விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்

கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, ஏப்ரல் 2017(10:43 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜூன் 2017(15:7 IST)

8 தோட்டாக்கள் - விமர்சனம்

நாம் இதுவரைக்கும் பார்த்திருக்கும்  பெரும்பாலான ஆக்சன்  படங்களில் துப்பாக்கி என்பது ஒரு சாதாரண விஷயமாக இருக்கும்.  அதுவும் போலீஸ் படம் என்றால், கேட்கவே வேண்டியதில்லை. சில படங்களில், சற்று யதார்த்தத்தைப் பற்றி கவலைப் படும்  கதாநாயகன்,  தனது சொந்த கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பார். ஆனால், நிஜ வாழ்க்கையில் நம்மில் பெரும்பாலானவர்கள், துப்பாக்கியைப் பார்த்திருப்பதே அரிது தான்.'லீ' மாதிரி வெகு சில படங்களில் ஒரு துப்பாக்கி கிடைப்பது எவ்வளவு சிரமம் என்பதை காட்டியிருப்பார்கள்.  

காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக  இருக்கும் நாயகனுக்கு ஒரு ரௌடியை பின்தொடர்வதற்காக எட்டு தோட்டாக்களுடன் துப்பாக்கி தரப்படுகிறது. 8 தோட்டாக்கள் என்பதே நமக்கு புதிது தான், 6 தோட்டாக்கள் என்றே கேட்டு  பழகி விட்ட நமக்கு. போலீஸ் கதாநாயகன்  என்றவுடன் அவரும் அதிரடியான, விறைப்பான போலீசோ   அல்லது கெட்ட ரௌடி போலீசோ அல்ல. அது  வரை, செய்யாத குற்றத்திற்காக  சீர்திருத்த பள்ளியில் வளர்ந்த, பயமும் தாழ்வு மனப்பான்மையும் உள்ள ஒரு இளைஞன் போலீஸ் ஆனவுடன் மாறிவிடப்  போவதில்லை. அங்கும் அதே போல தான் இருக்கிறார். இப்படி துவக்கக் காட்சிகளிலிருந்தே உண்மைக்கு அருகே இருக்கிறது படம். நம்மையும் பல புதிய விஷயங்களுக்கு தயார் செய்து விடுகிறது. உண்மைக்கு அருகே இருக்கிறது என்பதற்காக சுவாரசியத்தில் குறைபாடும் இல்லை.

தனக்கு வழங்கப்படும் துப்பாக்கியை 8 தோட்டாக்களுடன் தொலைத்து விடுகிறார். அது பல கைகள் மாறி ஒரு குழுவிடம் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி ஒரு வங்கிக்  கொள்ளை நடக்கிறது. தவறுதலாக அதில் ஒரு குழந்தையும் கொல்லப்பட, விஷயம் பெரிதாகி, விசாரணைக்கு நாசர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்படுகிறது. துப்பாக்கி கிடைத்ததா, எட்டுத் தோட்டாக்களும் என்ன ஆயின என்பதுதான் படம். 

'சத்யா' வாக வெற்றி, கூச்சமும், அந்த சூழலுக்குத் தான் பொறுத்தமற்றவன் என்ற எண்ணமும் கொண்டு யாருடனும் ஒரு தயக்கத்தோடு பழகுபவராய் பொருத்தமாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி, 'மீரா' என்ற ஊடக இளைஞராக  நடித்திருக்கிறார். கதாநாயகி, கதாநாயகனை காதல் செய்பவர்  என்பதாலேயே  முழுவதும் நல்லவராய் அல்லாமல், படம் முழுவதும் அவருக்கு உதவியாய் இருப்பவர், ஒரு இடத்தில் அவரை உபயோகப்படுத்திக் கொள்கிறார்.  அது தெரிந்ததும் சமாளிக்கும் இடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாசர், 'மைம்' கோபி, தேனி முருகன், சார்லஸ் வினோத், 'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா என அனைவருமே சிறப்பாக நடித்திருந்தாலும்,   முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் M.S. பாஸ்கர். M.S .பாஸ்கரின் கதாப்பாத்திரம் ஒரு மனிதனின் அத்தனை பரிமாணங்களையும் காட்டுவதாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் பலவீனமாய், போட்ட திட்டத்தை நிகழ்த்தி விட வேண்டும் என்று பலமாய்,  தன் கதையைக் கூறும் இடத்தில் ஏக்கமுடையவராய்... இப்படி அனைத்துப் பரிமாணங்களிலும்  அட்டகாசமாக நடித்திருக்கிறார் M.S. பாஸ்கர்.படம் பார்க்கும்பொழுது நமக்குள் எழும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொண்ட முழுமையான திரைக்கதை. பிக் பாக்கெட் அடிக்கும் சிறுவன், வீட்டில் நடக்கும் விஷயம் தெரியாமல் வெகுளியாய் இருக்கும் குற்றக்குழுவின் தலைவன், இப்படி கதாபாத்திரங்களும், துப்பாக்கி விக்கும் வீடியோ கடையில் ஒட்டப்பட்டிருக்கும் உலக சினிமா போஸ்டர்கள், வயதான தட்டச்சுக்காரரின் எந்திரத்தை போலீஸ் உடைத்த உண்மை சம்பவத்தை சேர்த்தது  என பல விஷயங்கள் நம்மை படத்துடன் இணைக்கின்றன.

படத்தின் வேகத்தில் கேமராவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. தினேஷின் கேமரா ஓட வேண்டிய இடத்தில் ஓடுகிறது. அமைதியான இடங்களில் நிற்கிறது. படத்திற்குள் நம்மைக் கொண்டு செல்கிறது. பிக் பாக்கெட் சிறுவனைத் துரத்தும் காட்சியில், அந்தப் பதட்டம் நமக்கும் வருகிறது. கிருஷ்ணமூர்த்தியின் பின்னணி இசை படத்துக்கு தேவையான இசையைத் தந்திருக்கிறது. 'நீ இல்லை என்றால்' பாடல், கொஞ்சம் வேகத்தைக் குறைத்தாலும், ஆசுவாசத்தைத் தந்திருக்கிறது. முதல் பாதியில், காட்சிகளால் விறு விறுவென நகரும் கதை, இரண்டாம் பாதியில் சற்று வசனங்களால் நகர்வது போல் உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அந்த வசனங்களும் மிகவும் உண்மையான, ஆழமானவை. "எல்லார்கிட்டயும் நாம நல்லவங்கனு நிரூபிக்க நினைக்க மாட்டோம்ல ?" என்று வெற்றி கேட்கும் அந்த வசனம்,  M.S. பாஸ்கர் தன் கதை சொல்லும் காட்சியில் வரும் வசனம், என வசனங்கள் கவனித்து ரசிக்க வைக்கின்றன.

தவறு செய்யாத சிறார் குற்றவாளியை அரவணைத்துக் கொள்ளும் வார்டன், மேலதிகாரியால் உடைக்கப்பட்ட தட்டச்சு எந்திரத்திற்காக புதிய ஒன்றை வாங்கித்தரும் காவலர் என படம் முழுவதும் மனிதம் நிரம்பியிருக்கிறது. குற்றச் செயலுக்காக வந்தவன், தெரியாமல் வேறு ஒருவரைக் கொன்றுவிட்டு, குற்ற உணர்வால் குறுகுவது போன்று  அங்கங்கே தோன்றும் மிஷ்கின் ஸ்டைல் நன்றாகத்தான் இருக்கிறது. 8 தோட்டாக்கள் தமிழ் சினிமாவை நல்ல திசை நோக்கி நகர்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடுத்த தோட்டா. வாழ்த்துகள் ஸ்ரீ கணேஷ்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : prakash Date :4/20/2017 5:40:41 PM
ஸ்ரீ கணேஷ் மேலும் நல்ல நல்ல படங்களை தர வாழ்த்துக்கள்