா... திமிருன்னு சொல்றான்”, “அதிகாரத்தில் இருக்கிறவர்கள் தப்பானவங்கன்னு சொல்லல, இங்க அதிகாரமே தப்பாதான் இருக்கு”, “இங்க சூழ்ச்சியாலதான் பல போராளிகள் தோத்துபோய் இருக்காங்க”, இப்படி படமெங்கும் பல பொறி பறக்கும் வசங்களை கொடுத்திருக்கிறார் யுகபாரதி. “உயிரெல்லாம் ஒன்றே... உறவாவோம் இன்றே...” என்று புரட்சி பேசும் பாடலில் மட்டுமல்ல... “சிலம்புகள் பறை இசை கேட்க... பரம்பொருள் தெருவையும் பார்க்க...” என காதல் பாடல்களிலும் சிலிர்க்க வைக்கிறார் யுகபாரதி. யுகபாரதியின் வரிகளுக்கு டி.இமானின் இசை பொருத்தம்!

கமர்ஷியல் படங்களிலும் கூட ரசிகனை வளர்த்தெடுக்கும் முற்போக்கான கருத்துக்களை புகுத்துவதில் இயக்குனர் சுசீந்திரன் வல்லவர். “தமிழனா நாங்க எல்லாம் பெருமைப்படுகிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க” என்று ரசிகர் ஒருவர் சொன்னது தான் இந்தப்படம் எடுக்க காரணம் என்று இயக்குனர் சுசீந்திரன் சொல்லி இருக்கிறார். ஆம், தமிழன் சாதியாலும் மதத்தாலும் பிரிந்துகிடக்கிற உண்மையை இப்படம் உறக்கச் சொல்கிறது. தற்போதைய சூழலில் தமிழனாய் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தையும் “மாவீரன் கிட்டு” உணர்த்துகிறது. அந்த மாற்றத்தை ஒரு கருப்புச்சட்டைக்காரர் நிகழ்த்திக் காட்டுகிறார் என்பதையும் பதிவு செய்கிறார் இயக்குனர். சாதிய அடையாளங்கள் எதுவும் இல்லாமலே, இரண்டு சாதிகளை அடையாளப்படுத்துகிறார் இயக்குனர். வேட்டியை மடித்துக் கட்டி மீசையை முறுக்கி சுயசாதி பெருமை பேசும் இயக்குனர்களுக்கு மத்தியில் கருப்புச் சட்டையை முன்னிருத்தி சாதி ஒழிப்புக்கான குரலை எழுப்பும் சுசீந்திரனை தாராளமாக பாராட்டலாம்.  

இன்று சாதி ஒழிப்புக்கான குரல்களை எழுப்ப அன்றே பல மாவீரர்களின் இரத்தம் காரணமாய் இருந்திருக்கிறது என்பதை இப்படம் நமக்கு புரியவைத்தாலும். மாவீரர்களின் கனவுகள் முழுமையாய் நிறைவடையும் வரை போராட்டமும் கல்வியும் ஆவசியம் என்பதையும் உணர்த்துகிறது “மாவீரன் கிட்டு”. 

மாவீரன் கிட்டு - வீரவணக்கம்!

- பெலிக்ஸ்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [10]

Name : JAYAPRAKASH E Date :1/25/2017 12:40:34 PM
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. பிரமாதமான படம். இந்த மாதிரியான படங்கள் இன்னும் வர வேண்டும் . சாதி தீண்டாமையில் தவித்து கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த படைப்பு ஒரு ஊக்கமாகவும் தெம்பாகவும் இருக்கின்றன. சுசீந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .
Name : Ram Kumar Date :1/11/2017 5:47:05 PM
சுசீந்தரன் அவர்களுக்கு உங்களின் இந்த படைப்பு உங்களது திரை வாழ்வில் ஒரு மகத்தானதாக கருதப்படும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. உங்களது சிறப்பான பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மாவீரன் கிட்டு போல இன்னும் பல படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.
Name : அனஸ் Date :12/12/2016 6:39:58 PM
அருமையான படம். பல நேரங்களில் உள்ளத்தை உருகச் செய்கிறது, சில நேரம் கொதிப்படைய வைக்கிறது. இங்க சூழ்ச்சியால் தான் பல போராளிகள் தோத்து போயிருக்காங்க. நிதர்சனமான உண்மை. மிக எதார்த்தமாக எடுக்கப்பட்ட படம். சுசீந்திரனின் ஜாதியத்துக்கு எதிரான படைப்புகளில் ஜீவாவுக்கு அடுத்து மாவீரன் கிட்டு இன்னொரு மைல்கல்.
Name : udayakumar [ tamil nadu ] [coimbatore ] Date :12/12/2016 12:47:16 AM
கிட்டு , மாவீரன் கிட்டு, தலைப்பு செய்தி , கடல் அலை ஓசையில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கும் மரண சாசனத்தால் எழுதப்பட்ட ஈழம் ஈழம் என்று ஒலித்துக்கொண்டு இருக்கும் மாவீரன் கிட்டுவின் ஈழ அலை ஓசை , ஈழம் அடையும் வரை ஈழ ஓசை ஒலித்துக்கொண்டே இருக்கும் கடல் அலை ஓசையில் , காப்பாற்றக் கூடியவன் கண் மூடிக் கொண்டதால் , உண்ணா நோம்பின் உயிர் நீத்த , உன்னதப் போராளியின் உத்தமப்பெயர் [ திலீபன் ] உயிர் நீத்த போராளிகளின் குருதியால் எழுதப்பட்ட ஈழத்தின் சாசனக்குரல் ,பாரெங்கும் ஒலிக்கட்டுமே [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
Name : MUTHUKARUPPAN K Date :12/10/2016 2:28:41 PM
மிக அருமை , சுசீந்திரன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் .நன்றி .
Name : dhavasi Date :12/7/2016 7:14:29 PM
படம் சூப்பரா இருக்கு
Name : Dr. D. Tamilvendan Date :12/6/2016 3:13:08 PM
மாவீரன் கிட்டு - வீரவணக்கம்! வாழ்த்துக்கள் சுசீந்திரன்
Name : Prof. Dr G. Damodaran Date :12/5/2016 3:57:44 PM
வீர வணக்கம் கிட்டு... இன்றைய காலத்திற்கும் ஜாதி வெறி பிடித்து அலையும் அரசியல் அயோக்கியர்களுக்கும் இப்படம் நெத்தியதி ... சமத்துவம் பேசும் நல்லவர்களுக்கு இப்படம் வரப்பிரசாதம் ... இயக்குனர் சுசீந்திரன். கவிஞர் யுகபாரதி உள்ளிட்ட அனைவருக்கும் எனது வீர வணக்கம்.. வாழ்த்துக்கள் நன்றி மலர்கள் ... தொடர்ந்து தமிழர்களை மனிதர்களாக்க உயர்தரு இயக்குனர் சுசீந்திரன் போல பலர் தேவை
Name : sridhar Date :12/4/2016 7:10:33 PM
வீர வணக்கம்
Name : annadurai Date :12/4/2016 5:05:00 PM
சூப்பர் படம் .வாழ்த்துக்கள் சுசீ unit