விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................


 'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்

வாழ்க்கையின் லட்சியம்-அதற்காக எடுத்த முயற்சி அனைத்தும் கைகூடும் வேளையில், அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறார் ஆமீர்கான். அரங்கத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியாது. என்ன நடக்குமோ.. நடந்து கொண்டிருக்குமோ என்ற பதட்டத்தில் அவருடைய நிமிடங்கள் கரைகின்றன. சில நிமிடங்கள் கழித்து, அரங்கில் ஒலிக்கும் தேசிய கீதம் மூலம், தன் வாழ்வின் லட்சியம் நிறைவேறிவிட்டதை உணர்ந்து அவர் பரவசப்படும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில், ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களிலும் குடியேறிவிடுகிறார்கள் ஆமீரும், "தங்கல்' படத்தின் இயக்குநர் நித்தேஷ் திவாரியும். (இந்திப் படம், தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது)

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உணர்வுச் சித்திரம், தங்கல். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மகாவீர்சிங்(ஆமீர்கான்), தேசிய அளவிலான மல்யுத்த வீரர். அவர் கனவு, நாட்டுக்காகத் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும். வீட்டுச் சூழல் ஒத்துழைக்காததால், அலுவலக வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. தனக்கு மகன் பிறந்தால் அவனை மல்யுத்த வீரனாக்கி, தன் கனவை நிறைவேற்றலாம் என நினைக்கிறார். பிறந்த நான்குமே பெண் குழந்தைகள்.அவர்களில் கீதா, பபிதா எனும் இரண்டு மகள்களை, மகன்களைப்போல மல்யுத்தக் களத்தில் இறக்கி, காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் வாங்கித் தருவதுதான் தங்கல் கதை.

"பொம்பளை புள்ளைங்க குஸ்தி போட்டு நான் பார்த்தது இல்லை' என முதல்  அதிருப்திக் குரல் மனைவியிடமிருந்துதான் வெளிப்படுகிறது. வீட்டு நிலையை சமாளித்து, இரண்டு மகள்களுக்கும் கடுமையான பயிற்சியைக் கொடுக்கும் அப்பாவின் நடவடிக்கைகள் மகள்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது.

மல்யுத்தப் பயிற்சிக்காக அரை டவுசர் அணியும் பெண் பிள்ளைகள் வெட்கப் படுகிறார்கள். தலைமுடியையும் வெட்ட வேண்டும் என்றால் எப்படி? வாழ்வையே பறிகொடுப்பதுபோல கதறுகிறார்கள். நாக்குக்கு ருசி தெரியாத பத்திய உணவுதான் நாள்தோறும் என்ற கண்டிப்பினால் சோர்ந்து போகிறார்கள். ஆனாலும் பயிற்சிகளைத் தவிர்க்க முடியவில்லை. அப்பாவின் கண்டிப்பு அப்படி.

வீட்டில் இந்த நிலைமை என்றால்  ஊர் நிலவரமோ கேலி செய்கிறது. அவமானப் படுத்துகிறது. "ஆம்பளப் பசங்க மோதுற இடத்துல பொம்பள புள்ளைங்க குஸ்தி போட முடியுமா' எனக் கேட்கிறது. போட முடியும் என்பதுடன், பசங்களை பொண்ணுங்க ஜெயிக்கவும் முடியும் என நிரூபிக்கிற தந்தையாக ஆமீர்கான் நிமிர்ந்து நிற்கிறார்.  ஹரியானா போன்ற இந்தி பேசும் வடமாநில கிராமங்களில் இன்றைக்கும்        பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தால் உடனடியாகத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. படிப்பு வாசனை குறைவு. இதைப் படத்தில் இடம்பெறும் காட்சிகள் மூலமே விளக்கிச் செல்கிறார் இயக்குநர்.

அப்பாவின் கனவு மகள்கள் மீது திணிக்கப்படுவதில் தொடங்கி, வயல்வெளியில் உருவாக்கப்படும் களத்தில் பயிற்சி, ஊரில் நடக்கும் போட்டிகளின் தன்மை, தேசிய அளவிலான பயிற்சிக்கு ஏற்பாடு, அதில் ஏற்படும் மாற்றங்கள், புதிய வாய்ப்புகளால் அப்பாவின் பயிற்சியைக் குறைத்து மதிப்பிடும் மகள், அதைப் பொறுக்க முடியாமல் வரிந்து கட்டி மகளோடு மோதும் அப்பா, இறுதியில் தனது பயிற்சியே தனது மகளுக்குத் தங்கப் பதக்கம் வாங்கித் தருகிறது என்ற பெருமிதம். இப்படி உணர்வுகளின் தொகுப்பாக தங்கல் படத்தின் திரைக்கதை நகர, அதற்கு உயிரோட்டம் கொடுக்கிறது ஆமீர்கானின் நடிப்பாற்றல். உடன் நடித்த சிறுமிகள் உள்ளிட்ட பல பாத்திரங்களும் சிறப்பு சேர்க்கின்றன.

உண்மைக் கதையை திரைப்பட மாக்கும்போது ஏற்படக்கூடிய சுவாரஸ்யக் குறைவு ஆங்காங்கே தலைநீட்டுகிறது. அதை சரி செய்யும் கலையை நாயகனும் இயக்குநரும் கையாண்டுள்ளனர்.மல்யுத்தக் களத்தில் மெல்ல மெல்ல பெறுகின்ற பயிற்சிகளும் இறுதியில் காமன்வெல்த் போட்டிக் களத்தில் தங்கப் பதக்கத்திற்காக மோதுகின்ற காட்சியும் சினிமா என்பதை மறந்து, நிஜமான போட்டியைப் பார்ப்பது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியதில் தங்கல் படத்தின் வெற்றி உயர்ந்து நிற்கிறது.

பெண் பிள்ளைகளின் திறமையை இன்னமும் புரிந்துகொள்ளாத வடமாநிலங் களுக்கு தங்கல் ஒரு பாடம். நூறாண்டுகளுக்கு முன்பே பெண் கல்வி-பெண்களுக்கு வாக்குரிமை எனத் தொடங்கி சொத்துரிமை, அரசுரிமை வரை பெண்களைப் படிப்படியாக முன்னேற்றியுள்ள திராவிட மண்ணுக்கு தங்கல், வெற்றிப் பெருமிதம்.

-லெனின்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : Jayaprakash Date :2/7/2017 12:30:24 PM
அற்புதமான படைப்பு . நான் அதிகம் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் இல்லை.இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து பார்க்கும் சராசரியான இளைஞ்சன். ஆனால் இந்த படத்தை முதல் இரண்டாவது நாட்கள் மூன்று காட்சிகள் பார்த்தேன் அருமை !மிக அருமை! அந்த குழந்தைகளும் சல்மான்கானுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !!!
Name : M.S.Saravanan Date :1/6/2017 4:38:30 PM
அருமையான திரைப்படம். உண்மை சம்பவத்தை திரைப்பட வடிவில் கொடுத்த விதம் மிக அருமை. பெண்களாலும் ஆண்களைப்போல மல்யுத்தம் செய்து சாதிக்க முடியும் என்று சொல்லி இருந்தாலும், பெண்களால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை கொடுக்கிறது. அதில் பெற்றோரின் பங்கும் முக்கியமானது என்பதையும் வலியுறுத்துகிறது. இது போன்ற திரைப்படங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதில் ஐயமில்லை.