விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்

ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :15, ஏப்ரல் 2017(16:34 IST)
மாற்றம் செய்த நாள் :9, ஜூன் 2017(18:16 IST)

கடம்பன் - விமர்சனம்

ரு சில நிறுவனங்களின் தொழில் பசிக்கு , அரசும் அதிகாரிகளும் உறுதுணையாகி, காடுகளை  சுரண்டி, அழித்து, ராட்சச  இரும்புக்கைகளால் பூமியின் நரம்புகளை    அறுக்கும் நிலவரத்தைக் கூற முடிவு செய்ததற்கு  இயக்குனர் ராகவாவைப் பாராட்ட வேண்டும். காட்டின் முக்கியத்துவம், அதைத் தொழில் வாய்ப்பாகவே பார்க்கும் நிறுவனங்கள், துணைபுரியும் அதிகாரிகள், ஏமாற்றும் தொண்டு நிறுவனங்களைப்  பற்றி விவசாயம், பாரம்பரியங்கள், இயற்கை வளங்கள்  ஆகியவற்றை நோக்கி   மக்கள்,  மெல்ல விழிப்புணர்வு பெற்றுச் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் தன் படத்தின் மூலம்  கூறியிருப்பது  தேவையானதே.ஆர்யா, அகலமான, உறுதியான உடல், உயரம், தீர்க்கமான பார்வை, சுறுசுறுப்பு, என காடு வளர்த்த இளைஞன் கடம்பனாய் நிமிர்ந்து நிற்கிறார். பல காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. கேத்தரின் தெரசா காட்டிற்கும் கூட்டத்திற்கும் சம்மந்தமில்லாதவராய் இருக்கிறார். காட்டில் வாழும் சிறு கூட்டத்தில்  அவரது உடைகள் மட்டும் உடனிருக்கும் தோழிகளின் உடைகளை விட சற்று பளப்பளப்பாய் இருக்கின்றன. இந்தப் புள்ளியில் இருந்தே இயக்குனர் கதாநாயகியை கதையில் இருந்து  அன்னியப்படுத்திவிட்டார். பச்சையான காட்டிலும் சற்று வறட்சியாகவே செல்லும் முதல் பாதியில், நிழல் தருகிறார் 'ஆடுகளம்' முருகதாஸ். மிரட்டும் வில்லனாகவே இதுவரை வந்த 'சூப்பர்' சுப்பாராயன், பாசமான அப்பாவாக இருக்கிறார்.  ராஜசிம்மனது தோற்றமும் நடிப்பும் மிரட்டலான வில்லன் பாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.  Y.G. மகேந்திரன் - மதுவந்தி கதாபாத்திரங்கள் சுவாரசியம். வில்லன் கூட்டத்தில் வருபவர்கள் யாரும் படத்துக்கு பலம் சேர்க்கவில்லை.

 நல்ல கருத்துகளை சொல்ல வரும் படங்களின் பெரிய பிரச்சனையும், சவாலும் அந்த கருத்துகளை எப்படி  சுவாரசியமான காட்சிகளில்   சொல்வது என்பதே. அதுதான் 'கடம்பனி'ன் மிகப்பெரும் பிரச்சனை.  'சிறு கூட்டமாக காட்டினுள் வாழும் நூறு பேர், அதிகமாக வெளி உலக தொடர்பில்லாதவர்கள்' என்பதே நம் நம்பிக்கையை பெரிதாய் பெறவில்லை. அப்படி வாழ்பவர்களை காட்டும்பொழுது, அவர்களின் வாழ்க்கை முறையோ, பழக்கவழக்கங்களோ தனித்தன்மை வாய்ந்ததாகவோ அல்லது சுவாரசியமாகவோ இல்லாமல் இருப்பது பெரும் குறை.  பேச்சு வழக்கு, தோற்றம் எல்லாம்  சாதாரண கிராமத்துக்காரர்கள் போலத் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன . முதல் பாதியில் வரும் இந்தக் காட்சிகள் நம்மை உள்ளிழுக்கத் தவறுவதால், இரண்டாம் பாதியில் அவர்களுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனைகளும் நம்மை பாதிக்கவில்லை. ஆர்யா செய்யும் சாகசங்கள், 'பாகுபலி', 'ஜங்கிள் புக்' படங்கள் என்றால் சரியாக இருந்திருக்கும். உண்மையாக நிகழ் காலத்தில் நடக்கும் கதைக்கு இந்த சாகசங்கள் மிக அதிகமாக தோன்றுகின்றன. அடுத்ததாக CGI காட்சிகள். CGI என போடாவிட்டாலும் நமக்கே தெரியும் அளவில்தான் இருக்கின்றன. செந்நாய்களுடன் ஆர்யா  சண்டையிடும் அந்தக் காட்சியில் CG வேலையும் சரியில்லாமல் போக, 'ஆர்யா அத்தனை ஆக்ரோஷமாக செந்நாய்களுடன் சண்டையிடுவது ஏன்' என்ற கேள்வியும் எழுகிறது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போடும் சண்டை போல் இல்லாமல், செந்நாய்கள் மேல் கோபம் கொண்டு போடுவது போல இருக்கிறது.  ஒரு மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான வில்லன் நேரடியாக இறங்கி காட்டிற்கு வந்து சண்டையிடுவதும், ஒரு பெரிய கூட்டமே அவருடன் AK-47 போன்ற துப்பாக்கிகளுடன் காட்டுக்குள் வருவதும், காட்டில் தொழிற்சாலை வேலைகள் ஆரம்பிப்பது, இவை அனைத்துமே வெளியே தெரியாமல் , அதிகாரிகள் அளவிலேயே நடப்பது என்பதும் இப்போதைய தமிழ் சினிமா ரசிகர்களை கண்டிப்பாக ரசிக்க வைக்கவில்லை. யானையின் காலில் பாட்டில் குத்தி துடிக்கும் அந்தக் காட்சியும், செந்நாய் காட்சியும் எழுத்தாளர் ஜெயமோகனின் 'யானை டாக்டர்' சிறுகதையை நினைவு படுத்துகின்றன. முதலில் இருந்தே நம்மை கதைக்குள் இழுத்து ஈடுபாட்டை உண்டாகியிருந்தால், இறுதியில் அத்தனை யானைகளுக்கிடையில் ஆர்யா ஓடி வரும் காட்சி உச்சமாக இருந்திருக்கும். ஆனால் அது சாதாரணமாய் கடந்து போகிறது.  

யுவனின் அந்த தீம் இசை சிறப்பு. ஆனால், பாடல்கள் மிகச் சாதாரணமாக இருக்கின்றன. சதிஷ் குமாரின் ஒளிப்பதிவில் காடு ஆங்காங்கே அழகாய் தெரிகிறது. சமகாலத்துக்குத் தேவையான, பொருத்தமான கருத்தைக் கொண்ட படம், வீரியமில்லாமல் விழுந்திருக்கிறது. பெரிதாய் நம்மில் முளைக்கவில்லை. ஆர்யாவின் உழைப்பும் இயக்குனர்  ராகவாவின் கருத்தும் மதிப்பளிக்கப்பட வேண்டியவை.

வசந்த் பாலகிருஷ்ணன்   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :