விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :28, பிப்ரவரி 2017(18:6 IST)
மாற்றம் செய்த நாள் :28, பிப்ரவரி 2017(18:6 IST)எமன் 

ழமான பார்வை, அமைதியான பேச்சு, அருகே இருக்கும் டேபிளோ, இரும்பு வாளியோ எடுத்து உறுதியான அடி...இது தான் விஜய் ஆண்டனியோட ஸ்டைல். இந்த ஸ்டைல் நல்லாவே வொர்க் அவுட் ஆச்சு. இதே ஸ்டைல்-ல ஆனா இதுவரை அவர் பண்ணாத கதைக்களத்துல ஒரு படம் தான் எமன். விஜய் ஆன்டனி க்கு மிகப் பொருத்தமா இருக்குற இந்த ஸ்டைல உருவாக்குனதுல முக்கிய பங்கு கண்டிப்பா அவரோட முதல் படமான 'நான்' இயக்குன ஜீவா ஷங்கருக்கு இருக்கும். அவரோட மீண்டும் சேர்ந்துருக்கனால, இயல்பாவே ஒரு எதிர்பார்ப்பு இருக்கு நமக்கு. 

வழக்கமான விஜய் ஆண்டனி இதுல இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா டான்ஸ், ரொமான்ஸ், பில்ட்-அப் பாட்டு என எல்லாமே ட்ரை பண்ணிருக்காரு. எப்படியும் அடுத்த படங்கள்ல நல்லா பண்ணிருவாரு. ஹீரோயின் கிட்ட ஜோக் அடிப்பதில் இருந்து, தன் வீட்டில் வெடிகுண்டு போட்ட விஷயம் வரைக்கும் எல்லா விஷயத்தையும் ஒரே தொனில சொல்றது கொஞ்சம் நெருடலா இருக்கு. அண்டர் ப்ளே கொஞ்சம் ஓவர் ப்ளே ஆகுது. தியாகராஜன் முக்கிய வில்லனா நடிச்சிருக்காரு. அமைதியான அழுத்தமான வில்லன். மினிஸ்டரா வர்றவரும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு.  அரசியல் விளையாட்டுத் தான் இந்த படம். யாரோ ஒருத்தர் துவங்குற ஒரு பொலிடிக்கல் கேம்ல தற்செயலா விஜய் ஆண்டனி மாட்டிக்க, அதுக்குள்ள போய், எப்படி விளையாட்டை தன் பக்கம் கொண்டு வந்து ஜெயிக்கிறார் என்பது தான் கதை. சுவாரஸ்யமான ஆன கதைக்களம் தான். சுவாரஸ்யமா தொடங்கி விறு விறுன்னு போற படம், கொஞ்ச நேரத்துல அரசியல், துரோகம், சூழ்ச்சி இப்பிடி திரும்ப திரும்ப வர, கொஞ்சம் க்ரிப் மிஸ் ஆகுது. அரசியல் சதுரங்கம் தான் கதை என்று வந்து, அதை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போக முயற்சி செய்திருந்தாலும், ஒரு கேம்-ல எல்லா ரௌண்டுலயும் ஒருத்தரே ஜெயிச்சு கிட்டே இருக்கறதுனால அடுத்தடுத்த ரௌண்டுகள்ல த்ரில் இல்லாம போகுது. மைண்ட் கேம் என்றாலும், கொல்ல ஆள் அனுப்பினாலும், அவுங்கள ஆரம்பத்துல இருந்தே ஈஸியா முறியடிக்கிறார் விஜய் ஆண்டனி . அதுனால இரண்டாம் பாதியில அவருக்கு என்ன பிரச்னைனாலும் அவரு தான் ஜெயிப்பார் என்ற அசட்டை பாக்குறவங்களுக்கு வந்துருது. இந்த மாதிரி ஒரு கமர்ஷியல் படத்துல அங்கங்க கிரிப் வந்து அப்டியே க்ளைமாக்ஸ் நோக்கி எடுத்திட்டு போற முக்கியமான திருப்பங்கல் வந்தா நல்லா இருக்கும்.நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிய சுத்தமா டம்மி பண்ணிட்டாரு. 'என் மேல கை வச்சா காலி' பாட்டு மட்டும் தான் நம்ம மனசு-ல நிக்குது. அதுவும் ஏன்னா, படம் முழுவதும் அதே இசை வித விதமா வருது. பின்னணி இசை ரொம்ப முக்கியம் அமைச்சரே... கேமரா இருட்டயும், இறுக்கத்தையும் பாக்குறவங்கள அழகா இருக்கு.

தமிழ்-ல பல அரசியல் பேசும் படங்கள் வந்திருக்கு. சில படங்கள் வெற்றி பெற்றிருக்கு. வெற்றி பெற்ற படங்களில் முக்கிய பங்கு, வசனத்துக்கும் இருக்கும். சமகால அரசியல் பேசும் வசனங்கள் நிறைய பயன்படுத்தி இருக்காங்க, அது நல்லாவும் இருக்கு. இன்னும் கூர்மையான விஷயங்கள், உண்மைக்கு நெருக்கமான காட்சிகள் இருந்தால் ரசிகர்களின் வரவேற்பு நல்லா இருந்திருக்கும். உதரணமா, படத்தின் இரண்டாம் பாதியில் தியேட்டர் ஒரு மாதிரி அமைதியா இருந்தது. கிளைமாக்ஸ் கிட்ட வந்து நடக்கிற ஒரு ட்விஸ்ட்-ல விஜய் ஆண்டனி கிட்ட வேலை பாக்குறவரு, தியாகராஜன் கிட்ட சொல்ற ஒரு வசனத்துக்கு தியேட்டரே விசில் அடிச்சுது. அந்த மாதிரி கூர்மையா இன்னும் சில வசனங்கள் இருந்திருக்கலாம். 

கமர்ஷியல் என்றாலும், இஷ்டத்துக்கு இல்லாமல் தரத்துடன், சுமாரான ஒரு படம். தன் படத்துக்கு வருபவர்கள் வருத்தப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை தக்க வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால், இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கி இருந்தால், வந்தவர்கள் ரொம்ப சந்தோஷமா போயிருப்பார்கள்.  

எமன் - உயிருக்கு ஆபத்தில்ல... நம்பி போகலாம்

வசந்த் பாலகிருஷ்ணன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :