நிகழ்ச்சிகள்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
......................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
......................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து 

மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்தும், அதற்காக கொண்டுவரப்பட்ட அவசர சட்டம் குறித்தும் தனது கருத்தினை பதிவு செய்ய கவிப்பேரரசு வைரமுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் " மாணவர்கள் நடத்திய இந்த போராட்டம் வெற்றியா ? தோல்வியா ? என்பதை நினைத்து பார்ப்பதை விட இப்படி ஒரு நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டுவிட்டதே என்ற வலிதான்  எனக்கு உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை, இது  ஈராயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழர்களின் பண்பாடு. நம் தமிழ் பெண்கள் பாய்ந்து வரும் காளையின் கொம்புக்கு  அஞ்சி ஒதுங்குபவனை இந்த பிறவி மட்டும் அல்லாமல்  அடுத்த பிறவியிலும் மணம் புரிய மாட்டாள். பழங்காலத்தில் தமிழ் பெண்களின் தாலி புலி நகத்தால் செய்யப்பட்டது... புலியை கொன்று எவன் நகம் கொண்டு வருகிறானோ அந்த நகத்தினை தாலியாக முடிந்து கொண்டாள் தமிழச்சி என்பது பழைய மரபு . இது எதற்காக என்றால் புலியை வென்றவன் தான் பகையிடம் இருந்து தன்னை காப்பாற்றுவான் என தமிழச்சி நம்பினால். அந்த உடல் உரம் தமிழனுக்கும்  இருந்தது, அவ்வாறு இருக்க வேண்டும் என  சமூகமும்  நம்பியது. ஏன் என்றால் உடல் வலிமையில் சமூகம் வாழ்ந்த காலம் அது...


கால போக்கில் புலி மாறி காளையை அடக்கினால் தான் பெண் கொடுக்கப்படும் என்ற சூழ்நிலை வந்தது. ஆனால் இப்போது பெண்கள் ஒரு ஐம்பது ஆயிரம் சம்பாதிக்கிறாரா? சொந்தமாக  கார் வச்சுருக்காரா? அமெரிக்காவில் எந்த ஸ்டேட்ல இருக்காரு?.. தன்னை  பொருளாதார ரீதியில் காப்பாற்றுவாரா ? என புற பாதுகாப்பு வந்தது .. ஏன் பெண்ணுக்கே பாதுகாப்பு வந்துவிட்டது ! இப்படி சூழ்நிலை ஒருபுறம்  போக, இப்போது என் காலத்திலேயே மாடுகள் அழிந்து விட்டது. நாங்கள் இப்போது "பைப்  பால் வாங்கி கைப்  பால் குடித்து கொண்டிருக்கிறோம்" நான் பார்த்து நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் இவ்வளவு மாற்றம் என்றால்... எதிர் காலத்தில் தமிழர்களின் அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கு நாம் போராட வேண்டாமா ? எனவே இந்த போராட்டத்திற்கு தமிழர்கள் தள்ளப்பட்டது நிச்சயம் எனக்கு வலியே. மேலும்  இந்த வெற்றியில் மாணவ செல்வங்களை தவிர வேறுயாரும் உரிமை கொண்டாடுவதற்கு, அவ்வளவு உரிமை இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. தமிழக அரசு போராடி அவசர சட்டம் கொண்டு வந்ததை நான் பாராட்டுகிறேன் .அதை கொண்டுவர செய்த இந்த மாணவ  சமூகத்தை என் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன் " என்று கூறினார் 




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :