விமர்சனம்

குலேபகாவலி
 ................................................................
சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :12, நவம்பர் 2017(1:18 IST)
மாற்றம் செய்த நாள் :12, நவம்பர் 2017(1:33 IST)

அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?காய்ந்து வறண்ட நிலத்தின்  பாதையின் வழியே, தண்ணீர் பிடிக்க, காலி குடங்களோடு   இரு சக்கர வண்டியில் செல்லும் குடும்பம்  பெட்ரோல் தீர்ந்து நிற்க, வழியில் வரும் மருத்துவ  அதிகாரி, அவர்களது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றி, அதை புகைப்படம் எடுக்கிறார். அதனை   விளம்பரமாக வெளியிடுகிறார்கள் அதிகாரிகள். எதற்காக விடப்படுகிறதென்றே தெரியாத ராக்கெட், நம் நாட்டிலிருந்து  விண்ணுக்கு செலுத்தப்படுவது தங்கள் வெற்றியென எண்ணி, இனிப்பு கொடுத்து, சாமி கும்பிட்டுக் கொண்டாடுகிறார்கள் அருகாமை கிராம எளிய மக்கள். அரசும் அதிகாரமும் அடையாளமில்லா  மக்களை எப்படிப்  பார்க்கிறார்கள், எளிய மக்கள் அவர்களை எப்படிப்  பார்க்கிறார்கள் என்பதை நேராகச் சொல்கின்றன இந்த இரு காட்சிகள். உலகின் செயற்கைகோள்களையெல்லாம் விண்ணுக்கு அனுப்ப  ராக்கெட் விடும் நாட்டில் மனிதக் கழிவை இன்னொரு மனிதன் தான்  அள்ள வேண்டியிருக்கிறது, அலட்சியமாக விடப்பட்டிருக்கும்  ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்தால் கயிற்றைக் கட்டித் தூக்க வேண்டியிருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியலும், பெருகி வரும் விஞ்ஞானமும், இயங்கி வரும் அரசுகளும் யாருக்கு என்ற கேள்வியை உரக்கக் கேட்கிறது 'அறம்'.

பின்புலமில்லாத எளியதொரு குடும்பத்தில் ஒரு உயிருக்கு ஆபத்து வரும்பொழுது, அதற்கான உதவியை அரசியல் இடையூறுகள் தாண்டி, அறத்தின் பக்கம் நின்று ஒரு அதிகாரி செய்வது தான் படம்.  'மக்கள் தான் அரசாங்கம்னு   நான் நினைக்கிறேன்' என்று சொல்லும் தீர்க்கமும், மக்களின் மேல் அன்பும் நிறைந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி மதிவதனியாக நயன்தாரா.  கலர் கலர் உடைகளும், கவர்ந்திழுக்கும் நடனமும்  இல்லாத இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப நடித்துமுள்ள நயன்தாராவுக்கு பெரிய பூங்கொத்து. கண்டிப்பாக இது நயன்தாராவின் திரைப்பயணத்தில் பதித்திருக்கும் முக்கியத் தடம். தாராளமாக 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கலாம். ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தை என்ற ஒரு விஷயத்தைச் சுற்றி, அவை தோண்டப்பட்ட காரணம், ஒரு குடம்  நீருக்காக மக்கள் படும் பாடு, நீர் மாசுபட்ட காரணம், என மக்கள் அரசியலை 360 டிகிரியில் பேசியிருக்கிறார் இயக்குனர் கோபி நயினார். சர்ச்சைகளைத் தாண்டி வந்து முதல் படத்திலேயே  வென்றிருக்கிறார். இத்தனை அரசியலையும் மதிவதனி என்ற  ஒரு பெண் அதிகாரி வாயிலாக, பேச வைத்திருப்பது இன்னும் சிறப்பு. நயன்தாரா ஒரு புறமிருக்க, ராமச்சந்திரன் துரைராஜ், சுனுலட்சுமி, 'காக்கா முட்டை' விக்னேஷ், ரமேஷ், அந்தப் பெண் குழந்தை என அத்தனை பேரும் இயல்பாக நடித்து, நம் உள்ளே வந்து, பின்னர் அங்கு ஒரு துன்பம் ஏற்படும் போது நம்மையும் பதற வைத்துள்ளனர். ஊர் இளைஞராக  பழனி, எம்எல்ஏ வாக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி என நடிகர்கள் தேர்வும் நடிப்பும் சிறப்பு. ஆழ்துளைகிணற்றின் ஆழத்தையும் உள்ளே குழந்தை அனுபவிக்கும் கஷ்டத்தையும் முழுதாக உணர வைத்திருக்கிறது ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு. வறண்ட பூமியின் வெம்மையைக் கடத்தியிருக்கிறது. அரசியல் பேசும் படம், தரத்தில் குறைவாக இல்லாமல் சிறப்பாக உருவாக உறுதுணையாக இருந்திருக்கிறார் ஓம் பிரகாஷ்.  ஒரே நாளில் நடக்கும் கதை, ஒரு சம்பவத்தை மிக விலாவாரியாக சொல்லும் திரைக்கதை, இந்த நிலையில் சற்றும் தொய்வில்லாமல் தொகுத்திருக்கிறார் ரூபன். ஜிப்ரானின் இசை ஆரம்ப காட்சிகளில் சற்று அதிகாமாகத் தோன்றினாலும், முக்கிய கட்டம் வந்த பிறகு, சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. காட்சிகளுடன் இணைந்து ஒரு த்ரில்லர் உணர்வையும், பின்னர் பாத்திரங்களின் பதைபதைப்பையும் மிக ஆழமாக கொண்டு சேர்த்திருக்கிறார்.

பேச நினைக்கும் அரசியலை ஒட்டு மொத்தமாக ஒரே படத்தில் பேச நினைத்ததும், பரபரப்பான காட்சிகளிடையே சுவாரசியமும் இல்லாமல் அழுத்தமும் இல்லாமல் வரும் தொலைக்காட்சி  விவாத நிகழ்ச்சியும் படத்தின் தடைகள். படம் தொடங்கி முக்கிய பிரச்சனைக்கு வரும் வரை வெவ்வேறு விஷயங்கள் பேசப்பட்டுக்கொண்டே இருப்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி பின்  தெளிகிறது. இறுதியில் மதிவதனி  அரசியலில் நுழைவது போன்ற முடிவு, சற்று அவசரமாக நுழைத்தது போலத் தோன்றுகிறது. சிறு குறைகள் போக, செய்தியாய்க் கடக்கும்  விஷயங்களின் தீவிரத்தை, குழப்பமில்லாத சரியான அரசியலுடன் பேசியிருக்கிறது அறம். 

மக்கள் பிரச்சனைகளை சமரசமில்லாமல் பேசும் படைப்புகள் வரம்!     

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]

Name : G.Madeswaran Date :11/17/2017 11:42:03 AM
"அறம்"-மசாலாத்தனம் இல்லாத அருமையான படம். ராக்கெட் அறிவியல் என்பது ஒரு துறை, அவர்கள் அதனை சிறப்பாக செய்கிறார்கள், ஆழ்துளை கிண்று மூடாமை,தண்ணீர் பஞ்சம் என்பது பொறுப்பற்ற நிர்வாக சீர்கேடுகள்,அதனை சரி செய்யவேண்டியது அத்துறை அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் தான்,வேண்டும் என்றால் அறிவியலின் துணையோடு! ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரோடு இருக்கிறதா என்பதை மேலிருந்து படம் பிடிக்கவும், பேசவும்,பார்க்கவும்,Oxygen கொடுக்கவும் அறிவியல் சாதனங்களும் உதவின!"நயன்தாரா" YES SUPERSTAR -மாஸ்&கிளாஸ்-A1+++++
Name : lokesh Date :11/17/2017 11:28:49 AM
மிகச்சரியான விமர்சனம்.
Name : SELVI Date :11/13/2017 9:31:33 AM
இப்படித்தான் தெரு நாய்கள் பிரச்சினைக்கு அரசுகள் எதுவுமே செய்யாமல் ,தினந்தோரும் மக்கள் நாய்கடிபட்டு அல்லல் படுகிறார்கள்