விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்

கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :15, ஏப்ரல் 2017(18:21 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜூன் 2017(12:28 IST)

சிவலிங்கா - விமர்சனம் 

வெற்றி பெற்ற  மூலக்கதையை, மாற்ற வேண்டிய விதத்தில் மாற்றி 'ஆப்தமித்ரா' ஆக்கி கன்னடத்திலும், பின்   'சந்திரமுகி'யாக ஆக்கி தமிழிலும் மிகப்பெரிய வெற்றியாக்கியவர் இயக்குனர்  பீ.வாசு. கிட்டத்தட்ட அதே போன்ற  ஒரு கதையை மீண்டும் கன்னடத்தில் பெரிய வெற்றியாக்கி, இப்பொழுது  தமிழுக்கும்  கொண்டு வந்திருக்கிறார். சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக மக்கள் சூப்பர் ஸ்டார், மன்னிக்கவும், சின்னக் கபாலி லாரன்சை வைத்து, அதே வெற்றியைப் பெற முயன்றிருக்கிறார். 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளிவரும் முன்பே இந்தப் படமும் முடிந்து விட்டதால், விளைவறியாமல் 'சின்னக் கபாலி' போற்றுதல்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், பட்டங்களால் ஏதுமில்லை, படங்கள் தான் விஷயம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.தனக்கு வசதியான கதைக்களத்தில் மிக சௌகரியமாக விளையாடி இருக்கிறார் இயக்குனர் வாசு. திகில் படங்களின் வழக்கப்படி, கொல்லப்படும் ஒரு நல்லவர், ஆன்மாவாக வந்து, பழிவாங்குகிறார். அதற்கு முன் பயம் காட்டுகிறார். கொலையை துப்பறிய கதாநாயகன் லாரன்ஸ். கலகலப்புக்கு வடிவேலு. கதாநாயகியாக ரித்திகா சிங். பிளாஷ்பேக்குக்கு சக்தி. இவர்களுடன் ராதாரவி, சந்தான பாரதி, VTV கணேஷ் என தேவையான நடிகர்களை வைத்து ஆபத்தில்லாத படத்தைக் கொடுத்திருக்கிறார். லாரன்ஸ் தன்னுடைய பலமான நடனத்தையும், நகைச்சுவை குறும்புகளையும் நன்றாக செய்திருக்கிறார். இவை தான் அவருக்கு இப்பொழுது இருக்கும் ரசிகர்களை பெற்றுத் தந்தது. இனி பார்ப்பவர்களுக்கும் பிடிக்கப் போவது. இப்படியிருக்க, கதையைத் தாண்டி தனக்கு கொடுக்கப்படும் அதீத 'பில்ட்-அப்'களை தொடர்வதும்  குறைப்பதும்  அவரது  விருப்பம். 'இறுதிச் சுற்று', 'ஆண்டவன் கட்டளை' ரித்திகா, நன்றாக ஆடியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். ஆனாலும், இதற்கு மட்டுமா அவர் என தோன்றுகிறது. சக்திக்கு நல்ல கதாபாத்திரம், அவர் வளர்க்கும் புறாவுக்கும்.

நாமெல்லாம்  மிகவும் 'மிஸ்' பண்ணிய  சிறந்த நகைச்சுவை நடிகரான வடிவேலு, 'சிவலிங்கா'வில்    மெல்லத் திரும்பியிருக்கிறார். இடையில் வந்த படங்கள் அவருக்கானவை அல்ல. ஆங்காங்கே சலிப்பூட்டினாலும், படத்தின் நல்ல விஷயங்களில் 'வடிவேலு'வும் ஒன்று. 

தமனின் வழக்கமான பாணி இசை. பாடல்கள் விறுவிறுப்பாய் இருக்கின்றன. திகில் காட்சிகள் பெரிதாய் பயமூட்டுவதாய் இல்லையென்பதால் இசையும் அவ்வாறே. சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவும் குறையில்லாத ஒன்று. 

'சிவலிங்கா' - பெரிய ஆச்சரியமும் இல்லை, மிகுந்த  ஏமாற்றமும் இல்லை.        

 வசந்த் பாலகிருஷ்ணன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :