ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
 ................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
 ................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
 ................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா

'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
 ................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :17, ஜனவரி 2017(16:45 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜனவரி 2017(16:45 IST)

மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா

ல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பினருக்கு எதிராகவும்  தமிழகம் முழுவதும் உணர்ச்சிபூர்வமான போராட்டங்கள்  நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய  போராட்டங்களில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், திரைப் பிரபலங்கள்  என அனைவரும் பங்கேற்று வருகின்றனர், இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் அலங்காநல்லூரில் 21 மணி நேரமாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதோடு, அவர்கள் மீது தடியடியும் நடத்தினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து  தமிழகம் முழுவதும் பல்வேறு  இடங்களிலும் நேற்றுமுதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.  இந்த போராட்டங்களில்  தமிழ் சினிமாவைச் சேர்ந்த டி.ராஜேந்தர், ஆர்யா, இயக்குனர்கள் அமீர், வ.கௌதமன், மயில்சாமி, ஜி.வி.பிரகாஷ் குமார்  என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது நடிகர் சூர்யாவும் இவர்களுக்கு ஆதரவாக  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ... ‘‘போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்... பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ‘ஜல்லிக்கட்டு’ மாறி இருக்கிறது. ‘ஜல்லிக்கட்டு நடத்த தடை’ வாங்கி, பொதுப்பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்!

‘தன்னெழுச்சியான’ போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, ‘மாடுகளுக்கு எதிரானது’ என்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற ‘பீட்டா’ அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. ‘நாட்டு மாடு இனம்’ அழிவதற்கு துணைபோகிறவர்கள், ‘ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன’ என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக்கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

மக்களின் போராட்டம் வெற்றிபெற்று ‘ஜல்லிக்கட்டு’ விரைவில் நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகிவிடக்கூடாது. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்" என அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : SINGATAMIZHAN Date :1/18/2017 1:03:14 AM
நன்றி !திரு ,சிங்கம் சூர்யா அவர்களுக்கு ,உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் .நல்லவர்கள் எல்லாம் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டாள் ,பின் எப்படி நல்லாட்சி தரமுடியும் ,நல்ல சமுதாயம் உருவாக ,நல்ல குடும்பத்திலிருந்து சமுதாய பணி செய்ய வரவேண்டும் ....