விமர்சனம்

அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்

காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
 ................................................................
கொடி - விமர்சனம்
 ................................................................
றெக்க - விமர்சனம்
 ................................................................
ஆண்டவன் கட்டளை - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :13, ஏப்ரல் 2017(20:38 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜூன் 2017(12:35 IST)

ப.பாண்டி - விமர்சனம்

     ஒரு வெற்றிகரமான கதாநாயக நடிகர், திரையில்  நடிப்பைத் தாண்டி வேறு விஷயங்கள் செய்யும் பொழுது, அதிகமாக கவனிக்கப்படுவார். நன்றாக இருந்தால், அதிகமாக கொண்டாடப்படுவார். நன்றாக இல்லையென்றால், "இவருக்கு எதுக்கு இந்த வேலை?", என அதிகம் விமர்சிக்கப்படுவார். இப்படி, அதிகம் விமர்சிக்கப்படுவதற்கு காரணம், பொதுவாக இயக்குனர் ஆகும் கதாநாயகர்கள்,பெரும்பாலும்  தங்களை முன்னிலைப்படுத்தும் படங்களாகவே இயக்கி வந்துள்ளனர் என்பதே. இவையனைத்தையும் மனதில் வைத்து, இந்த ஆபத்துகள் இல்லாத, ஆனால், காண்பவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய , ஒரு கதையை உருவாக்கி இயக்கியுள்ளார் இயக்குனர் தனுஷ். 'பவர் பாண்டி' ஒரு வெற்றிகரமான, பிரபலமான சண்டைக்காட்சி இயக்குனராக இருந்து வயதின் காரணமாக தொழிலில் இருந்து விலகி, மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர்களுடன் வாழும் வாழ்க்கை, தனதாய் இல்லாமல் இருப்பதை உணர்ந்து, தன் வாழ்க்கையை தேடி மேற்கொள்ளும் பயணத்தில் எதைக் கண்டடைந்தார் என்பதே ப.பாண்டி. அவர் தன் வாழ்க்கையைத் தேடித் போவதற்கான காரணம், கொடுமைக்கார மகனோ, மரியாதை தராத மருமகளோ  இல்லை. இயல்பாக அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடும் தலைமுறை இடைவெளியுமே.   

இயக்குனர் தனுஷ், ஒரு திரைப்படத்திற்கு  கதாபாத்திரங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, மகன்-மருமகள் குறைந்த எண்ணிக்கையான கதாப்பாத்திரங்கள் என்றாலும் அவர்களுக்குள்ளான உறவு, அவர்களின் குணாதிசயங்கள் ஆகியவற்றை நன்றாக உருவாக்கியுள்ளார். ஒரு காட்சியில், பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு சண்டைக்காட்சிக்காக படப்பிடிப்புக்கு செல்லும் ராஜ்கிரண், அங்கு அவருக்குக் கிடைக்கும் ராஜ மரியாதையை எண்ணி மகிழ்வுடன் வீட்டுக்கு வந்து தரையில் அமர்ந்து  அந்தப் பெருமையை தன் மகன் பிரசன்னாவிடம் பகிர்கிறார். அந்த இரு காட்சிகளில், வெளியில் அவருக்கிருக்கும் மரியாதையும், வீட்டில், அவமரியாதை இல்லை எனினும் அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதும் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தில் முழுமையான இயக்குனராக நிற்கிறார் தனுஷ். 

ராஜ்கிரண், வெளியில் நின்று, வேகமாக பாவனைகளை மாற்றி அசர வைக்கும்  நடிகராக இல்லாமல், நிதானமாக உள்ளிறங்கி உணர்வுப்பூர்வமாய் தாக்கம் ஏற்படுத்தும் நடிகராக இருக்கிறார். மகன் திட்டும்பொழுது, பேரனிடம் காட்டும் சிரிப்பு, தொலைபேசியில் அவர்கள் குரல் கேட்டு காட்டும் மகிழ்ச்சி, காலம்  தாண்டிய காதல் என படம் முழுவதும், பவர் பாண்டியாக நம்மை மகிழ வைக்கிறார். பிரசன்னாவுக்கு , நல்ல தோற்றம், நல்ல நடிப்பு. இப்பொழுது அரவிந்த் சாமி, ரகுமான் போன்றவர்கள் பயன்படுத்தப்படுவதைப் போல பின்னாளில் பயன்படுத்தப்படுவார் என்று தோன்றுகிறது. ரேவதிக்கு அழகான கதாபாத்திரம். பேரன், பேத்தியாய் வரும் இருவரும் அழகு, சுட்டி. அனைவரும் ஈர்க்கும் படத்தில், உறுத்தலாக இருப்பது 'பிளாஷ்பேக்' காட்சிகள். தனுஷைக் காண்பது மகிழ்ச்சிதான் என்றாலும் அவ்வளவு நேரமும் நம்மை ஈர்க்கும் 'பவர் பாண்டி' மறைந்து, அந்த அரை மணிநேரம் தனுஷ் தான் தெரிகிறார். மடோனா, வித்யுலேகா ஆகியோரும் அந்த வகையே.

ஷான் ரோல்டனின் இசையில், பாடல்கள் மென்மையாக இருக்கின்றன. இசைக்கருவிகளின் ஆதிக்கம் குறைந்த, அழகான மெட்டுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு பாணியை தனக்கென கடைபிடிக்கிறார்  ஷான்.  சதுரங்கவேட்டையின் ஒரு பாடல், 'ஜோக்கர்' பாடல்கள், 'ப.பாண்டி' பாடல்கள் என இந்த பாணி இசை  ஈர்க்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தனுஷிற்கு எப்பொழுதும் பலமே. 

ப.பாண்டி, ஒரு  குடும்பப் பொழுதுபோக்காக இருப்பதுடன், வயதான  தாய் தந்தையின் எதிர்பார்ப்புகள், அவர்கள் நடத்தப்படும் விதம், அதற்குள்ளான வேறுபாடுகள் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கிறது.   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [6]

Name : Raj Date :4/17/2017 4:32:21 PM
பவர் பாண்டிஅருமை. - கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று கண்டு மகிழ அருமையான படம் பவர் பாண்டி
Name : ஜார்ஜ் Date :4/17/2017 12:17:50 PM
பவர் பாண்டி சூப்பர் படம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.
Name : Muthukumar Date :4/15/2017 5:11:51 PM
பவர் பாண்டி படம் போரடிக்காமல் செல்கிறது. மறுமுறை பார்க்கத்தூண்டும் வகையில் கதை அமைப்பு உள்ளது. சூப்பர். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு நல்ல படம் அமைந்து இருக்கிறது.
Name : ஸ்டாலின் Date :4/15/2017 1:58:15 PM
தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இயக்குனராக முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டிர்கள்.
Name : Karthi Date :4/15/2017 11:11:39 AM
பவர் பாண்டி படம் சூப்பர். குடும்பத்துடன் கண்டு மகிழலாம். இயக்குனராக தனுஷ் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார். வாழ்த்துக்கள்.
Name : செந்தமிழன் Date :4/14/2017 1:20:12 PM
பவர் பாண்டி படம் சூப்பர். குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்.