விமர்சனம்

பிருந்தாவனம் - விமர்சனம்
..................................................................
தொண்டன் - விமர்சனம்
..................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
..................................................................
லென்ஸ் - விமர்சனம்
..................................................................
எய்தவன் - விமர்சனம்
..................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
..................................................................
நகர்வலம் - விமர்சனம்
..................................................................
சிவலிங்கா - விமர்சனம்
..................................................................
கடம்பன் - விமர்சனம்
..................................................................
ப.பாண்டி - விமர்சனம்
..................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
..................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
..................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
..................................................................
டோரா - விமர்சனம்
..................................................................
கடுகு - விமர்சனம்
..................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்

மாநகரம் - விமர்சனம்
..................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
..................................................................
எமன் - விமர்சனம்
..................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
..................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
..................................................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
..................................................................
கொடி - விமர்சனம்
..................................................................
றெக்க - விமர்சனம்
..................................................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
..................................................................
தொடரி - விமர்சனம்
..................................................................
இருமுகன் - விமர்சனம்
..................................................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
..................................................................
தர்மதுரை - அருமருந்து!
..................................................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
..................................................................
கபாலி - விமர்சனம்
..................................................................
அப்பா - ஒரு பாடம்!
..................................................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
..................................................................
இது நம்ம ஆளு
..................................................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
..................................................................
தெறி விமர்சனம்!
..................................................................
சேதுபதி - விமர்சனம்!
..................................................................
மிருதன் - விமர்சனம்!
..................................................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
..................................................................
வில் அம்பு - விமர்சனம்!
..................................................................
விசாரணை - ஒரு பார்வை!
..................................................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
..................................................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
..................................................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
..................................................................
144- விமர்சனம்!
..................................................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
..................................................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
..................................................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
..................................................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
..................................................................
புலி - விமர்சனம்!
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
கட்டப்பாவ காணோம் - விமர்சனம் 

ட்ரெண்டியான தலைப்பு, ஒரு வரி கதையாக  ஆர்வத்தைத் தூண்டும் வாஸ்து மீன் பின்னணி, வித விதமான கதாபாத்திரங்கள் என்று தொடங்குகிறது கட்டப்பாவ காணோம். சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சித்ரா லட்சுமணன் என்று பல பல பேர் நடித்திருக்கிறார்கள். 

பிறந்ததில் இருந்து  அதிர்ஷ்டமே இல்லாத 'bad luck ' பாண்டியனாக சிபிராஜ். எந்த வேலையும் நிலைக்கவில்லை, அவரது ராசிக்கு பயந்து தந்தை நடத்தும் நகைக்கடைக்கும் அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்கு பின் தான் அவருக்கு நல்ல நேரம் வரும் என்று தந்தை ராசியான பெண் பார்க்கிறார். சிபிராஜ், பப்பில் சந்தித்து தனக்கு இணையாக 'கம்பெனி' கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை காதல் செய்து வாழ்க்கைக்கு கம்பெனியாக திருமணம் செய்து பெற்றோரைப் பிரிந்து, இருந்த வேலையையும் இழந்து, பணக்கஷ்டத்தில் வாழ்கின்றார்.  'மீஞ்சூர்' வஞ்சரமென்ற தாதாவாக  மைம் கோபி, ஜோதிடம், ராசி ஆகியவற்றில் தீவிர நம்பிக்கையுடையவராய் 'கட்டப்பா' என்ற வாஸ்து மீனை ஆசையாக வளர்க்கிறார். தனது மனைவியை விட அதன் மேல் அதிக அன்பு வைத்திருக்கிறார், தனக்கு நடக்கும் நன்மைகளுக்கு அந்த வாஸ்து மீன் தான் காரணம் என்று நினைக்கிறார். இந்நிலையில், அந்த மீன் திருட்டுப் போக, அதை எப்படியாவது மீட்க வேண்டுமென்று 'பிரைவேட் டிடெக்ட்டிவ்' சரவணனை மிரட்டுகிறார். இடையில் காளிவெங்கட், திருமுருகன், ஜெய குமார் கூட்டணி திடீரென சிபிராஜ்-ஐஸ்வர்யா வீட்டுக்குள் நுழைந்து, 'நான்கு கோடி பணம் எங்கே?' என்று அடித்துத் துவைத்து அங்கேயே தங்குகிறார்கள்.   காணாமல் போன கட்டப்பா யாருக்கு கிடைத்தார், சிபிராஜின் நல்ல நேரம் தொடங்கியதா ஆகிய கேள்விகளுக்கான காமெடி பதில்கள் தான் கட்டப்பாவை காணோம்.      

ஒரு பெரிய வெற்றியை நோக்கிய தேடலில் சிபிராஜ் தேர்ந்தெடுத்திருக்கும் கதை சுவாரசியமாக இருக்கிறது. ஸ்மார்ட்டாக இருக்கிறார் , நன்றாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நம்மூர்  மாடர்ன் பெண்ணாக வருகிறார். அவ்வப்போது சீரியசாக பேசுகிறார். மற்ற அனைவரும் அவரவருக்கான கதாபாத்திரத்தில் நகைச்சுவை செய்யகின்றனர். அதில் பல இடங்களில் நமக்கும் சிரிப்பு வருகிறது. முதல் படத்துக்காக, 'வாஸ்து மீன்' என்ற சுவாரசியமான கான்செப்ட், அதிர்ஷ்டமே இல்லாத கதைநாயகன்,  மது அருந்தும்  நாயகி, ஏழு நாட்களும் ஏழு ராசியான நிறங்களில் சட்டை அணியும் வில்லன், ராசி மோதிர ஜோதிட நகைக்கடைக்கார அப்பா, மேஜிசியன், இழந்த அம்மா வேண்டுமென மீனிடம் வேண்டும் குழந்தை, என வித விதமான கதாபாத்திரங்களை சுவாரசியமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் மணி சேயோன். அந்த சுவாரசியம் கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளில் குறைவு என்பதே குறை. காமெடி படத்திற்கான களத்தை சிறப்பாக உருவாக்கிவிட்டு, காமடிகளில் சற்றே கோட்டை விட்டிருக்கிறார். இரண்டாம் பாதி ஆக ஆக , படத்தில் அனைவரும் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுகின்றனர். ஒரு கட்டத்தில் பழைய எஸ்.ஜே.சூர்யா படம் பார்க்கும் உணர்வு. கதாபாத்திரங்களின் போக்கிலும் சற்று குழப்பம் இருப்பது போல் தோன்றுகிறது. ஒரு இடத்தில் வாஸ்து மீனை நம்புவது போல் பேசும் சிபிராஜ் இன்னொரு காட்சியில் வாஸ்து மீனை நம்பும் ஐஸ்வர்யாவை திட்டுகிறார். சீரியசானவர்கள் திடீர் திடீரென காமெடி செய்கிறார்கள். இவற்றில் ஒரு தெளிவு இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.சந்தோஷ் தயாநிதி இசையில் 'ஏ பெண்ணே' பாடல் நன்றாய் இருக்கிறது. பின்னணி இசையில் அவரும் சற்று குழம்பியிருப்பது போல் தோன்றுகிறது. ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவில் காதல் தருணங்கள் அழகு. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா இன்னும் சற்று கறாராக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவ்வப்போது வரும் சிரிப்புகளுக்காக பார்க்கலாம்.  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :