விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
மாநகரம் - விமர்சனம் 

ரு சிறந்த திரைக்கதையின் அடையாளங்களில் ஒன்று, படத்தின் முதல் காட்சியில் இருந்தே கதை துவங்குவது, அல்லது படத்தின் முதல் காட்சியில் தொடங்கி ஒவ்வொரு காட்சியும் கதையை நோக்கியே நகர்வது. அந்த வகையில் மாநகரம், முதல் காட்சியில் இருந்தே நம்மை சுவாரசியப்படுத்துகிறது. சென்னைக்கு வேலை தேடி வரும் ஸ்ரீ, வேலை கிடைத்து சென்னைக்கு வரும் சார்லி, பெரிய தாதாவாக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வரும் முனீஸ்காந்த், சென்னையில் இருக்கும் காதலர்கள் சந்தீப், ரெஜினா இவர்களுக்கு நடக்கும் சம்பவங்கள், இவர்களை இணைக்கும் பிரச்சனைகள் தான் கதை. முதல் நாள் இரவில் தொடங்கி மறுநாள் இரவு வரை செல்லும் கதையில், ஒரு கட்டத்திலும் குழப்பம் ஏற்படாமலும் சுவாரசியம் குறையாமலும் செல்வது மாநகரத்தின் சிறப்பு. தலைப்பு வடிவமைப்பும்  அதன் பின்னணியில் நடக்கும் காட்சிகளில் சென்னையின் ஒரு பக்க வாழ்வை விவரித்த விதத்தில் இருந்தே இயக்குனர்  லோகேஷ் கனகராஜின்  திரைக்கதை திறம் வெளிப்படுகிறது. எந்தப்  பாடலும் கதைக்கு வெளியில் இல்லை. ஜாவித்தின் இசை, செல்வக்குமாரின் ஒளிப்பதிவு, பிலோமினின் படத்தொகுப்பு, இவை மூன்றும் தனித்தனியே வெளியே தெரியாமல், ஒன்றாக சேர்ந்து 'மாநகரம்' திரைப்படத்தை ஒரு அனுபவமாக உயர்த்துகின்றன. வழக்கு எண்  18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு என ஸ்ரீயின் தனித்தன்மையான படவரிசையில் மாநகரமும் இணைகிறது. கதைக்கேற்ற அமைதியான நடிப்பு. முனீஸ்காந்த் 'வின்னிங்' கதாபாத்திரத்துக்கென செய்தது போல் இருக்கிறார். வரும் காட்சிகள் அனைத்திலும் அவர் அழுது நம்மை சிரிக்க வைக்கிறார் முனீஸ்காந்த். சந்தீப், ரெஜினா, சார்லி மற்றும் அனைவருமே படத்துக்கேற்ற அளவில், வகையில் நடித்திருக்கின்றனர். படம் முடிவடையும் பொழுது தான் பெரும்பாலான கதாபாத்திரங்களின் பெயரே சொல்லப்படவில்லை என உணர்கிறோம். அது வரை நாம் உணராத அளவு நுண்ணிய, தெளிவான திரைக்கதை. இடையில் வரும் காட்சிகள் நமக்கு நகரங்களின் மீது சற்றே பயமூட்டினாலும், நன்மையும் தீமையும் நம்மால் தான் என்பதை உணர்த்துகிறது படம்.  நம் அன்றாட வாழ்க்கையின் பங்காக இருக்கும் பெயர் தெரியாத மனிதர்களைத்  தந்திருக்கும் நகரங்களின் மீதான மரியாதை இந்த மாநகரம். வாழ்த்துகள் லோகேஷ்!!!   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : jaya Date :3/23/2017 12:02:29 PM
அற்புதமான படைப்பு. வாழ்த்துக்கள்
Name : vinoth K Date :3/16/2017 12:16:09 AM
100 % தரமான படம்