புத்தம் புதுசு

முதல் முறையாக மூன்று கதாநாயகிகளுடன் ஜெய்
 ................................................................
சதுரங்க வேட்டை விளையாடியவர்கள் வெளியிடும் மன்னர் வகையறா..!
 ................................................................
எனக்கு மத்தவங்களோட எப்பொழுதும் பிரச்சனை வர காரணம்...

மறைந்தார் இசையமைப்பாளர் ஆதித்யன்...!
 ................................................................
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் எட்டுப்பட்டி ராசா
 ................................................................
இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்...சிவகார்த்திகேயன் அதிரடி...!
 ................................................................
முத்த காட்சியில் நடிக்க தயார்...!
 ................................................................
"சிம்புவால் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன்"
 ................................................................
"நான் சொன்னது, நிவின் பாலிக்கு நடந்தது" - 'ரிச்சி' பாடலாசிரியர்
 ................................................................
"விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களால் தான் சிறிய படங்களுக்க
 ................................................................
அன்பு செழியன் மேல் மேலும் ஒரு புகார்...!
 ................................................................
"எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால்...." - 'தீரன்' வெற்றி விழாவில் க
 ................................................................
ஹிப் ஹாப் ஆதி - கோவையின் முகமா?
 ................................................................
அஜித்தும் அரசியலும் !
 ................................................................
இன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி?
 ................................................................
ஊதா கலரில் சங்கமித்த 80 களின் பிரபலங்கள்
 ................................................................
திரிஷாவிற்கு கிடைத்த பதவி...!
 ................................................................
விஜயகாந்தின் மகன் ஏற்படுத்திய புரட்சி
 ................................................................
சர்ச்சைகளுக்கு சவால் விட்ட "ஆன் இன்சிக்னிபிகன்ட் மேன்" படம்
 ................................................................
பிக்பாஸ் ஜூலிக்கு ஆதரவாக பேசி மாட்டிக்கொண்ட பிரபலம்
 ................................................................
இத்தனை வருஷமா நாலு பெண்கள் மட்டும்தானா?
 ................................................................
டிராபிக் ராமசாமியாக மாறும் எஸ் ஏ சந்திரசேகர்
 ................................................................
போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் - நடிகர் கார்த்தி
 ................................................................
இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த் செய்த காரியம்
 ................................................................
மாற்றங்களுடன் மீண்டும் ரிலீசான நெஞ்சில் துணிவிருந்தால்...!
 ................................................................
உலக காமெடி மேதைக்கு மரியாதை செலுத்தும் சார்லி சாப்ளின் 2
 ................................................................
தொடர்ந்து ட்ரெண்டில் கலக்குகிறாள் அருவி...
 ................................................................
ஹரஹர மஹா தேவகியின் அடுத்த படைப்பு ரெடி...!
 ................................................................
புது கெட்டப்புடன் வேற விஷயத்துக்காக தயாராகும் சிம்பு
 ................................................................
மலேசியாவில் அரங்கேறும் நட்சத்திர கலை விழா
 ................................................................
இணையத்தை கலக்கும் லட்சுமி குறும்படம்
 ................................................................
மருத்துவர் அனிதாவின் பெயரில் விஜய் சேதுபதி...
 ................................................................
சூர்யாவுடன் இணையும் கார்த்தி
 ................................................................
ஒளிப்பதிவாளர் ப்ரியன் திடீர் மரணம்...!
 ................................................................
நமிதா திருமண அறிவிப்பு வெளியானது
 ................................................................
மோடியுடன் மோதும் சிம்பு..!
 ................................................................
மெர்சல் படத்தில் சொல்லப்பட்டது 200 சதவீதம் உண்மை...! பொங்கும் நடிகர்
 ................................................................
பீதியை கிளப்பும் தணிக்கைக்குழுவின் புதிய சட்டம்...!
 ................................................................
பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த அறம் இயக்குனர்.
 ................................................................
குரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீடு
 ................................................................
சமூகத்திற்கு செய்தி சொல்லும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் - வைரமுத்து
 ................................................................
விளையாட்டு போட்டிகளுடன் நட்புனா என்னானு தெரியுமா சிங்கிள் டிராக் வெளிய
 ................................................................
என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார் சுசீந்திர
 ................................................................
வித்தியாசமாக அரங்கேறிய மௌனவலை திரைப்படத்தின் பூஜை
 ................................................................
என் எல்லா படங்களிலும் சமூக அக்கறை இருக்கும் - சுசீந்திரன்
 ................................................................
ஷாருக்கானிற்கு இன்று 52 வது பிறந்த நாள்...
 ................................................................
வேலைக்காரனுக்காக 2வது சிங்கள் ரெடி...
 ................................................................
மழையை மதிக்காத விஷால்…
 ................................................................
"விழித்திரு" மூலம் நிலைத்திருக்க முடியுமா? எரிக்கா பெர்னாண்டஸ்
 ................................................................
மக்களிடம் பிடித்ததும், பிடிக்காததும் - ரஜினிகாந்த்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, டிசம்பர் 2017(14:34 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017(14:34 IST)

எனக்கு  மத்தவங்களோட  எப்பொழுதும் பிரச்சனை வர காரணம்... 

சிம்புவின் கண்டுபிடிப்பு!   சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. பன்முகத் திறமைகளை கொண்டவரான நடிகர் சிம்பு இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை 'VTV' கணேஷ் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.   நேற்று, சிம்பு தன் மீது எழுந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் பதிலளித்தார். மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு குறித்தும் மனம் திறந்து பேசுகையில்.... 

"இறைவனுக்கு நன்றி, சந்தானத்தை நான் சினிமாவில் அறிமுகப்படுத்தவில்லை. அவரோட திறமைக்கு என் மூலமா அங்கீகாரம் கிடைச்சிருக்கு. நான் தான் அவரை அறிமுகப்படுத்துனேனு இனியும் சொல்லவேணாம். மேலும் என் நண்பர் சந்தானம் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக தான் இந்த படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டேன். அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன் என்றார். நான் இன்னிக்கு ஒரு மியூசிக் டைரக்டரா இருக்கேன்னா அதுக்கு முதல் காரணம் யுவன் ஷங்கர் ராஜாதான். அவர் தான் என்னுடைய இசை குரு, நண்பர், பிரதர் என சொல்லிக்கொண்டே போகலாம், பல நேரங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர். அதை விட என்னை புரிந்துக்கொண்டவர், பலமுறை அவரிடம் நான் கேட்டுள்ளேன், உங்கள் ஜாதகம் தாருங்கள், அதே ஜாதகத்தில் தான் நான் பெண் பார்க்க வேண்டும் என்று." பின்பு நடிகர் தனுஷை பற்றி பேசுகையில்...

"தனுஷ்க்கு ஏதாவது பிரச்சனைனா  சிம்புவ இழுக்குறது, சிம்புவுக்கு ஏதாவது பிரச்சனைனா தனுஷை இழுக்குறதும் இங்கே பழக்கமா இருக்கு. எதிரிகள்னு சொல்லப்படுற ரெண்டு பேரும் வளர்ந்து உயரத்துக்கு போவோம். காதல் கொண்டேன் படம் சிறப்புக் காட்சி  பார்க்கும்போது என் பக்கத்தில் செல்வராகவன் உக்காந்திருந்தார். படம் சூப்பர் ஹிட்டுனு சொன்னேன். காதல் கொண்டேன் படத்தை ஆல்பர்ட் தியேட்டரில்  தனுஷ் கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கேன். எல்லோரும் எனக்கும் தனுஷுக்கும் எனக்கும் போட்டி இருக்குனு சொல்லுவாங்க. ஆனா, எங்களுக்குள்ள அன்பு இருக்கு. அது இன்னைக்கும் இருக்கு. என்னைக்கும்  இருக்கும். எங்களுக்கு இடையில நிறைய பேர் நிறைய விஷயங்களை பண்ணியிருக்காங்க. ஆனா, அதையெல்லாம் மீறி இரண்டுபேரும் அன்போடு இருக்கோம்."பின்னர், 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசினார்... 

"என்  மீதும் சில தவறுகள் இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு ஒரு முறை உள்ளது. அவர்கள் செய்தது சரியல்ல. நான் நல்லவன் என்று சொல்லவில்லை. நடந்தது நடந்துவிட்டது அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி அப்படி நடக்காமல் பார்த்து கொள்கிறேன். ஏன் எனக்கும்  மத்தவங்களுக்கும்  எப்பவும் பிரச்சனைனு இப்போது சொல்கிறேன். அதை இப்போது தான் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. அதனால் தான் இப்போது சொல்கிறேன், எல்லோரும் தங்களது வாழ்வில் மாதா,பிதா,குரு,தெய்வம் என வரிசை படுத்தி அதற்கு ஏற்றவாறு அவர்களது வாழ்வை வாழ்வர். அது தவறல்ல நானும் அதையே தான் பின்பற்றுகிறேன் ஆனால் தெய்வம்,குரு,பிதா,மாதா என்ற வரிசையில் பின்பற்றுகிறேன். இதனால் தான் இந்த உலகத்திற்கும் எனக்கும் பல விஷயங்களில் ஒத்து போகவில்லை. இருந்தாலும் இது தவறுதான். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் சிறு வயதிலிருந்தே இப்படியே பின்பற்றி வளர்ந்து விட்டேன். அதனால் என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. 

மணிரத்னம் இப்போதும் நான் படத்தில் இருக்கிறேன் என்று தான் கூறிவருகிறார். அவருக்கு என் மீது ஏன் அவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அவரும் உங்களை போல எனது ரசிகரோ என்னவோ...  20-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறியிருக்கிறார். அந்த படத்தில் நடிப்பதற்காகவே தன் உடம்பை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். இருந்தாலும் தொப்பையை  குறைப்பது  சற்று கடினமாக இருக்கிறது. விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன்" என்றார். 

- சந்தோஷ் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :