விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :10, மார்ச் 2017(16:13 IST)
மாற்றம் செய்த நாள் :10, மார்ச் 2017(16:13 IST)

மொட்ட சிவா கெட்ட சிவா 

டைட்டிலில் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' லாரன்ஸ்  என்று வருகிறது. முதல் காட்சியில் ஜார்கண்ட் காட்டுக்குள் மத்திய அமைச்சரைக்  கடத்தி வைத்திருக்கும் தீவிரவாதிகளிடம் ,"ஆம்பளையா இருந்தா துப்பாக்கியை கீழ போட்டுட்டு  கைல சண்டை போடுங்கடா" என்று  சொல்லி சண்டை போடுகிறார்  லாரன்ஸ். இந்த விஷயங்களால் முதல் காட்சியிலேயே  படம் பார்க்க வந்தவர்களை, எதற்கும்  தயார் செய்து விடுகிறார் இயக்குனர்.   அதற்குப்பின் எந்த லாஜிக் கேள்விகளும் கேட்பது நியாயமில்லை. 

தமிழ் சினிமாவில் பல  ஹீரோக்கள்  தங்கள் திரைப்படங்கள் மூலமாக புகழ் பெற, சிலர் மட்டும் அதற்கும் அப்பால் தங்கள் செயல்பாடுகளால் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். லாரன்ஸ் அந்த வகை. இந்த புகழுடன், முனி-காஞ்சனா வெற்றி வரிசைக்குப் பின் வெளிவந்திருக்கும் படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. மக்களின் வரவேற்பைப் பெற்ற ஒரு மாஸ் ஹீரோவாக ஒரு நடிகர் உருவாகுவதற்கு அடிப்படை,  மக்கள் ரசிக்கும்படி அவர்கள் நடிக்கும் வெற்றிப் படங்களே. அப்படித்தான் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் உருவாகியிருக்கிறார்கள். சில  வெற்றிகளுக்கு பிறகு,  தான் எது செய்தாலும் படம் வெற்றிபெறும் என்று நடிகரோ, இவரை வைத்து எது செய்தாலும் படம் வெற்றி பெறும் என்று இயக்குனர்களோ நினைக்கத் தொடங்கும் புள்ளி சற்று ஆபத்தானது. அந்தப் புள்ளியில் இப்பொழுது லாரன்ஸ் இருக்கிறார் என்று தோன்றுகிறது. 

படத்தில்  ஐ.பி.எஸ் அதிகாரியான லாரன்ஸ்  ஜார்கண்டில் இருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வருகிறார். அசிஸ்டன்ட் கமிஷனராக வந்த இடத்தில் கமிஷ்ணர்  சத்யராஜிற்கு எதிராகவே தொடர்ந்து  செயல்படுகிறார். கலர் கலராக சட்டையும் அதற்கு மேட்சிங் கலரில் கண்ணாடியும் அணிந்து கொண்டு, கோவை சரளா, சதீஸ், சாம்ஸ் ஆகியோர் கொண்ட டீமுடன் ஊர் சுற்றுகிறார். வில்லனுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இடையில் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு மட்டும் நல்லவராக நடந்து கொள்கிறார். ஏன் இப்படி செய்கிறார், எப்பொழுது திருத்துவார், எப்படி வில்லனை வீழ்த்துவார் என்பதே திரைப்படம். வணிக ரீதியான மசாலா  படம் என்றான பின், கதையைப் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற மசாலா  படங்களுக்கும் தோல்வியடைந்த மசாலா படங்களுக்கும் மெல்லிய கோடு தான் வித்தியாசம் இருக்கும். டெம்ப்லேட் ஒன்று தான். அதில் பொருத்தப்படும் காட்சிகள் சுவாரசியமாக இருப்பது தான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அந்த சுவாரசியமும் குறைந்து இருப்பது 'மொட்ட சிவா கெட்ட சிவா ' வின் பெரிய குறை. படத்தில் சென்னை தி நகர் என காட்டப்படும் செட், கமிஷனர் ஆபீஸ் செட் என எதுவுமே சாதாரண ரசிகன் கூட  சற்றும் நம்பும்படி இல்லை.  அதனாலேயே நமக்கு படத்தில் ஈடுபாடு ஏற்படவில்லை. லாரன்ஸ் மிகுந்த உற்சாகத்துடனும் துள்ளலுடனும் படம் முழுவதும் இருக்கிறார், நடனமாடுகிறார். சத்தியராஜ் போலீஸ் உடையில், ஒரு காட்சியிலாவது வால்டர்  வெற்றிவேல் போல் சீறுவார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு  ஏமாற்றமே. கோவை சரளா, சதீஸ், மனோ பாலா, சாம்ஸ், தம்பி ராமையா, VTV கணேஷ், இன்னும் நிறைய  நகைச்சுவை   நடிகர்கள் இருந்தாலும், நகைச்சுவை குறைவாகவே இருக்கிறது. கதாநாயகிக்கும் பெரிய வேலை இல்லை. KING-LEADER-MAGICIAN என வில்லன் வசனம் பேசும் பொழுது தெலுங்கு ஞாபகம் வருகிறது. இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது. ஹீரோவும் வில்லனும் தொலைபேசியில் மாறி மாறி கத்தி பஞ்ச் பேசும்  படங்களில் இருந்து தமிழ் ரசிகர்கள் ரொம்ப தூரம் வந்துவிட்டனர். இயக்குனர் சாய் ரமணியும் வந்தால் நல்லது.  பொழுது போகாதவர்கள் பொழுதைப் போக்குவதற்காக பார்க்கலாம். 

மொட்ட சிவா கெட்ட சிவா ...கோட்டை விட்ட சிவா ... 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : Muthu Date :3/13/2017 5:41:28 PM
சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினி தான். ரஜினி என்றாலே சூப்பர் ஸ்டார் தான்.
Name : G. Madeswaran Date :3/12/2017 10:37:32 PM
மொட்டை சிவா, கெட்ட சிவா...வசூல் கோட்டையை பிடித்த சூப்பர் சிவா! House full !!!! ராகவா லாரன்ஸ் தெறி, தெறி...நெருப்பு பொறி.