விமர்சனம்

பாகுபலி 2 - திரைவிமர்சனம்
......................................
நகர்வலம் - விமர்சனம்
......................................
சிவலிங்கா - விமர்சனம்
......................................
கடம்பன் - விமர்சனம்
......................................
ப.பாண்டி - விமர்சனம்
......................................
காற்று வெளியிடை - விமர்சனம்
......................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
......................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
......................................
டோரா - விமர்சனம்
......................................
கடுகு - விமர்சனம்
......................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
......................................
மாநகரம் - விமர்சனம்
......................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
......................................
எமன் - விமர்சனம்
......................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
......................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
......................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
......................................
கொடி - விமர்சனம்
......................................
றெக்க - விமர்சனம்
......................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
......................................
தொடரி - விமர்சனம்
......................................
இருமுகன் - விமர்சனம்
......................................
குற்றமே தண்டனை - விமர்சனம்
......................................
தர்மதுரை - அருமருந்து!
......................................
ஜோக்கர் இல்ல ஹீரோ
......................................
கபாலி - விமர்சனம்
......................................
அப்பா - ஒரு பாடம்!
......................................
இறைவி - ஆண்களே வெட்கப்படுங்கள்!
......................................
இது நம்ம ஆளு
......................................
24 - லாஜிக் இல்லா மேஜிக்
......................................
தெறி விமர்சனம்!
......................................
சேதுபதி - விமர்சனம்!
......................................
மிருதன் - விமர்சனம்!
......................................
ஜில் ஜங் ஜக் - விமர்சனம்!
......................................
வில் அம்பு - விமர்சனம்!
......................................
விசாரணை - ஒரு பார்வை!
......................................
இறுதிச் சுற்று - அதிரடி ஆட்டம்
......................................
நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்!
......................................
இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்!
......................................
144- விமர்சனம்!
......................................
ஒரு நாள் இரவில் - ஒரு பார்வை!
......................................
தூங்காவனம் - ஒரு பார்வை!
......................................
10 எண்றதுக்குள்ள - நடுவுல கொஞ்சம் நம்பர காணோம்!
......................................
ருத்ரமாதேவி - விமர்சனம்!
......................................
புலி - விமர்சனம்!
......................................
குற்றம் கடிதல் - ஒரு பார்வை
......................................
கிருமி - விமர்சனம்!
......................................
உனக்கென்ன வேணும் சொல்லு - விமர்சனம்!
......................................
மாயா - மாடர்ன் பேய்!
......................................
49 ஓ - விவசாயிகளுக்கான விடியல்!
......................................
டோரா - விமர்சனம்

மிழில் திகில் திரைப்படங்களுக்கென ஒரு அடிப்படை திரைக்கதை அமைப்பு இருக்கிறது. முதல் பாதியில் பேய், ஆவி அல்லது ஆத்மா, ஏதேனும் ஒன்றை வைத்து (எல்லாம் ஒன்று தான்), கதாபாத்திரங்களையும், ரசிகர்களையும் பயமுறுத்த வேண்டும். இரண்டாம் பாதியில் அந்த ஆதாமாவுக்கான கதையை சொல்ல வேண்டும். இறுதியில் பழிவாங்கப்பட வேண்டியவர்கள் பழிவாங்கப்பட வேண்டும். 'பீட்சா' போன்ற சில படங்கள் இந்த அமைப்பிலிருந்து விலகி எடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான திகில் படங்கள் இவ்வகையே. திரைக்கதை அமைப்பு ஒன்றுதான் என்றாலும், முன்பாதியில் ரசிகர்கள் திகிலை உணர்ந்து பயப்படும் அளவு, இரண்டாம் பாதி கதை நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம், அதில் இருக்கும் ஞாயம், அந்த ஆத்மா தன் பழிவாங்கலை நிகழ்த்த பயன்படுத்திக்கொள்ளும் உடல் அல்லது பொருள் போன்றவையின் சுவாரசியங்கள் தான் படத்தை நாம் ரசிப்பதையும் வெறுப்பதையும், படத்தின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் அதே அமைப்பில் இயக்குனர் தாஸ் ராமசாமி கொடுத்திருக்கும் படம் 'டோரா'.பவளக்கொடி  (நயன்தாரா), தன் தந்தை வைரக்கண்ணுவுடன் (தம்பி ராமையா) வாழ்கிறார். கால் டேக்சி நிறுவனம் துவங்க முதல் காராக ஒரு பழைய 'ஆஸ்டின் கேம்பிரிட்ஜ்' காரை வாங்குகிறார்கள். அந்த கார் அவர்களிடம் வந்ததிலிருந்து என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே 'டோரா'. நயன்தாரா, 'லேடி சூப்பர்ஸ்டார்' என்ற பெயரை வலுப்படுத்தும் வகையில் நடித்திருக்கிறார். சில சண்டைக்காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் கூட இருக்கின்றன. தம்பி ராமையா தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இந்த இரு சிறந்த நடிகர்களுக்கிடையில் வரும் காட்சிகளை இன்னும் சுவாரசியமாகியிருக்கலாம். அந்த காரையும் நாயையும் பயன்படுத்திய விதமும் அந்த காட்சிகளும் ரசிக்கும் படி இருக்கின்றன. அந்த கட்டம் வரும் வரை சற்று நீளமான காத்திருப்பாக இருக்கிறது. ஹரிஷ் உத்தமன் காவல்துறை ஆய்வாளராக பொருத்தமாக இருக்கிறார். அவரது உயர் அதிகாரியாக வருபவர் இடையிடையே வந்து, "என்னயா பண்ற...இன்னும் கண்டுபிடிக்கலையா ?", என்று கத்திப் போகிறார். தமிழ் சினிமாவில்  இது போன்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கதாபாத்திரம் மிகப்பழைமையான ஒன்று. பலர் இப்படி எடுப்பதை நிறுத்தி விட்டார்கள். அது போல நயன்தாரா அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் மாற்றி மாற்றி பேசும் காட்சியும் கூட 'அந்நியன்', 'வேதாளம்' என பயன்படுத்தப்பட்டு அலுத்து விட்ட ஒன்று. இயக்குனர் இவற்றை சற்று கவனித்திருக்கலாம். திகில் காட்சிகளில், விவேக்-மெர்வின் அவர்களின்   பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. அதைத் தவிர, அந்த வடஇந்திய வில்லன்கள் வரும் ஆரம்ப காட்சிகளில் பின்னணி இசை சற்று குறைக்கப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.  தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு பழிவாங்கும் காட்சிகளில் சிறப்பாய் இருக்கிறது. சில காட்சிகளில் ஒரு முறை சொல்லப்பட்ட வசனம், அதன் தொடர் காட்சிகளாக வரும் பொழுது மீண்டும் வருகிறது. படத்தொகுப்பாளர் கவனித்திருக்கலாம். 

எந்த உயிரின் ஆவி, ஆவி பயன்படுத்தும் பொருள் ஆகியவற்றில் ஏற்படுத்திய சுவாரசியம், புதுமை (ஆங்கில படங்களில் வந்திருந்தாலும்), படம் முழுவதும் இருந்திருந்தால் 'டோரா' சிறப்பான திகில் படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கும். சில வருடங்களாக, தொடர்ந்து பல திகில் படங்கள் பார்த்துப் பழகி, பேயைப் பற்றிய பயம் குறைந்து போன நம்மை மிரள வைக்க இன்னும் பெரிதாய் சிந்திக்க வேண்டும். மொத்தத்தில் 'டோரா'வை சில சுவாரஸ்யங்களுக்காக ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.   


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :