விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்

8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :8, ஏப்ரல் 2017(13:44 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜூன் 2017(12:35 IST)

காற்று வெளியிடை - விமர்சனம் 

  திரைப்படங்கள் படைப்பவர்களில் வெகுசிலருக்கு, அவர்களுக்கென ஒரு திரைமொழி கைவரும். அது அவர்களுக்கே உரித்தானதாய், மற்றவர்களிடம் இருந்து சற்றே வேறுபட்டதாய் இருக்கும். காட்சிகளின் கோணம், வசனங்களின் நீளம் அல்லது அடர்த்தி, கதாபாத்திரங்களின் செயல்பாடு என அவர்களின்   மொழிக்கு,  நுண்ணிய அடையாளங்கள் இருக்கும்  அந்த மொழியில்தான் அவர்கள் தொடர்ந்து பேசுவார்கள். அந்த மொழி பிடித்தவர்களுக்கு அவர்கள் என்ன சொன்னாலும் பிடிக்கும். மற்றவர்களுக்கு, அவர்கள் சொல்லும் விஷயத்தைப் பொறுத்து, படங்கள்  பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் நிகழும். பாலச்சந்தரில் தொடங்கி, பாரதி ராஜா, மணிரத்னம், ஷங்கர், கெளதம், மிஷ்கின், கார்த்திக் சுப்புராஜ்  போன்றவர்கள் தங்களுக்கென திரைமொழி கொண்டவர்களுக்கான எடுத்துக்காட்டுகள். இவற்றில், மணிரத்னத்தின் திரைமொழி ரசிகர்களுக்குள்ளும் திரைப்படைப்பாளிகளுக்குள்ளும் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. துவக்கத்தில் அவர் இயக்கிய சில படங்கள் தவிர்த்து, மௌன ராகத்தில் தொடங்கி நாயகனின் விஸ்வரூபமெடுத்து  இன்று வரை அவர் பேசும் திரைமொழி, ஒளியைப் பயன்படுத்தும் முறை, வசனத்தின் அளவு, இசையின் பங்கு, பாடல்களில் அழகு என அவர் மட்டுமே பேசும் மொழி. பேசுபொருளை பொறுத்து படத்தின் வெற்றி, தோல்விகள் இருந்தாலும், அந்த மொழியை ரசிக்கும் ஒரு கூட்டம் இன்றும் இருக்கிறது.விமானப்படை விமானியாக, கொஞ்சம் சுயநலமும், தன்னைப் பற்றிய அதீத கர்வமும், பிறரைப் பற்றிய குறைந்த அக்கறையும் கொண்ட கதாபாத்திரத்தில் அழகானவராக கார்த்தி. அழகான இளம் மருத்துவராக அதிதி ராவ் ஹைதிரி, நண்பர்களாக ருக்மணி, RJ பாலாஜி, இவர்களுடன் டெல்லி கணேஷ், ஆகிய தெரிந்த முகங்களுடன், தெரியாதவர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்தி, காதலையும் கோபத்தையும் மாற்றி மாற்றி அழகாய் வெளிப்படுத்துகிறார். கார்த்தியின் காதல் தரும் பரவசத்தையும், கோபம் தரும் அதிர்ச்சியையும், அந்த உறவினால் , தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடக்  கூடாது என்ற பதட்டத்தையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். ஆஃபீசர் வீசி, லீலா இருவரும் எளிதில் மறக்க மாட்டார்கள். இந்த இருவருக்குள்ளான காதல், ஊடல், அந்த சமயத்தில் வரும் போர், அதில் கைது செய்யப்படும் கார்த்தி, காதல் என்ன ஆனது என்பதே காற்று வெளியிடை. காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடக்கும் காதல் கதையை மணிரத்னம் இயக்கம் பொழுது காட்சிகள் எத்தனை அழகாய் இருக்குமென எதிர்பார்க்கிறோமோ அதை விட அழகாய் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். ரஹ்மானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வசீகரிக்கின்றன. துவக்கத்தில் காதல் காட்சிகள், பாரதி பாடல்கள் கலந்த கார்த்தி பேசும் வசனங்கள், காதலிக்கு பரவசம் ஏற்படுத்தும் கணங்கள், குறும்புகள் என செல்லும் படம், மிக மெதுவாய் நகர்கிறது, அவர்களிருவரின் காதலுக்குள் தான் சுழல்கிறது. போகப்போக, கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறையின்  அந்நியம், பாகிஸ்தான் சிறையில்  இருந்து தப்பிப்பது இத்தனை எளிதா என்ற கேள்வி, பேசிப் பேசித்  தீராத காதல் போன்ற விஷயங்கள் படத்தினுடனான ஈடுபாட்டை மெல்ல விலக்குகின்றன.

'அலைபாயுதே'வில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வாழ்வது, 'ஓ காதல் கண்மணி'யில் திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்வது என சற்று முன் சென்று யோசித்து மணிரத்னம் கொடுத்த கலாச்சார அதிர்ச்சிகள் பின்னர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. 'காற்று வெளியிடை'யிலும் அப்படி ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார்.  

தேவையான பொறுமையுடன் ரசிப்பவர்களுக்கு ஒரு அழகான காதலும், பல பேரழகான காட்சிகளும் காணக்கொடுக்கும் இந்த காற்று வெளியிடை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : jana Date :4/14/2017 9:30:18 PM
விமர்சனம் நன்றாக உள்ளது.காதல் கதைகளை சினிமாவில் பார்த்து ,கேட்டு சலித்து போகின்றது.......மணிரத்தினம் சார் அதை தான் கொடுத்து இருக்கின்றார்.அழகிய காட்சிகளுடன் ,
Name : Ramakrishnan Date :4/11/2017 2:10:27 PM
நேர்மையான விமர்சனம்.